கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மீட்சி – The Return (Love & Equality) (கவிதை -47 பாகம் -3)

This entry is part 41 of 41 in the series 7 ஆகஸ்ட் 2011

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

“வாழ்க்கையைப் புரிந்து கொள்வது பற்றி நான் கூறுவது : திறமை மிகுந்தவன் புகழ், ஆதிக்க சக்தியைத் தேடுவதிலும் சத்தியப் பாதையில் நேராக நடக்க ஆர்வமோடு செல்கிறான்.

ஆதலால் நீ களிப்புறு என் எளிய தோழனே ! காரணம் நீதான் நியாயத்துக்கு வாசல் ! நீதான் வாழ்க்கைக்கு நூல் ! ஆதலால் திருப்தி அடைவாய் ! ஏனெனில் உன்னை மேற்பார்வை செய்து ஆள்பவரின் நேர்மைக்கு நீதான் மூல கர்த்தா ! உனக்கு வழிகாட்டுவோர் பூரண நெறியைத் தாங்கும் தூண் நீ !”

கலில் கிப்ரான் (அன்புமயமும் சமத்துவமும்)

கலில் கிப்ரான் (அன்புமயமும் சமத்துவமும்)

++++++++++++

அறிவு என்பது விளக்கின் ஒளி
வாழ்வின் உயிர்க் கனலைச்
சூழ்ந்து வருவது !
பகிர்ந்து கொள்ளலாம் அறிவை
முகர்ந்து செல்பவர் !
வாழ்வைக்
காணவும் ஆன்மாவால்
பேணவும் முடியும்!
சுற்றியுள்ள உலகை
கற்றுக் கொள்ள முடியும்
மற்றும் அதன் காரணத்தைத்
தெரிந்து கொள்ள
முடியும் !

++++++++++++++

நாம் பகிர்ந்து கொள்ளும்
ஆன்மா ஓர்
புனிதத் தீப்பந்தம்
நீல நிறம் கொண்டது !
பசுமைச் செடிகளை
வரட்சி செய்து
எரித்து விடுவது !
புயலோடு வளர்வது !
ஒளிமயம் ஆக்குவது
தெய்வப் பெண்ணின்
திரு முகத்தை !

++++++++++++++++

நேசிக்கும் போது
நேசம் நம்மிட மிருந்து
பிறப்ப தில்லை !
நேசம் நமக்காக
எழுவது மில்லை !
களிப்ப டைந்தால்
நமது களிப்பு
நம்முள்ளே உதிப்ப தில்லை !
வாழ்க்கையி லிருந்து
எழுவது !
வேதனை அடையும் போது
காயத்தி லிருந்து
வருவ தில்லை வலி !
இயற்கை நெஞ்சிலிருந்து
எழுந்து வருவது !

(தொடரும்)
+++++++++++++

தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (August 3, 2011)

Series Navigationசமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 43
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *