author

ஓரினச்சேர்க்கையும் ஹிந்து மரபும்

This entry is part 8 of 32 in the series 15 டிசம்பர் 2013

சுழியம் தற்பால்ச்சேர்க்கை குறித்த விவாதங்களை ஆங்கில ஊடகங்கள் தூண்டி வைத்துள்ளன. அமெரிக்க இடதுசாரிகளாலும், வலதுசாரிகளாலும் போஷிக்கப்படும் அரசுசாரா நிறுவனங்களின் பிரச்சாரப் பீரங்கிகளாகச் செயல்பட உருவாக்கப்பட்டவை இந்த ஊடகங்கள். அவை தங்கள் கடமையைச் செவ்வனே செய்கின்றன. நமக்கும் ஒரு இயல்பான கடமை இருக்கிறது. இந்தப் பிரச்சினையில் ஊடகங்களின் நோக்கங்களைத் தாண்டிச் சிந்திக்க வேண்டிய அந்த அறிதல் எனும் கடமையை, அறிவின்பம் இயல்பாகவே உருவாக்குகிறது. இக்கடமையின் வழி இவ்விஷயத்தில் பல்வேறு தரப்புக்கள் குறித்த புரிதலை நாம் அடையவேண்டும். எதிர்ப்பவர்களே இந்த […]

நிஜம் நிழலான போது…

This entry is part 3 of 26 in the series 8 டிசம்பர் 2013

  விஜயலஷ்மி சுஷீல்குமார் நெஞ்சம் படபடவென்று அடித்துக்கொண்டு, உடம்பில் ஒருவித நடுக்கம் வந்து, என்னால் வார்த்தைகளை வெளியிடமுடியாது தொண்டைக்குழியை அழுத்தியது. மனமோ நேர்மாறாக “என்ன? ஏன்? எதற்கு? எப்படி? எப்போ? நிஜம்மாவா?” இப்படி எல்லாவிதமான கேள்விகளும்; அகராதியில் உள்ள அத்தனைக் கேள்விகளும் ஒன்றையொன்று பற்றிப் பிணைந்து, என்னைச் சூழ்ந்தது, ஆனால் விடைதான்… கிடைக்கவில்லை. இன்று, இப்போது கோமதி இவ்வுலகில் இல்லை என்று கேட்டதில் இருந்து என் நிலையைச் சொல்லமுடியவில்லை.. இந்த மூன்று மாதமாக வேலை காரணமாக வெளியூருக்குச் […]

வெள்ளை யானை ( தலித் இலக்கியத்தில் மேலும் ஒரு தடம் ! )

This entry is part 12 of 26 in the series 8 டிசம்பர் 2013

வில்லவன் கோதை செவிவழி சொல்லப்பட்ட ( நூல் ஆசிரியர்க்கு.) ஒரு சேதி நெடு நாட்களாக புதைந்து புல்மண்டிக்கிடந்த ஒரு சமூகத்தின் கல்லரையை கண்களுக்குப் புலப்பட வழி செய்திருக்கிறது . மதராசப்பட்டின வரலாற்றுச் சுவடுகளில் எழுதமறந்த தலித்துகளுக்கான இடத்தை தொட்டுக் காட்டியிருக்கிறது ஜெயமோகனின் வெள்ளையானை. அழுத்தமான தரவுகளற்ற புனைவு என்றாலும் இந்த வரலாறு இப்படித்தான் இருந்திருக்கக்கூடுமென்ற உணர்வை ஒரு கோட்டுச்சித்திரமாக இன்றைய தலைமுறைக்கு வெள்ளையானை விதைத்திருக்கிறது. சென்னை கடற்கரைச்சாலையில் விவேகாநந்தர் இல்ல நிறுத்தத்தில் இறங்க பேரூந்துகளில் இன்னும் ஐஸ் […]

பெண்களும் வர்க்கமும் – சங்க இலக்கியங்களை மையமாகக் கொண்ட ஆய்வு

This entry is part 10 of 26 in the series 8 டிசம்பர் 2013

பேராசிரியை அம்மன்கிளி முருகதாஸ் கிழக்குப்பல்கலைக்கழகம், இலங்கை மனிதசமூகத்தில் அதிகாரக்கட்டமைவு என்பது காலந்தோறும் நிலையான ஒன்றாகவே காணப்படுகிறது. சமத்துவ சமுதாயம் என்பது பெரும்பாலும் சொல்லளவிலேதான் உள்ளது. ஆண்டான்-அடிமை ஏழை -பணக்காரன் முதலாளி -தொழிலாளி ஆண்-பெண் என்ற வேறுபாடுகள் பொருளாதாரத்தினால் கட்டமைக்கப்பட்டவை. பொருளாதார அதிகாரத்திலுள்ளோர் தம்மிலும் அதிகாரத்தில் குறைந்தோரை ஆட்டிப்படைத்தலும் பொருளாதார அதிகாரமற்றோர் அதிகார முடையோரைப் பார்த்துப் பயப்படுவதும் அடிபணிந்து வாழ்தலும் இயல்பான நடவடிக்கைகளாக என்றும் காணப்படுகின்றன. சங்க இலக்கியக் கோட்பாடான திணைக்கோட்பாடானது அக்கால சமூகத்தின் பொருளாதார அசமத்துவ நிலையைப் […]

கொட்டுப் பூச்சிகளும் ஒட்டடைகளும்

This entry is part 13 of 26 in the series 8 டிசம்பர் 2013

நானும் பல்லியும் கரப்பானும் சாம்பல் மற்றும் கறுப்பு நிற கொட்டுப்பூச்சிகளும் ஒட்டடைகளும் என இது நகர்கிறது……………………. என் விடியலின் போது நீ தூங்கிக் கொண்டிருக்கக்கூடும்… உன் பக்கத்தில் என்னால் கற்பனை செய்ய முடியாது போன எவனோ ஒருவன்…………. என் நிலவை உனக்கு பரிசளிக்க நினைத்தால் உன் கடற்கரையில் உங்கள் இருவரின் நிழல் உலவும்… ஆனால் காற்று வீசாது…. அலைகளும் சண்டை பிடிக்காது மூச்சு வாங்கி முழி பிதுங்கி நிற்கும். என்னையும் உன் போல் மாற்ற நீ எடுக்கும் […]

ஊடகங்களின் கதாநாயகர்கள் – ABCD (American Born Confused Desi) (கேரளா, இயக்குநர்- மார்ட்டின் பிரக்காட்)

This entry is part 2 of 26 in the series 8 டிசம்பர் 2013

ஷைன்சன்        அன்னா ஹஸாரே எப்படி சில நாட்களுக்குள்ளாக இந்தியாவின் மிக முக்கியமான நபராக மாறி, அதே வேகத்திலேயே மறக்கப்பட்டும் போனார்? பெண்களுக்கு எதிரான குற்றம் அதிகரித்து வரும் இந்திய நாட்டில் நிர்பயாவின் மீதான வன்முறை மட்டும் எப்படி நாட்டின் மனசாட்சியை உலுக்கும் ஒரு சம்பவமாய் மாறிப்போனது? நாடெங்கும் பல கொலைக்குற்றங்கள் நடக்கின்ற போது நொய்டா இரட்டைக் கொலை மட்டும் எப்படி நாடு முழுக்க பிரபலமானது? பத்து வருடங்களுக்கு முன்பு நாட்டின் மனசாட்சியை உலுக்கிய குஜராத் […]

நத்தை ஓட்டுத் தண்ணீர்

This entry is part 1 of 26 in the series 8 டிசம்பர் 2013

முனைவர் ந.பாஸ்கரன், சங்கு சிற்றிதழின் ஆசிரியர் ஒரு நாள்; இந்நூலுக்கு ஓர் அறிமுகம் எழுதுங்கள் என்று என்னிடம் கொடுத்தார்.வழக்கம் போல் தவிர்த்தும், அவர் வழக்கம் போல் திணித்தும் சென்று விட்டார். இரண்டு தினங்கள் கழித்து அப்புத்தகத்தை எடுத்தேன். படித்தேன். படித்துக்கொண்டே இருந்தேன். மிக விருவிருப்பாக நகர்ந்தது. ஹரணியின் கவிதைகளைக் கதைகளைப் படித்து மகிழ்ந்திருக்கிறேன். இப்பொழுதுதான் அவரது உரைநடையைப் படிக்கின்றேன். அவரது உரைநடையின் வீச்சு என்னை வெகுவாகப் பாதித்தது. அவரது உரைநடை என்னுள் நடந்தது என்பதைவிட நாட்டியமாடியது என்றுதான் […]

ஆனாவும் ஆவன்னாவும் !-திரு பி ஏ கிருஷ்ணன் எழுதிய அறிவியலும்தொழில் நுட்பமும் ஒன்றா என்ற கட்டுரையின் எதிர்வினை

This entry is part 3 of 29 in the series 1 டிசம்பர் 2013

28 நவம்பர் 2013 தி இந்து தமிழ் நாளிதழில் அறிவியல் எழுத்தாளி திரு பி ஏ கிருஷ்ணன் எழுதிய அறிவியலும்தொழில் நுட்பமும் ஒன்றா என்ற கட்டுரையின் எதிர்வினை .   வில்லவன்கோதை தமிழக அரசு பதிப்பித்த 10-ம் வகுப்புத் தமிழ்ப் பாடப்புத்தகத்தில் ‘தமிழ் மொழியில் அறிவியல் சிந்தனைகள்’ என்ற பாடம் இருக்கிறது. அதில் வரும் வரிகள் இவை: ‘தமிழ் இலக்கியத்தை நுண்ணிதின் ஆய்கின்றபோது எத்துணையோ அறிவியல் கருத்துக்கள் ஆழப் புதைந்துகிடப்பதனை அறியலாம். அறிவியல் வளர்ச்சி மிகுந்த காலம் […]

புதிய தளம் சஞ்சிகை வெளியீடும் ஆய்வும்

This entry is part 27 of 29 in the series 1 டிசம்பர் 2013

புதிய பண்பாட்டுத் தளத்தின் வெளியீடான புதிய தளம் சஞ்சிகை வெளியீடும் ஆய்வும் எதிர்வரும் 05-12-2013(வியாழக்கிழமை) அன்று கொழும்பு தமிழ் சங்கத்தின் வினோதன் மண்டபத்தில் நடைப்பெறும். மூத்த படைப்பாளி நீர்வை பொன்னையன் தலைமையில் நடைப்பெறும் இந்நிகழ்வில் திரு. லெனின் மதிவானம் வரவேற்புரை நிகழ்த்த ‘புதிய பண்பாட்டுத் தளம் பற்றி” என்ற தலைப்பில் கலாநிதி ந. இரவீந்திரன் உரையாற்றுவார். ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியின் துணைப் பீடாதிபதி வ. செல்வராஜா சஞ்சிகைப் பற்றி ஆய்வுரை நிகழ்த்துவார்.

கவிஞர் வ. ஈசுவரமூர்த்தியின் கவிதையில் மறுமலர்ச்சி சிந்தனைகள்

This entry is part 2 of 29 in the series 1 டிசம்பர் 2013

  சி. ஆரோக்கிய தனராஜ் தமிழ் முனைவர் பட்ட ஆய்வாளர் தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி திருச்சிராப்பள்ளி – 620 002. தொடக்கம் பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றி இருபதாம் நூற்றாண்டில் முழுமையான இலக்கிய வளர்ச்சி அடைந்த இலக்கிய வகை வாழ்க்கை வரலாற்று இலக்கியமாகும். இது மேலை நாட்டினரின் வருகைக்குப் பிறகு உரைநடை வடிவில் சிறுதை, புதினம், உரைநடை, வசன கவிதை, உரைவீச்சு ஆகியன வகைமையில் வளர்ச்சி பெற்றன. 2004ஆம் ஆண்டு கவிஞர் வ. ஈசுவரமூர்த்தி தமது வாழ்வியல் […]