கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) திருமணப் பாதையில் ! (கவிதை – 50 பாகம் -3)

This entry is part 46 of 53 in the series 6 நவம்பர் 2011


மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

“எனக்கு விரிந்த அறிவும், கூரிய நீதித் திறனும் நீடித்த அனுபமும் இல்லாமல், மனிதருக்குப் போதனையோ ஆலோசனையோ கூற அருகதை அற்றவன்.”

கலில் கிப்ரான் (ஞானியின் பொன்மொழிகள்)

+++++++++++

திருமணப் பாதையில் !

காதலியின் விழிகள் முதலில் வீசும்
ஓரப் பார்வை
வாழ்க்கைக் கீதத்தின்
ஆரம்ப நோக்கு !
அதுவே முதல் நாடக அங்கம்
மனித குலத்துக்கு !
கடந்த கால
அதிசயத் துக்கும்
எதிர்கால ஒளிமயத்துக்கும்
இடையே பின்னிடும்
இனிய பிணைப்பு !
உணர்ச்சியின் மௌனத் துக்கும்
அதன் கீதத்துக்கும்
இடையே கட்டும் சங்கிலி !

நான்கு வாயிதழ்கள்
சேர்ந்து
எழுப்பிடும் ஒரு குரல் !
அது நெஞ்சுக்கு அறிவிக்கும்
அரச பீடம் !
அரசனைக் காதலித்து
முடிசூட்டும் ! அது
மந்திர அதிர்வின் துவக்கம்
பளு எடை பார்க்கும்
உலகி லிருந்து விடுத்துக்
காதலரைத்
தூக்கிச் செல்லும் தெளிந்த
கனவு உலகுக்கு !

(தொடரும்)

+++++++++++++

தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (November 2, 2011)

Series Navigationபெருநதிப் பயணம்கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) மீட்டெழுச்சி நாள் (The Resurrection Day)) (கவிதை -51 பாகம் -5)
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *