கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) மீட்டெழுச்சி நாள் (The Resurrection Day)) (கவிதை -51 பாகம் -6)

This entry is part 38 of 41 in the series 13 நவம்பர் 2011

                                                                                
ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் 
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா



இம்மாதிரி தான் 
இளங் காளை ஒருவன் 
தேடி வருகிறான் 
ஒரு குரு நாதரை நோக்கி !
அது போன்று தான் 
சேய் ஒன்றும் 
தாய் முலையில் 
வாய் வைக்கப் போகும் 
தன் ரகசியத் தாகம் 
அறியாது 
ஆயினும் தலை
தானாகத் 
திரும்பிக் கொண்டு !


மனித இனம்
படிப் படியாய் 
வழி வழியாய் 
புலம் பெயர்ந்து 
அறிவு ஞானம் 
வளர்ச்சி அடைந்து 
வருகுது ! 
கனவுக்கு வழிகாட்டி
உறங்கிப் போய் 
விழுந்தாலும் 
விழிப்பு இருக்கும் 
இதயத்தின் உள்ளே !
நாளடை விலே 
நம்மை அது வியப்பில் 
பின்னோக்கித் 
தள்ளும் 
நாம் யாரென்று அறியும்
சத்தியத் துக்கு !
 

(முற்றும்)

***************
மீட்டெழுச்சி நாள் :  The Resurrection Day

***************
தகவல் :

1. Holy Fire - Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi's Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi - Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (November 9, 2011)

Series Navigationஇதுவும் அதுவும் உதுவும் – 4இதுதான் உலகமென
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *