மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
“நீ செல்வந்தருக்காக ஊன்றும் உறுதியின் விளைவுகளை எதிர்காலத்தில்தான் நீ அறுவடை செய்வாய். ஏனெனில் இயற்கை நியதிப்படி அனுப்பியவை யாவும் திருப்பிவரும் தமது மூல இடத்துக்கு ! நீ பட்ட துயரங்கள் களிப்பிடத்துக்குத் திரும்பிவரும், மேலுலக விதிப்படி. எதிர்காலத்தின் பல பிறவிகளில் நேசம், சமத்துவம் ஆகிய இரண்டால் கற்ற பாடங்கள் துயரம், வறுமை என்பது தெரியவரும்.”
கலில் கிப்ரான் (அன்பு மயமும் சமத்துவமும்)
“என் ஆத்மா உபதேசித்து
எனக்குக் காட்டும் :
குட்டை யனை விட
நான் நெட்டையன் இல்லை !
நெட்ட யனை விட
நான் குட்டையன் அல்லன் !
ஆத்மா
உபதேச் சிக்கும் முன்பு
மனித இனம்
இருவித மாய்த்
தெரிந்த தெனக்கு ! நான்
பரிதாபப் படும்
பலவீன மானிடம் ஒன்று !
அடுத்தது
நான் பின்செல்லும்
அல்லது வெறுத்திடும்
வலுத்த மானிடம் !
+++++++++++
இப்போது நான்
கற்றுக் கொண்டது :
இரண்டும் நானாக இருந்து
ஒரே மூலப் பொருளில்
உண்டான தென்று !
என் பூர்வீகம்
அவரது
வழித் தோன்றல் !
என் உள்ளுணர்ச்சி
அவரது உள்ளுணர்ச்சி !
என் மனப் பூர்த்தி
அவரது மனப் பூர்த்தி !
என் புனிதப் பயணம்
அவரது புனிதப் பயணம் !
++++++++++++
அவர் பாபம் செய்தால்
நானும் ஒரு பாபிதான் !
செம்மை யாக அவர் செய்தால்
பெருமை கொள்பவன்
நானும் !
அவர் எழும் போது
நானும் எழுபவன் ! அவர்
சோம்பிக் கிடந்தால் நானும்
தூங்கிக் கிடப்பேன் !
+++++++++++
ஆத்மா சொல்லும் என்னிடம் :
ஏந்திச் செல்லும்
விளக்கு
உன்னுடைய தில்லை ! நீ
பாடி வரும் பாடல்
உன் இதயத் துள்ளே
உருவாக வில்லை !
விளக்கை நீ சுமந்தாலும்
ஒளி உனக்கில்லை !
நாண்கள் கோர்த்தி ருந்தாலும்
வீணை வாசிப்போன்
இல்லை நீ !
++++++++
உபதேசிக்கும் என் ஆத்மா
உரைத்தது அதிகம்
எனக்கு !
உனக்கும் அதே அளவு
உபதே சிக்கும்
உன் ஆத்மா அது போல் !
ஏனெனில்
நானும் நீயும் ஒன்று !
(முற்றும்)
+++++++++++++
தகவல் :
1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)
2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)
3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)
4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)
5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)
For further information:
The Prophet By Kahlil Gibran :
http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm
Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm
*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (September 22, 2011)
- ரமணி கவிதைகள்
- பேசும் படங்கள் ::: நதியோர நகரம், நதி அழிக்கும் கொடூரம்…
- மாயங்களின் யதார்த்த வெளி
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 9
- பந்தல்
- Nandu 1 – அல்லிக் கோட்டை
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! இரட்டைப் பரிதிகளைச் சுற்றும் வியப்பான ஓர் அண்டக் கோள் கண்டுபிடிப்பு. (கட்டுரை : 75)
- எனது இலக்கிய அனுபவங்கள் – 17 எழுத்தாளர் சந்திப்பு – 4. (மௌனி)
- இரவை வென்ற விழிகள்
- இந்திரனும் அருந்ததிராயும்
- பிசாசின் வைத்தியரிடம் தற்செயலாகச் சென்ற பயணம்
- பாரதிதாசனும் பட்டுக்கோட்டையாரும்
- மின்சாரக்கோளாறு
- சன்மானம்
- கனவுக்குள் யாரோ..?
- அந்தரங்கம் – இந்தி மொழிச் சிறுகதை
- கடைசி இரவு
- இறப்பு முதல், இறப்பு வரை
- ஜென் ஒரு புரிதல் – பகுதி 12
- கடவுளிடம் டிஷ்யூம்-டிஷ்யூம்
- பசி வகை!
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காதலராய் உள்ள போது (மெக்காவை நோக்கி) (கவிதை -49)
- எடை மேடை
- ஒரு விதையின் சாபம்
- சந்திப்பு
- தமிழர் கலாச்சார மீட்டெடுக்கும் முயற்சிக்கான விண்ணப்பம்
- எஸ்டிமேட்
- (77) – நினைவுகளின் சுவட்டில்
- மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம்
- புராதனத் தொடர்ச்சி
- சொன்னேனே!
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மனிதரின் மந்திரி (A Councellor of Men) (கவிதை -48 பாகம் -6)
- மரண தண்டனை தடைசெய்யபட வேண்டுமா? கூடாதா? மாணவர்கள் என்ன சொல்கிறார்கள்
- தற்காலப் பார்வையில் திருக்குறள்
- முன்னணியின் பின்னணிகள் – 6 சாமர்செட் மாம்
- பஞ்சதந்திரம் தொடர் 10 சிங்கமும் முயலும்
- நவீனத்துவம்
- இலக்கியவாதிகளின் அடிமைகள்
- சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் – 47
- ஆஸ்திரேலியாவில் தமிழ்மொழி கற்பித்தல் – நூல் அறிமுகம் – சு.குணேஸ்வரன்
- இஸ்லாமா அல்லது மதசார்பற்ற மனிதநேயமா?