கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரு கதைகளுக்கு இடையே (கவிதை -40 பாகம் -4)

This entry is part 16 of 32 in the series 24 ஜூலை 2011

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

நீ இறைவனின் தோழ னாயின்
நெருப்பே உனக்கு நீர் !
விட்டில் சிறகுகளை
ஆயிரக் கணக்கில் வைத்திட நீ
விரும்ப வேண்டும் !
இரவு முழுவதும் ஒவ்வோர் சிறகாய்
எரித்துப் பொசுக்கத்
தருணம் கிடைக்கும் உனக்கு !
விட்டில் பூச்சி ஒளியில் மயங்கி
விரைந்து செல்லும்
விளிக்கும் தீயை நோக்கி !
நெருப்பைக் கண்டு
நீ ஒளிநோக்கிச் செல்வாய் !
இறைவன் தீயின் வடிவம்
நெருப்பு உலகை எரிப்பது !
நீர் பாதுகாப்பது !

++++++++++++

நெருப்பும் நீரும் ஒன்றை ஒன்று
உருவம் மாற்றுவது !
நீர்போல் உள்ளது எரியும் !
தீ போல் தெரிவது
களிப்பு அளிப்பது
குளித்திட !
குவளை அரிசியைப்
சின்னஞ் சிறு
புழுக்களாய் மாற்றுவான்
மந்திர வாதி !
இறைபோல் புரியும்
இவ்விதச் சூழ்ச்சிகள் ஏராளம் !
சம்பிர தாயச்
சடங்கு களை விடவும்
இறையின்
இன்ப துன்ப மாற்றம்
இனியது !
அறிவுத் தீ நிலைத் திருப்பது
நீரும் நெருப்பும்
முகக் கண்ணாடியில் தெரியும்
எதிர்பா ராத
பிம்ப வடிவங்கள் !

(தொடரும்)

***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (July 19, 2011)

Series Navigationமுடிவை நோக்கி…ஜென் – ஒரு புரிதல் பகுதி 3
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *