கோவிந்த் பகவான் புளித்த மாவாய் பெரிய சைஸ் இட்லி மாவு குண்டானுக்குள் நொதித்துக் கிடக்கிறது காலம். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு ஆழாக்காய் பெரிய சைஸ் இட்லி குண்டானுக்குள் காலத்தை ஊற்றி காலத்தை அவிக்கிறாள் ஒரு மூதாதி. வெந்து தணிந்த காலத்தை தன் சுருக்குப்பையில் முடிந்து காலத்தின் மற்றுமொரு ஆழாக்கை அவிக்கத் தொடங்குகிறாள் அந்தக் கிழட்டு மூதாதி. காலம் பதுக்கி அடைக்கப்பட்ட சுருக்குப்பைகள் பெருமலையென குவிந்து கிடக்கிற அந்தக் கொட்டகையின் கதவிடுக்கில் கசிந்தபடி இருக்கிறது இப்பிரபஞ்சத்தின் சபிக்கப்பட்ட காலம். […]
ரோகிணி கனகராஜ் தன்மயக்கம் கொண்டு எனக்குள்ளே எழுந்து ஆடுகிறது சர்ப்பம் ஒன்று… அதனை அடக்கியாளும் மகுடியும்கூட என் கையில்தான்…. ஒருநாள் மகுடியை உடைத்தெறிந்து வீசினேன் அது ஒரு தாழம்புக்காட்டைச் சென்றடைந்தது… எனக்குள்ளே இருந்த சர்ப்பமும் வெளியேறி தாழம்புக்காட்டில் தஞ்சம் புகுந்தது… நான் இப்போது பியானோ வாசிக்கக் கற்றுக் கொள்கிறேன்…. சர்ப்பத்தையும் மகுடியையும் நான் தேடுவதேயில்லை… அவை வேறு யாரிடத்திலாவது இருக்கக்கூடும்….
காலச்சுவடு பதிப்பகம் கண்ணன் சந்திப்பு – ஜூன் 8, 2023 கனக்டிகட் மானிலம் Milford நகரில் காலச்சுவடு இதழ் ஆசிரியர் மற்றும் பதிப்பாளர் கண்ணனுடன் ஒரு சந்திப்புநிகழவுள்ளது. நாள் – ஜூன் 8, 2023 நேரம் – மாலை 6 மணி இடம் மற்றும் இதர விபரங்களுக்கு Editor@thinnai.com மின் அஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
ஆர் வத்ஸலா சேர்த்து வைத்திருக்கிறேன் மூன்று வருடங்களாக தீபாவளிக்கு பொங்கலுக்கு உன் பிறந்த நாளுக்கு என் பிறந்த நாளுக்கு நமது மணநாளுக்கு எப்போதும் போல் நம்மிருவருக்கும் உடைகள் வாங்கித் தனித் தனி பெட்டிகளில் அவை நிரம்புவதற்குள் வந்து விடுவாய் நீ எனக்குத் தெரியும் நிரம்பாவிட்டாலும்… சொல்லி விடுகிறேன் இப்போதே.. முடிந்து வைத்துக் கொள் வீர வணக்கம் செலுத்திய பின் உன் தேகத்திலிருந்த உரித்தெடுக்கப் பட்ட உன் சீருடைக்கு இவற்றில் இடமில்லை
ஆர் வத்ஸலா வீட்டினுள் கைது கதவில் பூட்டில்லை கையில் விலங்கில்லை துப்பாக்கியுடன் யாருமில்லை பார்க்கப் போனால் “வீட்டை விட்டுப் போடீ” என ஓங்கும் அதிகாரக் குரல் காதில் அவ்வப்பொழுது நிசப்தத்தை கிழித்துக் கொண்டு ஆசைதான் ஆனால் தூக்கம் கலைந்து ஓலமிடத் தயாராகும் சிசு மடியில் பூவிலங்காய்
குகை. குகைக்குள் இருந்து இடமும் வலமும் பாதை பிரிந்து இன்னும் இரண்டு குகைகள். அவற்றில் ஒன்றில் பிரவேசிக்க தண்ணீர் குகையின் கூரையில் இருந்து சொட்டுச் சொட்டாக வடிந்து கொண்டிருக்கிறது. இந்தக் குகையைக் கடந்தால் அந்தகாரம் தான். இருள் பிரபஞ்ச இருள்பொதியோடு இணைந்து பிசையப்பட்டுத் தனிமை இழக்கக் கூடும். இடது பக்கம் பாதை பிரியும் குகைக்கு மேலே சிறு பாறை நகர்வு வழியே மறையும் சூரிய வெளிச்சம் ஒரு கம்பித் தாரையாக உள்நுழைந்து கீழே கசிந்து […]
கோவிந்த் பகவான் அவன் ஒரு விசித்திரன் எப்போதும் உடனிருப்பவன் உடன் சாப்பிடுபவன் உடன் உறங்குபவன் உடன் கனவு காண்பவன் உடன் சிறுநீர் கழிப்பவன் உடன் தேநீர் அருந்துபவன் உடன் சண்டையிடுபவன் தனிமையைப் பழக்கி தன் இன்பத்தை அறிமுகப்படுத்தியவன் உச்ச பேரானந்தம் கையளித்து வெறுப்பை அவன் பெற்றவன் ஓய்ந்து உறங்கியெழுந்த ஒரு சாம்பல் அதிகாலையில் உடனில்லாத அவனை சுற்றும் முற்றும் அதிர்ச்சியில் தேடியலைந்தேன் நிசப்தம் நிரம்பிய தூரத்துக் குன்றின் மீதமர்ந்து பெயர் தெரியாத இசைக்கருவி ஒன்றை வாசித்துக்கொண்டிருந்தான் மீண்டும் […]
கோவிந்த் பகவான் ஒருக்களித்து காம்புகள் தெரிய உறங்கும் இணை இணையாத இளம் வீதி நாயின் கனவினைப்போல் விரிகிறாய் துருவேறி செதிலுதிர்க்கும் குளியலறை ஜன்னல் கம்பிகளின் மீது படர்ந்த அணில்கொடியின் சொரசொரப்பாய் படர்கிறாய் நான்கு வழிச் சாலையில் குருதி வழிய துடித்துப் புலம்பும் விபத்தின் உயிர் நோக்கி விரையும் அவசர ஊர்தியின் சைரன் ஒலியாய் அலறுகிறாய் அகன்ற வாயுடைய சமையலறை குண்டானுக்குள் துண்டு துண்டாய் வெந்து கொதிக்கும் மாமிசத்தின் வீச்சமாய் வீசுகிறாய் போதாது மூங்கில் கொம்புகளால் வேயப்பட்ட பாடையில் […]
கோவிந்த் பகவான் உனக்குள் உறங்கும் இரவு எலுமிச்சைச் சாறு பிழியும் கருவியைப்போல் பிழிந்தெடுக்கிற இந்த இரவு துயர் மிகுந்த நம் நினைவுகளை கசியவிடுகிறது புளிப்பேறிய சுவைடர்ந்த அவை தலைக்கேறி தள்ளாடச் செய்கின்றன அடுக்களை டப்பாவில் அடைக்கப்பட்ட மீத நினைவுகளையும் சில தேக்கரண்டி அள்ளிக் கலக்கி ஒரே மிடறில் சுவைக்கத்தொடங்கியதும் இந்த இரவு எனக்குள் ஊறி உறங்குகிறது. -கோவிந்த் பகவான்
ன்புடையீர், 28 மே 2023 சொல்வனம் இணையப் பத்திரிகையின் 295 ஆம் இதழ், 28 மே, 2023 அன்று வெளியிடப்பட்டிருக்கிறது. பத்திரிகையைப் படிக்கச் செல்ல வேண்டிய முகவரி: https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு. கட்டுரைகள்: துவாரம் மங்கத்தாயாரு –அம்பை (நேர்காணல்; கட்டுரை) ஆழி –கலைச்செல்வி காற்றில் கலக்கும் பேரோசை – உத்ரா அன்று செயலழிந்தல மருபொழுது – வித்யா அருண் முன்னூறாவது இதழ்: புதிய எழுத்துகளும் புது புத்தகங்களும் –பதிப்புக் குழு அறிவிப்பு காடுகள் மலைகள் தேவன் கலைகள் – லோகமாதேவி தென்னேட்டி ஹேமலதா – காத்யாயனி வித்மஹே (தமிழில்: ராஜி ரகுநாதன்) தெலுங்கு புதினங்களில் பெண்கள் தொடர் –17 ஆம் அத்தியாயம் தந்த்ரா: இந்து மதத்தின் ஆதார ஸ்ருதி – 3 – ஷாராஜ் வியாகூலத்திற்கான மரபணுவை (Anxiety Gene) அழிப்பது இனி சாத்தியமே!? – சத்யா G.P. கதைகள்: வெத்தலப்பட்டி – தெரிசை சிவா மாணாக்கன் – செகாவ் (தமிழாக்கம்: சிவா கிருஷ்ணமூர்த்தி) தேவை ஒரு தந்தை – அமர்நாத் குறுநாவல்கள் மார்க் தெரு கொலைகள் -3 – எட்கர் ஆலன் போ (தமிழாக்கம்: பானுமதி ந. ) 1/64 நாராயண முதலி தெரு – 4 – சித்ரூபன் நாவல்கள்: அதிரியன் நினைவுகள் -14 –மார்கரெத் யூர்செனார் (ஃப்ரெஞ்சு – தமிழாக்கம்: நா. கிருஷ்ணா) மிளகு அத்தியாயம் நாற்பத்தாறு – இரா. முருகன் உபநதிகள் – ஏழு -அமர்நாத் தெய்வநல்லூர் கதைகள்- 3 – ஜா. ராஜகோபாலன் கவிதைகள்: என் மனதில் நிற்கும் மதியம் – சானெட் மொன்டல் (தமிழாக்கம்: ராமலக்ஷ்மி) கு. அழகர்சாமி கவிதைகள் நிழலின் இரசிகை – புனிதஜோதி தேன்மொழி அசோக் கவிதைகள் மதார் கவிதைகள் வருணன் கவிதைகள் இதழைப் படித்தபின் உங்கள் கருத்துகள் ஏதும் உண்டெனில், அவற்றைப் பதிவு செய்ய ஒவ்வொரு படைப்பின் கீழேயும் வசதி செய்திருக்கிறோம். தவிர மின்னஞ்சல் மூலம் எழுதித் தெரிவிக்கலாம். முகவரி: Solvanam.editor@gmail.com எழுத்தாளர்கள் படைப்புகளை அனுப்பவும் அதே முகவரிதான். உங்கள் வருகையை எதிர்நோக்கும், சொல்வனம் பதிப்புக் குழு