கவிஞர் இளம்பிறைதேர்ந்தெடுத்த கவிதைகள் டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பில்!

This entry is part 6 of 8 in the series 30 ஜூன் 2019

_லதா ராமகிருஷ்ணன் சங்கத் தமிழ்க் கவிதைகள் தொடங்கி சமகாலத் தமிழ்க்கவிதைகள் வரை ஆர்வமாக மொழிபெயர்த்து வருபவர் டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன். இதுவரை அவரது ஆங்கில மொழிபெயர்ப்பில் நான்கைந்து தொகுப்புகள் வெளியாகியுள்ளன. அவர் மொழி பெயர்த்து வெளியாகாமலிருக்கும் கவிதைகளும் நிறையவே. கவிஞர் உமா மகேஸ்வரியின் கவிதைகள் இவருடைய ஆங்கில மொழிபெயர்ப்பில் ஒரு தொகுப்பாக கணையாழி பதிப்பகத்தால் வெளியிடப் பட்டது. இப்போது தமிழ்க்கவிதையுலகில் தனக்கென ஒரு இடத்தைத் தக்கவைத்துக்கொண்டுள்ள கவிஞர் இளம்பிறையின் 75 தேர்ந்தெடுத்த கவிதைகள் டாக்டர் கே.எஸ்ஸின் மொழிபெயர்ப்பில் LINGERING […]

எறும்புகளின் சேனை – பூமா ஈஸ்வரமூர்த்தியின் புதிய கவிதைத்தொகுப்பு

This entry is part 7 of 8 in the series 30 ஜூன் 2019

(50 குறுங்கவிதைகள் – (ஆங்கில மொழிபெயர்ப்புகளோடு) இப்போது அமேஸான் –கிண்டில் மின் நூல் வடிவிலும் ஆங்கில மொழிபெயர்ப்பு AMAZON PAPAERBACK வடிவிலும் வெளிவந்திருக்கிறது! விரைவில் ANAAMIKAA ALPHABETS வெளியீடாக இருமொழித் தொகுப்பாக வழக்கமான நூல்வடிவி லும் கிடைக்கும்) Kindle Price (US$): $1.89 Kindle Price (INR): Rs. 138.00 includes free international wireless delivery via Amazon Whispernet ANTS’ BRIGADE: Poems by Booma Eswaramoorthy(A Renowned Tamil Poet rendered in […]

சென்னையில் மாபெரும் மூன்றாம் உப்பு நீக்கி குடிநீர் அனுப்பு நிலையம் நிறுவிடத் திட்டம்

This entry is part 8 of 8 in the series 30 ஜூன் 2019

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா[ கட்டுரை : 3 ] +++++++++++++++ சூரிய வெப்ப உப்பு நீக்கி நிலையம்,சீரிய முறையில் கடல்நீரைக் குடிநீராக்கும் !தமிழகக் கடற்கரை  நீளம்குமரி முதல் சென்னை வரை நானூறு மைல் மேற்படும். !ஏரி இல்லா,  ஆறில்லா நீரில்லா ஊர் பாழ் !  பேரளவு நிதி அரசுக்கு தேவை. ஊராட்சி, நகராட்சி மாநில ஆட்சி பாரத தேசத் திட்ட நிபுணர் வேர்வை சிந்தி, நிதி திரட்டி  போர் வினைபோல் புரியக் கிளம்புவீர்.  பேரு ழைப்பே  பெரும்பயன் தரும்.புவிக்கடல் சூடேறி வறட்சி ஒருபுறம்  எரிக்குது. தவிக்கும் மக்கள் இன்று கேட்பது […]

கானல் நீர்

This entry is part 5 of 8 in the series 30 ஜூன் 2019

அலைமகன்  01 ராமேஸ்வரத்தில் அது கோடை காலத்தின் தொடக்கம். அதிகாலை இன்னும் முழுதாக மாறிவிடவில்லை. சூரிய வெளிச்சம் அப்போதுதான் படர தொடங்கியிருந்தது. கிழவருக்கு எப்போதோ விழிப்பு வந்துவிட்டது. என்றாலும் அவர் படுக்கையை விட்டு இன்னும் எழுந்திருக்கவில்லை. இப்போதெல்லாம் அவருக்கு வெள்ளனவே விழிப்பு வந்துவிடுகிறது. இரவிலும் அவர் நன்றாக தூங்குவது இல்லை. எல்லாவற்றையும் போல நித்திரையும் அவரது கைகளை விட்டு மெல்ல மெல்ல சென்றுகொண்டு இருக்கிறது. முன்பெல்லாம் அவர் அதிகாலையில் எழுந்து கடலை வெறித்து பார்த்துக்கொண்டு இருப்பார். கடலில் […]

மொழிப்போர்

This entry is part 4 of 8 in the series 30 ஜூன் 2019

கௌசல்யா ரங்கநாதன்     ………-1-இப்போதெல்லாம் என் நினைவுத்திறன் மங்கிக் கொண்டு வருவது நன்றாய் பு¡¢கிறது எனக்கு..அகவை 80+ கடந்ததால் இருக்குமோ!சமீபத்தில் வீடு மாறிய நான்,  கை தவறுதலாய் என் ATM  கார்டை எங்கேயோ வைத்துவிட்டு தேடிக்கொண்டிருக்கிறேன் சில நாட்களாய்..இன்று வங்கியில் என் கணக்கில் என் மாதாந்திர ஓய்வூதியம் வரவு வைக்கப்பட்டிருக்கும் என்பதாலும்,  கைச்செலவுக்கு பணம் தேவைப்பட்டதாலும் ,ATM  கார்ட் இல்லாமல் என்ன செய்ய முடியும்?வங்கியோ வீட்டிலிருந்து 5 கி.மீ.. தொலைவில் இருப்பதால், நோ¢ல் சென்று பணம் எடுப்பதும் […]

அருங் காட்சியகத்தில்

This entry is part 3 of 8 in the series 30 ஜூன் 2019

கு.அழகர்சாமி எதனின் நீந்த மறந்திருந்த- அதனின் நட்சத்திர மீன் நீந்த ஆரம்பிக்க- எதனின் இறந்து உலர்ந்திருந்த- அதனின் கடற் குதிரை மிதந்து மேல் தலை நீட்ட- எதனின் உதிர்ந்த பல்லோ- அதனின்  குதிரை கனைத்துக் கிளம்ப- எதனின் கயிறு கட்டிப் போட்ட- அதனின் படகு கயிறறுத்து கடலில் பயணிக்கத் தொடங்க- அதில் கிடந்த எதனின் முதுகெலும்போ- அதனின் டால்ஃபின் கடலில் துள்ளிக் குதிக்க- வேடிக்கை பார்க்கும் எதனின் நான்- அதனின் குரங்கை விநோதாமாய்த் தேட- எதனின் மறைகின்ற […]

கனடாவைப் பற்றி எனது தமிழ்ப் பாடல்கள்

This entry is part 2 of 8 in the series 30 ஜூன் 2019

கனிவுள்ள திண்ணை வாசகருக்கு,தேசிய நினைவு நாள், வருகிற ஜுலை முதல் தேதிக்கு கனடாவைப் பற்றி எனது தமிழ்ப் பாடல்கள் இரண்டைப் பாடவோ, ஆடவோ நமது தமிழ் இளம் மாணவரைத் தயார் செய்ய கனடா பேரறிவிப்பு நிறுவகம் முற்படுகிறது.முதல் தமிழ்ப் பாடல் :  கனடா தேசீய கீதம் இரண்டாவது கும்மி / கோலாட்டப் பாடல் இவற்றை வீடியோவாக எடுத்தால்  CBC NEWS  [Canada Broadcasting Corporation News Media] வெளியிடுவதாகச் சொல்கிறது  கனடா தேசீய கீதம் தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா ++++++ […]

இரங்கற்பா

This entry is part 1 of 8 in the series 30 ஜூன் 2019

கவிதை ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) அறுநூறு பக்க மொழிபெயர்ப்பில் ஆறேழு குறையை தன் முதுகைப் பார்த்தறியா எள்ளலும் காழ்ப்பும் மனம் நிரம்பி வழிய அதற்கென்றே தயாரிக்கப்பட்ட பூதக்கண்ணாடியும், மடிக்கணினி ஃபைண்டருமாய் அடிக்கோடிட்டுக் காட்டி அத்தனை உழைப்பையும் ’அள்ளித்தெளித்த கோலமா’க்கிவிடலாம்.  சில சக மொழிபெயர்ப்பாளர்கள் அவர்களை வழிமொழியும் சகாக்கள் சீடர்கள் தொண்டரடிப்பொடியார்கள் உட்பட அவரிவரெவரெவரெல்லாமோ ‘அசால்ட்டாய்’ எட்டியுதைப்பதற்கென்றே வரம் வாங்கி வந்திருக்கிறார்கள் அரைக்காசுக்குக்கூட ஆர்வமாய் தமிழில் மொழிபெயர்த்துக்கொண்டிருப்பவர்கள்