ஸிந்துஜா ஹால் ஒரே களேபரமாக இருந்தது. அப்படி ஒரு பேச்சும், சிரிப்புமாகச்சத்தம். இன்று காலைதான் சேது துபாயிலிருந்து வந்தான். வரும் போதேஇந்த இரைச்சலையும் கூட்டிக் கொண்டு வந்து விட்டான். அவன் யானையாகவும் வீடு வெங்கலக்கடையுமாகவும் மாறி விட்ட தருணம் என்று கௌசி நினைத்தாள். ஹால் பக்கம் போக விடாமல் அவளைச்சமையல் உள் கட்டிப் போட்டிருந்தது. சேதுவைப் பார்க்க வந்திருந்த கௌசியின் சொந்தக்காரர்கள், அவள் கணவன் சாயிராமின் உறவு ஜனம் என்கிற கும்பலுக்குக் காப்பி டிபன் கடை முடிந்தது. […]
ஸிந்துஜா அம்புஜம் பஸ்ஸிலிருந்து இறங்கிக் கைக்கடிகாரத்தைப் பார்த்தாள். ஒன்பதரை அடிக்க இன்னும் பத்து நிமிஷம் இருந்தது. வீட்டை விட்டுக் கிளம்பும் போது அன்று நிச்சயம் பஸ் கிடைக்காது. ஒன்று தாமதமாகப் போய்த் திட்டு வாங்க வேண்டும் அல்லது ஆட்டோவுக்குத் தண்டம் அழுது போக வேண்டும் என்று நினைத்துதான் விறுவிறுவென்று பஸ் ஸ்டாப்பை நோக்கி நடந்தாள். காலில் போட்டிருந்த செருப்பு பல விழுப்புண்களைக் கொண்டிருந்ததால் ரொம்பவும் வேகமாகவும் நடக்க முடியவில்லை. ஆனால் அன்று கடவுளுக்கு அவள் மீது பிரியம் வந்திருக்க வேண்டும். சற்றுத் […]
ஸிந்துஜா சாந்தி எல்லாச் சத்தங்களையும் கேட்டுக் கொண்டு படுத்திருந்தாள். முன்பு படுக்கும் போது போட்டுக் கொள்வதற்கு என்றிருந்த பாயும் கிழிந்து விட்டதால் வெறும் தரையில் படுத்துக் கொண்டிருந்தாள். மண் தரையில் ஊர்ந்து சென்ற எறும்பு ஒன்று அவள் காலைப் பதம் பார்த்து விட்டு நழுவியது. அந்த ஊசிச் சுருக்கின் வலியில் அவள் காலை இழுத்துக் கொண்டு சேலையால் பாதம் வரை தெரியாமல் மூடிக் கொண்டாள். வெளியில் படுத்திருந்த கறுப்பன் உள்ளே வந்து சுற்றிப் பார்த்து விட்டு அவள் […]
ஸிந்துஜா எதிராஜ் பரீட்சை முடிந்து ஒரு வார லீவில் ஊருக்கு வந்திருந்தான். வந்தது முதல் வீட்டில் கால் தரிக்கவில்லை என்று கனகவல்லி கணவனிடம் புகார் செய்தாள். முதல் நாள் ‘பிரென்ட்சோட ஓட்டல்ல சாப்பிட்டு விட்டு வந்தேன்’ என்று அவனது அம்மாவின் வயிற்றெ ரிச்சலைக் கொட்டிக் கொண்டான். அதனால் அவன் ஊருக்குத் திரும்பிப் போகும் வரை எல்லா வேளையும் வீட்டில்தான் சாப்பிட வேண்டும் என்று அவனது அப்பா சிவகுரு உத்திரவு போட்டு விட்டார். காலையில் டிபன் சாப்பிட்டு விட்டு […]
அவளைத் தேடி வந்த சுகந்தி “ஏன் என்னமோ போல இருக்கீங்க?” என்று வசந்தாவிடம் கேட்டாள். “இல்லியே. ஐம் கொயட் ஆல்ரைட்” என்று சிரித்தாள். உண்மையை மறைக்க வல்ல சிரிப்பைத் தான் சிந்தவில்லை என்று அவளுக்குத் தோன்றியதை மறைக்கும் வண்ணம் “கலியாணம்னு கேள்விப் பட்டேன். கங்கிராட்ஸ்” என்றாள். சுகந்தி “அதுக்குத்தான் வந்தேன்” என்றபடி கைப்பையைத் திறந்து மஞ்சள் குங்குமம் தடவிய ஒரு கவரை எடுத்து “மேரேஜுக்கு அவசியம் நீங்க வரணும்” என்று சொல்லிக் கொடுத்தாள். “நிச்சயமா” என்று அவளுடன் கைகுலுக்கி விட்டு “என்னிக்கு?” என்றபடி பத்திரிக்கையைப் பிரித்தாள் “அடுத்த மாசம் ஆறாந் தேதி. […]
ஸிந்துஜா மல்லேஸ்வரம் சர்க்கிள் சிக்னலில் நிறுத்தப்பட்டிருந்த வண்டிகளில் ஒன்றாக அவர்களதும் இருந்தது. காரோட்டியின் பக்கத்தில் அவன் உட்கார்ந்து வெளியே வேடிக்கை பார்த்தான். நடைபாதையின் மேல் எல்லாவிதமான கடைகளும் பரவிக் கிடந்தன. சிக்னல் கிடைத்து வண்டிகள் நகர ஆரம்பித்தன. சிக்னலைக் கடக்கும் போது அவள் அவன் பார்வையில் பட்டாள். அவன் துள்ளியெழுந்து அவள்தானா என்று ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தான். காரோட்டி ஏய், ஏய், ஒளுங்கா உக்காரு. உனக்குப் பயித்தியமா பிடிச்சிருக்கு? என்று சத்தம் போட்டான். வெளியே தென்பட்ட ஒரு போலீஸ்காரர் அவன் தலையைப் பார்த்துக் கன்னடத்தில் […]
தமிழில் :ஸிந்துஜா