ரகசிய சுனாமி

0 minutes, 0 seconds Read
This entry is part 27 of 46 in the series 5 ஜூன் 2011

என்னுள்ளே உறைந்து
என்னுடன் இறந்துவிடும்
ரகசியங்கள் பனிக்கட்டிகளாய்..

பென்குவின்கள்
வழுக்கும் பாறையில் விளையாடி
மீன் பிடித்துண்ணும்..

சங்குகளுக்குள்ளும்
சிப்பிகளுக்குள்ளும் நுழைந்து
மென்தசைகள் சுவைத்து

ஆக்டோபஸ்களும்
ஜெல்லி மீன்களும்
இறுகப்பிடித்துறிஞ்ச

கடலோடியாய் அலைகளுள்
புணர்ச்சிக்குப் பின்னான
தளர்ந்த அயர்ச்சியில்

கரையோர நண்டுகள்
மண்கிளறி அகலக்காலிட்டு
பக்கம் பக்கமாய் ஓட..

கால்நனைத்துக் காத்திருக்கும்
எனை விழுங்க வருகிறது
ஆழிப் பேரலை அரவத்துடன்..

ஆலிலையில் நீ பிழைக்க
சுருட்டிச் செல்கிறது
நீர்ப்பாய் என்னை..

Series Navigationதவிர்ப்புகள்மௌனம்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *