80,000 புத்தகங்கள் கொண்ட தியாகு வாடகை நூலகம் ஆதரிப்பார் யாரும் இல்லாததால் 64 வருட நூலகத்திற்கு மூடுவிழா இப்படியொரு பதிவை ஃபேஸ்புக்கில் கவிஞர் கனியமுது அமுதமொழி யின் டைம்லைனில் படிக்க நேர்ந்தது. கோவையில் உள்ள தியாகு நூலகம் மூடப்படலாகாது. இது குறித்த யூட்யூப் காணொளியையும் பார்த்தேன் // https://youtu.be/3sm-_zoLUGM மிகவும் வருத்தமாயிருந்தது. இது குறித்து கவிஞர் தமிழ்நதி (யாழ் நூலகம் எரிக்கப்பட்ட ஆறாத்துயரத்தை சுமந்துகொண்டிருக்கும் கவிஞர் தமிழ்நதி உட்பட தமிழ் எழுத்தாளர்கள் பலரும் இந்த நூலகம் மூடப்படலாகாது […]
வெள்ளிப்பாத்திரங்கள் நிரம்பிய வீட்டில் பிறந்துவளர்ந்த குழந்தைகளுக்கு வறுமையின் அவமானம் புரிய வாய்ப்பில்லை அல்லது புத்தரைப்போல் வீட்டைவிட்டு வெளியேறத் தோதான கால்கள் வாய்த்திருக்கவேண்டும். மன்னர்களின் வரலாறுகளை மட்டுமே படித்துமுடித்த இளவரசர்கள் மிகவும் பிரயத்தனப்பட்டு மக்களாட்சி என்ற சொல்லைப் படிக்கக் கற்றாலும் அதை மனதில் இறக்கிக்கொள்வதில்லை. மும்மாரி பொழிகிறதா என்பதைக்கூட குளிரூட்டப்பட்ட அறையில் திண்டுமெத்தையில் சாய்ந்து மனக்கண்ணால் பார்த்து முடிவுசெய்யப் பழக்கப்பட்டவர்கள் வெறுங்கால்கள் கொப்புளிக்க மைல்கணக்காய் தலையில் பாறாங்கற்களைச் சுமந்துவந்தவர்களை சிந்தித்துப் பார்ப்பதில்லை. அல்லது, அவர்கள் விசுவாசமிக்க பிரஜைகள் என்று […]
அவர் எனக்கு எதிரி அவரை எனக்குப் பிடிக்காது ஆகவே அவரைப் பற்றி என்னவேண்டுமானாலும் அவதூறு பேசுங்கள் அவருடைய அன்னை தந்தை பிறப்பு ஊர் படிப்பு உச்சரிப்பு எதை வேண்டுமானாலும் பகடி செய்யுங்கள் பழித்துக்கூறுங்கள் அவரை மட்டந்தட்ட மதிப்பழிக்க body-shaming செய்ய உங்களுக்குப் பரிபூரண உரிமையுண்டு. அரசியல் சாசனத்தில் இல்லையென்றால் என்ன ஆயத்த வழக்கறிஞர் குழு இருக்கிறதே அதனால் அதிகம் யோசிக்காமல் அவரை எத்தனைக்கெத்தனை அசிங்கமாக வசைபாட முடியுமோ அத்தனைக்கத்தனை பாடுங்கள் சுருதிபேதங்கள் அதிகரிக்க அதிகரிக்க உங்கள் பாடல்களுக்கு […]
மௌனம் சம்மதமல்லமந்திரக்கோல்மாயாஜால மொழிமனதின் அரூபச் சித்திரம்மேற்தோலின் உள்ளூறும் காற்றின் ருசிமகோன்னத நறுமணம்மரித்தார் உயிர்த்தெழல்மாகடலின் அடியாழ வெளிமையிருட்டிலான ஒளிமாமாங்க ஏக்கம்மீள் பயணம்மருகும் இதயத்தின் முனகல்மனசாட்சியின் குரல்மிதமிஞ்சிய துக்கம்மகா அதிர்ச்சிமுறிக்கும் புயலுக்கு முந்தைய அமைதிவழிமறந்தொழியும் சூன்யவெளிமொழியிழந்தழியும் எழுத்துக் கலைமரணமனைய உறைநிலை…….. சிலருடைய கவிதைகளில் நிலவு கறைபடிந்ததாய்சிலருடைய கவிதைகளில் நிலவு களங்கமற்றதாய்சிலருடைய கவிதைகளில் நிலவு சந்திரனாய்சிலருடைய கவிதைகளில் நிலவு அம்புலிமாமாவாய்சிலருடைய கவிதைகளில் நிலவு கொஞ்சிக்குலவும் காதலியாய்சிலருடைய கவிதைகளில் நிலவு அஞ்சிப் பதுங்கும் குழந்தையாய்சிலருடைய கவிதைகளில் நிலவு உலவிக்கொண்டி ருப்பதாய்சிலருடைய கவிதைகளில் நிலவு […]
அக்கம்பக்கத்தில்தற்கொலையின் நெடி அல்லது வாடை அல்லது வீச்சம்கிளர்ந்தெழுந்து பரவிக்கொண்டிருப்பதாக உணரும் மனதில்விலகிய பார்வையாய் வலிபோல் ஒன்று…..அவ்வளவுதான்ஏதும் செய்யவியலாது.இடைத்தூரத்திற்கு அப்பாலானது இயலாமை.தற்கொலை செய்யத் துணிந்தவர்கோழையா தைரியசாலியாஎன்ற பட்டிமன்றம் காலங்காலமாய் நடந்துகொண்டிருக்கிறது.பிறர் தன்னைக் கொலைசெய்யாமலிருக்கும் பொருட்டோதான் பிறரைக் கொலைசெய்யாமலிருக்கும்பொருட்டோநடக்கின்றன தற்கொலைகள் என்று எந்த உளவியலாளரேனும் சொல்லியிருக்கிறார்களோ, தெரியவில்லை.அரை மயக்க நிலை அல்லது ஜன்னிகண்ட நிலைஅல்லது முழுவிழிப்பு நிலையில் எதற்கென்றே தெரியாதஅரைகுறை நம்பிக்கையில்…..நடுக்காட்டில் நள்ளிரவில் நின்றுபோன வண்டியில்இல்லாத பெட்ரோல், அல்லதுஇருந்தாற்போலிருந்து மறந்துபோன வண்டியோட்டல்,அல்லது செயலிழந்துபோய்விட்ட கைகால்கள்,மங்கலாகிவிட்ட பார்வை,எங்கும் மூடிக்கொண்டுவிட்ட திசைகள்…..கற்பனையாய் குழந்தைகள் […]
ஒரு கையில் கிட்டாரும் மறு கையில் கோடரியுமாக இருக்கும் கண்களுக்குத் தெரிந்தும் தெரியாமலுமாய் தெருக்களில் திரிந்துகொண்டிருக்கும் அவர்கள் ஒரு தலையை வெட்டிவிட்ட பிறகு கிட்டாரை வாசிக்கிறார்கள். அல்லது கிட்டார் வாசித்த கையோடு காணக்கிடைத்த தலையை அல்லது தலைகளை கனகச்சிதமாகக் கொய்துவிடுகிறார்கள். தன்னிசையாகக் கிளர்ந்தெழும் கோபம் பெரிதா தருவிக்கப்பட்ட கோபம் பெரிதா என்ற பட்டிமன்றங்கள் நடத்தப்படுவதேயில்லை. தேவைப்படும்போதெல்லாம் சில அன்னாடங்காய்ச்சிகளின் சிரசுகளில் கிரீடங்களைப் பொருத்துகிறார்கள் கையோடு கரும்புள்ளி செம்புள்ளிகளையும் குத்திவைக்கிறார்கள் கிட்டாரின் இனிமையான இசையின் பின்னணியில் அவர்களைத் தெருவோரமாக […]
_ லதா ராமகிருஷ்ணன் மதிப்பிற்குரிய மூத்த மொழிபெயர்ப்பாளரும் எழுத்தாளருமான அமரர் டாக்டர் கே.எஸ்.சுப்பிர மணியன் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரைகள் இடம்பெறும் இந்த நூலை சமீபத்தில் நியூ செஞ்சுரி புத்தக நிலையம் வெளியிட்டுள்ளது. Dr.K.S. உயிரோடு இருக்கும்போதே பிரசுரத்திற்கு அனுப்பிவைத்திருந்தார். புத்தகத்தைப் பார்த்தி ருந்தால் சந்தோஷப்பட்டிருப்பார். இலக்கியம் – சமூக வெளிகளில் தனக்கு ஏற்பட்ட மறக்க முடியாத அனுபவங்களைக் கட்டுரைக ளாக டாக்டர் கே.எஸ். எழுதி பல்வேறு தொகுப்புகளில் அவை வெளியாகியிருக்கின்றன. அவற்றி லிருந்து தேர்ந்தெடுத்த கட்டுரைகளும், புதிதாக […]
நண்பர் சஃபி clinical psychologist ஆகப் பணியாற்றிவருகி றார். அவரும் எழுத்தாளரும் நண்பருமான கோபி கிருஷ் ணனும்தான் எனக்கு Psychiatry, anti-Psychiatry சார்ந்த பல விஷயங்களை, நுணுக்கங்களை அறிமுகப்படுத்தி அந்தத் துறை சார்ந்த குறிப்பிடத்தக்க கட்டுரைகளையும் ஒன்றி ரண்டு நூல்களையும் தமிழில் மொழிபெயர்க்கச் செய்தவர்கள். சஃபியும் நிறைய எழுதியிருக்கிறார்; மொழிபெயர்த்திருக்கிறார். இப்போது சஃபியின் முனைப்பான உழைப்பில் 1001 அராபிய இரவுகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு உயிர்மை பதிப்பகத்தால் நான்கு தொகுதிகளாக வெளியிடப்பட்டிருக்கிறது.
புதுப்புனல் (சமூக – இலக்கிய மாத இதழ்) திரு.ரவிச்சந்திரன் புதுப்புனல் பதிப்பகம் தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சிக்கு சிறுபத்திரிகைகள் முக்கியப் பங்காற்றியுள்ளன. சிற்றிதழ்களின் விரிவாக்கமான இடைநிலை இதழ்கள் தோன்றியுள்ளன எனலாம். முதலில் பன்முகம் பிறகு புதுப்புனல் என்று தமிழ் இலக்கிய வெளியில் புதுப்புனல் பதிப்பக உரிமையாளர் ரவிச்சந்திரனின் பங்கு கணிசமானது. சிறுகதைத்தொகுப்புகள், மொழிபெயர்ப்புகள், கவிதைத்தொகுப்புகள், திறனாய்வுக்கட்டுரைகள் என நூற்றுக் கணக்கான நூல்களை புதுப்புனல் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. தமிழின் குறிப்பிடத் தக்க புதின எழுத்தாளர் எம்.ஜி.சுரேஷின் புனைவு, அ-புனைவு நூல்கள் […]
லதா ராமகிருஷ்ணன் தமிழ் மாணவர்கள் தங்கள் தாய்மொழியறிவிலும் தேர்ச்சியிலும் மிகவும் பின்தங்கியிருக்கிறார்கள் என்று சமீபத்தில் INSTITUTE FOR COMPETITIVENESS, STANFORD நடத்திய சுற்றாய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. பிப்ரவரி 25, 2023 தேதியிட்ட டைம்ஸ் ஆஃப் இண்டியா நாளிதழில் கல்வி தொடர்பாக INSTITUTE FOR COMPETITIVENESS, STANFORD நடத்திய சுற்றாய்வு ஒன்றின் முடிவுகள் தரப்பட்டுள்ளன. இந்தியாவில் 10000 பள்ளிக ளில் 20 தாய்மொழிகளில் பயிலும் 86000 மூன்றாம் வகுப்பு மாணாக்கர் களிடம் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் தமிழ்மொழித்திறன் தமிழ் […]