கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மீட்சி – The Return (Love & Equality) (கவிதை -47 பாகமும் -2)

This entry is part 19 of 47 in the series 31 ஜூலை 2011

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

“என் எளிய தோழனே ! துயரை மிகுந்து உண்டாக்கும் வறுமை மட்டுமே நியாய அறிவுக்கு வழிகாட்டும் ஆதாரம் என்றும், வாழ்க்கை முறையை உணர்விக்கும் புரிதல் என்றும் நீ நம்பினால் உன் இனச் சந்தையோடு நீ திருப்தி அடைவாய்.

செல்வத்தை நிரம்பச் சேமிக்கும் சீமான்களுக்கு நியாய அறிவைப் (Knowledge of Justice) பற்றிச் சிந்திக்க நேரம் கிடைப்பதில்லை.”

கலில் கிப்ரான் (அன்புமயமும் சமத்துவமும்)

தாரணியில் நாம் அனைவரும்
சகோதர சகோதரிகள்
காரணம் மனித நேயமே !
புனித ஆன்மா ஒன்றின்
புத்திரர் நாமெல்லாம் !
பிறப்பில் சமமானவர் யாவரும்
ஒரே களிமண் ணில்
உருவாக்கப் பட்டவர் !

++++++++++++

விளக்குப் பாதையில் நீவீர் யாவரும்
எனக்குத் துணைவராய்
இங்கிருக்கிறீர் !
மறைந்துள்ள மெய்ப்பாடுகளின்
உட் பொருளைப்
புரிந்து கொள்ள எனது
உதவி கிடைக்கும் !
உனது சத்திய வாழ்வுக்காக
உன்னை நேசிக்கிறேன்
உன் அறிவி லிருந்து அது
உதிப்பதால் !

++++++++++++++

உனது மெய்க் கோட்பாடு
எனது மெய்க் கோட்பாடைச் சந்தித்து
ஒருங்கே கலந்திடும்
பூக்களின் நறுமணம் போல் !
இரண்டும் இணைந்து ஒன்றாகி
அன்பிலும், அழகிலும்
நிலைப்பாகி
நிரந்தரச் சத்திய மாகும்
முழுத் தோற்றமாய் !
நீயும் நானும் பகிர்ந்து கொள்ளும்
இந்த மனித இனம்
பாயும் வழி நெடுவே
பறை சாற்றும்
மலைகளின் இரகசி யத்தை !
அலைகடல் முற்றத் துக்கு
இசைக் கீதம் பாடிச் செல்லும்
இனிய நதி ஓட்டம் !

தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (July 26, 2011)

Series Navigationகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இசைக் கீதம் (கவிதை -41)கோவி நேசனின் ‘சிறுவர் அரங்க கோலங்கள்’
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *