ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 6) எழில் இனப் பெருக்கம்

This entry is part 38 of 40 in the series 12 பிப்ரவரி 2012

மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதி யிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப் தியேட்டர் (Globe Theatre) மூலம் தெளிவாகி விட்டது. அந்த ஆண்டில்தான் அவரது ஈரேழ்வரிப் பாக்கள் தொகுப்பும் முதன்முதலில் வெளியிடப் பட்டது. ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் ஆங்கில மொழியில் வடிக்கப் பட்டுள்ள காதற் கவிதைகள். அவை வாலிபக் காதலருக்கு மட்டுமின்றி அனுபவம் பெற்ற முதிய காதலருக்கும் எழுதியுள்ள ஷேக்ஸ்பியரின் ஒரு முதன்மைப் படைப்பாகும். அந்தக் காலத்தில் ஈரேழ்வரிப் பாக்கள் பளிங்கு மனமுள்ள அழகிய பெண்டிர் களை முன்வைத்து எழுதுவது ஒரு நளின நாகரிகமாகக் கருதப் பட்டது. ஷேக்ஸ்பியரின் முதல் 17 பாக்கள் அவரது கவர்ச்சித் தோற்ற முடைய நண்பனைத் திருமணம் செய்ய வேண்டித் தூண்டப் பட்டவை. ஆனால் அந்தக் கவர்ச்சி நண்பன் தனக்குப் பொறாமை உண்டாக்க வேறொரு கவிஞருடன் தொடர்பு கொள்கிறான் என்று ஷேக்ஸ்பியரே மனம் கொதிக்கிறார். எழில் நண்பனை ஷேக்ஸ்பியரின் ஆசை நாயகியே மோகித்து மயக்கி விட்டதாகவும் எண்ணி வருந்துகிறார்.. ஆனால் அந்த ஆசை நாயகி பளிங்கு மனம் படைத்தவள் இல்லை. அவளை ஷேக்ஸ்பியர் தன் 137 ஆம் ஈரேழ்வரிப் பாவில் “மனிதர் யாவரும் சவாரி செய்யும் ஒரு வளைகுடா” (The Bay where all men ride) – என்று எள்ளி இகழ்கிறார்.

அவரது 20 ஆவது ஈரேழ்வரிப் பாவின் மூலம் அந்தக் காதலர்கள் தமது ஐக்கிய சந்திப்பில் பாலுறவு கொள்ளவில்லை என்பதும் தெரிய வருகிறது. ஐயமின்றி ஷேக்ஸ்பியரின் ஈரேழு வரிப்பாக்கள் அக்கால மாதரின் கொடூரத்தனத்தையும், வஞ்சக உறவுகளைப் பற்றியும் உணர்ச்சி வசமோடு சில சமயத்தில் அவரது உடலுறவைப் பற்றியும் குறிப்பிடுகின்றன ! ஷேக்ஸ்பியரின் நாடக அரங்கேற்ற மும் அவரது கவிதா மேன்மையாகவே எடுத்துக் கொள்ளப் படுகிறது. அவரது முதல் 126 ஈரேழ்வரிப் பாக்கள் தனது நண்பன் ஒருவனை முன்னிலைப் படுத்தி எழுதப் பட்டவையே. மீதியுள்ள 28 பாக்கள் ஏதோ ஒரு கருப்பு மாதை வைத்து எழுதப் பட்டதாக அறியப் படுகிறது. இறுதிப் பாக்கள் முக்கோண உறவுக் காதலர் பற்றிக் கூறுகின்றன என்பதை 144 ஆவது பாவின் மூலம் அறிகிறோம். ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்களில் சிறப்பாகக் கருதப்படுபவை : 18, 29, 116, 126 & 130 எண் கவிதைகள்.

ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் எந்த ஒரு சீரிய ஒழுங்கிலோ, நிகழ்ச்சிக் கோர்ப்பிலோ தொடர்ச்சியாக எழுதப் பட்டவை அல்ல. எந்தக் கால இணைப்பை ஓட்டியும் இல்லாமல் இங்கொன்றும், அங்கொன்றுமாக அவை படைக்கப் பட்டவை. நிகழ்ந்த சிறு சம்பவங்கள் கூட ஆழமின்றிப் பொதுவாகத் தான் விளக்கப் படுகின்றன. காட்டும் அரங்க மேடையும் குறிப்பிட்டதாக இல்லை. ஷேக்ஸ்பியர் தனது நண்பனைப் பற்றியும் அவனது காதலியின் உறவைப் பற்றியும் எழுதிய பாக்களே நான் தமிழாக்கப் போகும் முதல் 17 ஈரேழ்வரிப் பாக்கள். இவற்றின் ஊடே மட்டும் ஏதோ ஒருவிதச் சங்கிலித் தொடர்பு இருப்பதாகக் காணப் படுகிறது. ஷேக்ஸ்பியர் தனது பாக்களில் செல்வீக நண்பனைத் திருமணம் புரியச் சொல்லியும் அவனது அழகிய சந்ததியைப் பெருக்கி வாழ்வில் எழிலை நிரந்தரமாக்க வேண்டு மென்றும் வற்புறுத்து கிறார். ஆதலால் ஷேக்ஸ்பியரின் முதல் 17 ஈரேழ்வரிப் பாக்கள் “இனப் பெருக்கு வரிப்பாக்கள்” (Procreation Snnets) என்று பெயர் அளிக்கப் படுகின்றன.

****************

(ஈரேழ் வரிப்பா – 6)

பருவத்தின் பிள்ளைகள்

முறிந்த குளிர் காலம் அழிக்க வேண்டாம்

உனது வேனிற் பருவம் சேயாக்கும் முன்பு !

கர்ப்பிணி ஆக்கு ஒருத்தியை பொக்கிசம் ஓரிடத்தில் !

உன் அழகின் அமுது சேய், உன்விந்து வீணாகும் முன்

பணத்தை உவந்து கடன்கொடு வருவாய் பெருக்க !

கடனாளி மகிழ்வான் விழையும் கடன் கிடைத்தால்,

உன்போல் மறு பிரதி பதிப்பது உனக்கது பரிசு !

பத்துச் சேய்கள் பிறந்தால் மெத்தக் களிப்புனக்கு !

ஈரைந்து சிசுக்கள் தங்கின் சந்ததி பெருகும் உன்போல்

மரணம் என் செய்ய முடியும் நீயே மரித்தால்

வருமரபில் உனை வாழ வைத்து விட்டு ?

சுயத் தணிப்புச் சுகம் வேண்டாம், சுந்தரன் நீ

மரணம் வென்றால் புழுக்கள் உனக்குச் சந்ததி !

+++++++++++++

Sonnet : 6

Then let not winter’s ragged hand deface

In thee thy summer, ere thou be distill’d:

Make sweet some vial; treasure thou some place

With beauty’s treasure, ere it be self-kill’d.

That use is not forbidden usury,

Which happies those that pay the willing loan;

That’s for thyself to breed another thee,

Or ten times happier, be it ten for one;

Ten times thyself were happier than thou art,

If ten of thine ten times refigured thee:

Then what could death do, if thou shouldst depart,

Leaving thee living in posterity?

Be not self-will’d, for thou art much too fair

To be death’s conquest and make worms thine heir.

++++++++++++

Sonnet Summary : 5

This and the following sonnet are written as a pair.The poet laments the progress of the years, which will play havoc with the young man’s beauty. Human life is like the seasons, spring, summer, autumn’s maturity and fruition, followed by hideous winter. Nothing is left of summer’s beauty except for that which the careful housewife preserves, the essence of roses and other flowers distilled for their perfume. Other than that there is no remembrance of things beautiful. But once distilled, the substance of beauty is always preserved. therefore the youth should consider how his beauty might be best distilled.

Summary of Sonnet : 6

Sonnet 6 continues the winter imagery from the previous sonnet and furthers the procreation theme. Winter, symbolizing old age, and summer, symbolizing youth, are diametrically opposed. The theme of the previous sonnet, that summer’s beauty must be distilled and preserved, is here continued. The youth is encouraged to defeat the threatened ravages of winter by having children. Ten children would increase his happiness tenfold, since there would be ten faces to mirror his. Death therefore would be defeated, since he would live for ever through his posterity, even if he should himself die. He is much too beautiful to be merely food for worms, and must be encouraged not to be selfish, but to outwit death and death’s conquering hand.

++++++++++++++++++++

Information :

1. Shakespeare’s Sonnets Edited By: Stanley Wells (1985)

2. http://www.william-shakespeare.info/william-shakespeare-sonnets.htm (Sonnets Text)

3. http://www.sparknotes.com/shakespeare/shakesonnets/section2.rhtml (Spark Notes to Sonnets)

4. http://www.gradesaver.com/shakespeares-sonnets/study-guide/ (Sonnets Study Guide)

5. http://www.gradesaver.com/shakespeares-sonnets/study-guide/short-summary/ (Sonnets summary)

6. The Sonnets of William Shakesspeare By :Lomboll House (1987)

+++++++++++++

S. Jayabarathan (jayabarat@tnt21.com) Febuary 8, 2012

Series Navigationபஞ்சதந்திரம் தொடர் 30- முட்டாள் நண்பன்அடை மழையில் நனையும் ஞாபகங்கள் – வளவ.துரையனின் “விடாததூறலில்” கவிதைத் தொகுப்பை முன்வைத்து
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Comments

 1. Avatar
  jayashree shankar says:

  பெருமதிப்பிற்குரிய கவிஞருக்கு,

  ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள்….உயர்ந்த கருத்துக்களை மிக எளிமையாக மொழியாக்கம் செய்தவிதம் அற்புதம்.ஷேக்ஸ்பியரை அனைவருக்கும் எடுத்து செல்லும் உங்கள் பணி சிறப்பானது…
  ஜெயஸ்ரீ ஷங்கர்.
  சிதம்பரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *