அமேசான் கதை காட்டில் சூரிய ஒளி

This entry is part 35 of 35 in the series 29 ஜூலை 2012

(சூரியன் தோன்றி ஒளி வீசுவதை பிராசில் காட்டில் வாழும் கமயுரா மக்கள் பழங்கதையாக கூறிவது) உலகம் உருவான ஆரம்ப காலத்தில், காடு ஒளியில்லாமல் இருண்டு இருந்தது.  சூரியனின் தங்கக் கதிர்கள் மரங்களின் மேல் இருந்த பறவைகளின் ராஜ்யத்தில் சிக்கிக் கொண்டன.  மக்கள் இருளிலேயே எழுந்து இருளிலேயே தூங்கச் சென்றனர்.  தங்களைச் சுற்றி இருப்பவர்களைக் காணவும் முடியாது தவித்தனர். சூரியக் கடவுளை ஒளி தரக் கேட்டு தினம் முறையிட்டனர். ஒரு நாள் “இது நல்லதல்ல.. என்னுடைய ஒளியை எல்லோரும் […]

வளர்ச்சியின் வன்முறையும், ராஜகோபால் என்ற மனிதரும்

This entry is part 34 of 35 in the series 29 ஜூலை 2012

               மதுரையில் நடைபெற்ற “புவி வெப்பமயமாதலுக்கு எதிரான மூன்று நாள் மாநாட்டில் “ நொய்யல்  ஆறு-வளர்ச்சியின் வன்முறை : பின்னலாடைத்தொழிலும் அதன் பாதிப்பும் “ என்ற தலைப்பில் .திருப்பூர்  மக்கள் அமைப்பு ஒரு  கருத்தரங்கை நடத்தியது. ஒரே சமயத்தில் 15 அரங்குகளில் பல்வேறு சுற்றுச்சூழல் தலைப்புகளில் தேசிய அளவில் கவனிப்பு பெற்றவர்களின் குறிப்பிடத்தக்க உரைகள் இடம் பெற்றன.  அந்த மாநாடு பற்றியச் செய்திகள் வெகுஜன ஊடகங்களில் ஏகதேசம் இருட்டடிப்புச் செய்யப்பட்டிருந்தது. “ இன்றைய உலகில் அனைவருக்கும் பயங்கர அச்சுறுத்தலாக […]

கொடுக்கப்பட பலி

This entry is part 33 of 35 in the series 29 ஜூலை 2012

சிறகுகளில் கூடுகட்டி காத்திருந்த சிலந்தி உணர்வுகளை உணவாக்கிய பொழுதொன்றில், யாருக்கும் கிடைக்காத ஓரிடம் தேடி ஒதுங்க விளைந்த மனது, நிராகரிப்பின் வலியொன்றில் மலரெடுத்து சூடி வாழ்வியலின் ஆரோகனிப்பை _அந்த நாற்றத்துள் மறைத்துக்கொண்டு இயங்கத்தொடங்கிற்று. நிபந்தனைகளையும் நிர்ப்பந்தங்களையும் சபிப்புகளையும் சம்பிரதாயங்களையும் சடங்காகவே கொண்டு, கவனிக்கப்படுதல் மீதொரு கவனம்வைத்து தன்னிலை மறந்து அவதானிக்க தொடங்கியது………………. பின் , தோற்றுப்போன பொழுதொன்றில் ஆழிசூழ் ஆழத்தில் முத்துக்களுக்கு பக்கத்தில் பேச்சடங்கி கிடந்தது கலைஞனின் குரல். ஆக்கம்:நேற்கொழு தாசன் வல்வை

சொல்லும் சொல்லு செல்வதெங்கே…?

This entry is part 32 of 35 in the series 29 ஜூலை 2012

யாம் சொல்லும் சொல்லெல்லாம் எங்கே செல்லும்…? காற்றலையில் கரைவதனால் வார்த்தைகள் காணாமல் போயிடுமா.. கண்டபடி சிதறித்தான் ஏழு கண்டங்களும் உலவிடுமா..? உலகின் காந்தமது ஈர்க்கும் வடபுலந்தான் விரைந்திடுமோ… ஊசாட்டம் இல்லாத இடமொன்று எங்கே அங்கு சென்றொழிந்திடுமோ… வார்த்தை பேசிடும் உதட்டளவில் உறைந்திடுமோ இல்லை கேட்டிடும் இதயமெல்லாம் சென்று குடியிருந்திடுமோ… ஆறு குளம் மலைகளைத் தான் அடைந்திடுமா அண்டவெளி தாண்டி வார்த்தை சென்றிடுமா… இந்த வளி மண்டலத்தை நிரப்பிடுமா… இதுகாறும் காணாதவொரு பொருளாய் ஆகிடுமா..? இருதயத்தில் என்றென்றும் இருந்திடுமா… […]

பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! பிரபஞ்சத்தின் விதியை நிர்ணயம் செய்வது பேரளவில் பரவியுள்ள கருஞ்சக்தி

This entry is part 31 of 35 in the series 29 ஜூலை 2012

    (கட்டுரை 82) சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா பிரபஞ்சத்தின் ஊழ்விதியை எழுதப் போவது புரியாத கருமைச் சக்தியா ? விரிய வைக்கும் பிரபஞ்சத்தைக் கருஞ்சக்தி உருவாக்குமா அல்லது முறித்து விடுமா ? ஒளிமந்தைகளின் இழுக்கும் விசைக்கு எதிராய் விலக்கு விசைபோல் இலக்கு கொள்வது. கால வெளிக் கருங்கடலில் ! விண்வெளியின் உண்மை நிறம் கருமையா ? ஆழியைச் சுற்றிக் கோள்கள் படைக்கும் காலக் குயவனின் களி மண் கட்டிகளா கருமைப் […]

தசரதன் இறக்கவில்லை!

This entry is part 30 of 35 in the series 29 ஜூலை 2012

கௌசல்யாவை திருமணம் செய்துகொண்ட தசரதன் தன் மனதில் தீர்மானித்தான்: ’ஒருத்திக்கு ஒருவன் என்றே வாழுவேன், மற்றொருபெண்ணை மனதில்கூட நினைக்கமாட்டேன்’ என்று உறுதி எடுத்துவிட்டான். ஆனால் ராமனைப் பெற்றவுடன் கௌசல்யா இறந்துவிடவே கௌசல்யாவின் தந்தையே வற்புறுத்தி கேதகியை (இரண்டாம் மகளை) மணமுடித்து வைத்தார். அவளுக்கு பரதன் பிறந்தான்.   மூன்றாம் மகள் சுமத்திரையும் திருமணமாகி புகுந்தவீடு போனாள். அவளுக்கு இரட்டைப் பிள்ளைகள் பிறந்தபோது அவளும் இறந்துவிடவே எல்லாப் பிள்ளைகளும் தசரதன் கேதகியிடமே வளர்ந்தார்கள்.   தசரதனின் முன்னோர்களுடைய ஆஸ்தியான […]

கனலில் பூத்த கவிதை!

This entry is part 29 of 35 in the series 29 ஜூலை 2012

  ”என்னா துணிச்சல் அந்த பொம்பிளைக்கு..  ராத்திரி 10 மணிக்கு டெம்ப்போ வண்டீல ஏறிக்கிட்டு எவனோடயோ வரா… இவள்ளாம் ஒரு பொம்பிளையா…”   “அண்ணே… அந்தம்மா வண்டியில நூலு பைய ஏத்திக்கிட்டு அலைஞ்சு, திரிஞ்சு வருது பாவம்….அதப்போயி…”   “என்னடா பேசுத..நீ.. நம்ம சாதி சனம் என்ன பேசும்.. தனியா ஒரு பொம்பிளை இப்புடி சுத்திப்புட்டு வந்தா..”   “அண்ணே..போதும்னே…நிப்பாட்டுங்க…. அந்த அக்கா வந்துடப்போவுது பாவம்.. காதுல கேட்டா விசனப்படும்”   “ என்னடா.. சொம்மா ஃபீலிங்க் […]

தரிசனம்

This entry is part 28 of 35 in the series 29 ஜூலை 2012

  அம்மாவிற்கு மிகவும் பிடிக்கும் மாம்பழங்கள்.   இமாம்பசந்த், பங்கனப்பள்ளி மல்கோவா, ருமேனி என ஒவ்வொன்றின் சுவையும் எப்படி வேறென மாம்பழம் சாப்பிடும் அம்மாவின் முகமே சொல்லும்.   மாயவரம் பக்கம் அம்மாவின் அண்ணன் இருந்ததால் பாதிரியை கிறிஸ்தவப் பழம் என அதிகம் கொண்டாடுவாள்.   மடியை விட்டகலாத கன்றென நார்ப்பழங்களின் சப்பின கொட்டையை தூக்கி எறிய மனதற்றிருக்கும் எங்களை ” எச்சில் கையோடு எவ்வளவு நேரம் ” ? என ஒருபோதும் வைததில்லை அம்மா.   […]

நீர் மேல் எழுத்து (சிறுகதைகள்) – ரெ. கார்த்திகேசு

This entry is part 27 of 35 in the series 29 ஜூலை 2012

மனிதத்தைப்போலவே சிறுகதை அருகிவருகிறது. சிறுகதை கவிதையின் உரைநடை வடிவமென்பதை ஒப்புக்கொண்டால், இன்றைய படைப்புலகில் சிறுகதைகளின் இடமென்ன அதன் தலைவிதி எப்படி என்பதுபோன்ற கேள்விகளுக்கு அவசியமில்லை. பிரெஞ்சிலும், ஆங்கிலத்திலும் புதிய சிறுகதை தொகுப்புகள் வருவதில்லை அல்லது கவனம் பெறும் அளவிற்கு இல்லை. வாலிப வயதும், மனதிற்கொஞ்சம் காதலும், தனக்குக் மொழி கொஞ்சம் வளைந்து கொடுக்கிறதென்று கண்மூடித்தனமாக நம்பவும் செய்தால் கவிதை எழுத ஆரம்பித்துவிடலாமென நினைத்து எழுதுபவர்கள் பலரும் தாங்கள் அங்கே இங்கேயென்று நகலெடுத்த எழுத்து உதவத் தயங்குகிறபோது ஓடிவிடுவார்கள். […]

பொறுப்பு – சிறுகதை

This entry is part 26 of 35 in the series 29 ஜூலை 2012

வாசலில் பைக் சத்தம் கேட்டு, ரவி, படித்துக்கொண்டிருந்த நாவலை விரித்த நிலையில் குப்புற மேஜை மீது வைத்துவிட்டு எழுந்து சென்று கதவு திறக்கையில், மஞ்சு, மகேஷின் பைக்கிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தாள். பைக்கின் ஹெட்லைட் ஒளிவீசிக்கொண்டிருந்த‌தில், எதிர் வீட்டு வாச‌லில் சடகோபனும், அவர் பையன் சுந்தரும், மனைவி வசந்தியும், மகள் வினோதினியும் நின்றிருந்த‌து தெரிந்த‌து. சடகோபனும் அவர் மனைவியும் எப்போதும் போல் சினேகமாய் சிரித்தார்கள். “ஹாய், ரவி” “ஹாய் மகேஷ், பாத்து ரொம்ப நாள் ஆச்சு. எப்படி இருக்கீங்க?” […]