வெள்ளிப்பாத்திரங்கள் நிரம்பிய வீட்டில் பிறந்துவளர்ந்த குழந்தைகளுக்கு வறுமையின் அவமானம் புரிய வாய்ப்பில்லை அல்லது புத்தரைப்போல் வீட்டைவிட்டு வெளியேறத் தோதான கால்கள் வாய்த்திருக்கவேண்டும். மன்னர்களின் வரலாறுகளை மட்டுமே படித்துமுடித்த இளவரசர்கள் மிகவும் பிரயத்தனப்பட்டு மக்களாட்சி என்ற சொல்லைப் படிக்கக் கற்றாலும் அதை மனதில் இறக்கிக்கொள்வதில்லை. மும்மாரி பொழிகிறதா என்பதைக்கூட குளிரூட்டப்பட்ட அறையில் திண்டுமெத்தையில் சாய்ந்து மனக்கண்ணால் பார்த்து முடிவுசெய்யப் பழக்கப்பட்டவர்கள் வெறுங்கால்கள் கொப்புளிக்க மைல்கணக்காய் தலையில் பாறாங்கற்களைச் சுமந்துவந்தவர்களை சிந்தித்துப் பார்ப்பதில்லை. அல்லது, அவர்கள் விசுவாசமிக்க பிரஜைகள் என்று […]
அவர் எனக்கு எதிரி அவரை எனக்குப் பிடிக்காது ஆகவே அவரைப் பற்றி என்னவேண்டுமானாலும் அவதூறு பேசுங்கள் அவருடைய அன்னை தந்தை பிறப்பு ஊர் படிப்பு உச்சரிப்பு எதை வேண்டுமானாலும் பகடி செய்யுங்கள் பழித்துக்கூறுங்கள் அவரை மட்டந்தட்ட மதிப்பழிக்க body-shaming செய்ய உங்களுக்குப் பரிபூரண உரிமையுண்டு. அரசியல் சாசனத்தில் இல்லையென்றால் என்ன ஆயத்த வழக்கறிஞர் குழு இருக்கிறதே அதனால் அதிகம் யோசிக்காமல் அவரை எத்தனைக்கெத்தனை அசிங்கமாக வசைபாட முடியுமோ அத்தனைக்கத்தனை பாடுங்கள் சுருதிபேதங்கள் அதிகரிக்க அதிகரிக்க உங்கள் பாடல்களுக்கு […]
சி. ஜெயபாரதன், கனடா வானகம் எனக்கு போதி மரம்வைர முத்துவின் ஞான ரதம்வையகம் மானிட ஆதி வரம்வள்ளுவம் நமக்கு வாழ்வு அறம். காலவெளி எனக்கு ஓர் நூலகம்கடவுள் படைப்பி லக்கண நாடகம்ஐன்ஸ்டீன் கண்ட இறைப் பீடகம்அகரத்தில் தொடரும் மூல ஏடகம். கற்பது எனக்கு முதற்படிகாசினி அனுபவம் மேற்படிநிற்பது வள்ளுவர் சொற்படிநியூட்டன் இயக்க நூற்படி. காலம் எனக்கோர் திசைகாட்டிகாவியம் எனக்கு சீர் வழிகாட்டிஞாலம் எனக்கோர் ஆலயம்ஞானம் என்போர் ஆயுதம்.
சாந்தி மாரியப்பன் முதற் சரக்கொன்றை பூத்து விட்டது அக்காக்குருவிகளைத்தான் காணவில்லை. அலகு ஓய்ந்ததோ அன்றி களைத்து இளைத்ததோ அக்காக்களைக் கண்ணுக்குள்ளேயே வைத்திருக்கும் தங்கைகள் தேடித்தட்டழிகிறார்கள் இந்த மரத்தில் பூத்திருப்பது சென்ற வருடம் கூவிய அக்காக்குருவியின் கீதமாக இருக்கலாம் தங்கைகளின் ஏக்கமாக வழிவது ஏதோ ஒரு வருடத்தின் பூக்குவியலாகவும் இருக்கலாம் சுள்ளிக்குவியலாய் இருக்கும் மரத்தின் பூவின் தனிமையும் வனம் முழுக்க அக்கக்கோவென தேடும் தங்கையின் தனிமையும் ஒன்றென்றால் ஒன்றுதான் வெவ்வேறென்றால் வேறு வேறுதான் சொட்டும் குரலும் மகரந்தமும் பரவும் […]
சொற்கீரன். அமர்த்த மழைக்கண் விழிநீள் அம்பின் அஞ்சிறைத் துடிப்பின் மணிமிடை ஈர்ந்த நெஞ்சத்து விடரகம் மாய்ந்தோன் தழீஇய நின் எரிதழல் அன்ன குவளை ஆங்கு மீண்டும் கூர்த்து தண்மழை வீழ்க்கும். பானாள் இரவு இகந்து செறீஇ மைக்குறி நடுக்குறு கள்வர் குடர்வாங்கு கொடுவாள் தப்புன வந்தும் அவனை எதிரிய வன்கண் அழிய அளியள் ஆனாய் அம்நெளி நெறியிழை ஐம்பால் தீங்குரல் கறங்கு வெள்ளருவி காட்சியின் மலியும். திங்கள் நீடியும் இருளே உனைத் தின்மோ என இமைத்து இமைத்து […]
சேயோன் சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு? இந்தப் பாடலே அந்த சிட்டுகளின் தேசத்துக்கு ஒரு தேசீயகீதமாய் ஒலித்துக்கொண்டிருக்கிறது. இன்று இதன் சிறகடிப்புகள் கைபேசிகளில் கூடு கட்டி உலகத்தின் முகத்தையே மாற்றிக்கொண்டிருக்கின்றன. மரக்கிளைக்குருவியும் மின்னணுக்குருவியும் போட்டுக்கொண்ட கூட்டணியில் உலக அரசியலே கதிகலங்கிக்கிடக்கிறது. முட்டை போட்டு குஞ்சு பொரித்தாலும் பொரிக்காவிட்டாலும் பில்லியன் பில்லியன் டாலர்கள் எங்கோ ஒரு பக்கம் குவிந்து கொண்டிருக்கிறது. கீச்கீச்சென்று அவை கலித்தொகையும் குறுந்தொகையும் பாடிக்கொண்டிருப்பதால் காதல் மின்னல்களின் நெய்தலில் இந்த உலகம் அழகாய் சுழல்கிறது. எந்தப்பறவை என்றால் என்ன […]
லாவண்யா சத்யநாதன் பம்பரமாய் சுழலும்தலையுடனிருந்த ஒருவன்உதார்கள் கப்சாக்கள் சவடால்கள்மற்றும் மாயங்களைநாற்சந்திக் கூட்டத்தில்எருமைக்குரலில் பரப்பிக் கொண்டிருந்தான்.பாதி உண்மைகளை, மெய்போலும் பொய்களைவரலாறாக்கும் ஒருவன்பிரசங்கியின் கப்சாக்களில் ஒன்றின் மீதானபுகாரை நிரப்பினான் தினசரியில்.காகிதம் தினம் தின்று கழிசடையான ஒருவன்ஊர்தின்னி மாசிலாமணியை உசுப்பிவிட்டான்.கடலின் உப்புக்கும் காற்றின் நச்சுக்கும்ஆண்மலடுக்கும் ஆன்லைன் ரம்மியாடிகளின் தற்கொலைக்கும்எருமைக்குரல் காரணமென்று தீக்குச்சியைக் கொளுத்திவேலாயுதம் தண்டாயுதம் இருவரிடம் தந்தான் ஊர்தின்னி.நகர்நடுவில் தடியர் கூட்டம் கூடலாச்சு.போக்குவரத்து நின்னு போச்சுகடைகள் சேதமாச்சு. கார்கள் எரிஞ்சு போச்சு.அப்பிராணிகள் இரண்டு சவமாச்சுஉடலில் பாதி தெரியும் உடையில்கடைவீதிக்குச் சென்ற ஆண்டிக்கு […]
லாவண்யா சத்யநாதன் தாய் மகள் உறவிலும்தாவணிப் பரவும் மாறியபின் திரைகளுண்டு.வடிவும் வனப்பும்கூடதந்தை மகள் உறவில் திரைகளுண்டுசெழிப்புகூடி சேலையுடுத்தசகோதர உறவில் திரைகளுண்டு.ரத்த உறவுகளென்றாலும் அவைமனதளவிலான உறவுகளாய் மாறும்.நம் உறவு உடலும் உள்ளமும் இணைந்த உறவு.உயிருள்ளவரை மாறா உறவு.திரைகளில்லா உறவு.எச்சிலும் வேர்வையும் இன்னபிறவும் கலந்த உறவு.உன் ஒவ்வொரு மயிர்க்காலின் நினைப்பும்என்னாலறியமுடியும் உறவு.எவளைப் பார்க்கினும் ரம்பையாய் தெரியும்கிளியைவிட்டுக் குரங்கைத் தேடும்நடுவயதுக் கிறுக்கு உன்னைப் பிடித்திருப்பதைநானறியும் உறவு.மோரில் நனைத்த கரண்டியைபாலில் கலக்கமுடியாதென்றுஉன் காதைத் திருகிஉன்னைக் கட்டிப்போடும் உறவு.—-லாவண்யா சத்யநாதன்
1 மனிதன் தேடும் ‘சுகம்’ ஒரு நாணயமாகத்தான் தரப்படுகிறது அதன் மறுபக்கம் ‘வலி’ 2 வெறுப்பை விரோதத்தை கோபத்தை பகையை நோக்கி எடுத்துவைக்கும் காலடிகளே ‘விவாதங்கள்’ 3 நான் எப்படிப்பட்டவன் என்று நான் சொல்வதும் பொய் அவன் சொல்வதும் பொய் அவனவன் சொல்வதும் பொய் 4 சிவப்பு பச்சை விதி வாகனங்களுக்கு மட்டுமல்ல வார்த்தைகளுக்கும்தான் 5 பேச்சால் யாரையும் துன்புறுத்தாமல் பேசுவது ஓர் இன்பமான துன்பம் 6 நீ தந்த முதல் தேநீரைச் சுவைக்கையில் ஒரு சொட்டு […]
சொற்கீரன். எருத்தத்து இரீஇ வன் தொடை மணிவில் ஏந்து அலைஞர் வெறிகொள் வன்சுரம் கடவு எறி செலவின் நுழைபடுத்தாங்கு பொருள்சேர் உலகம் புகுவதுள்ளி நற்றிழை நலிய இறை ஊர்பு அறுவளை வளையின் நெகிழ நோதல் நன்றோ? குளவிப்புதற் கண் அரவுஎறி அஞ்சி பூவின் வள்ளிணர் விடுப்ப விழையா அந்தொகை அவிர்க்குரல் அகவல் வரித்து விரித்த பூவுள் நின் முகன் நோக்கும். கறிமுறி இவரிய கழைமுனை ஓடி கடுவன் வேர்க்கும் மந்தி நகை ஊட அஃதே ஒக்க அவனும் […]