author

‘எனது பர்மா குறிப்புகள்’ ‍பற்றிய ஒரு வாசகனின் சில‌ குறிப்புகள்

This entry is part 3 of 32 in the series 13 ஜனவரி 2013

ப குருநாதன் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன் செ. முஹம்மது யூனூஸின் ‘எனது பர்மா குறிப்புகள்’ என்ற நூலின் தொகுப்பாளர் நண்பர் மு இராமனாதன் என்னிடம் இந்த நூலைப் பற்றி ஹாங்காங்கில் பிறகு நடக்கவிருந்த அந்த நூலின் வெளியீட்டு விழாவில் பேச வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அப்பொழுது இந்நூல் வெளியிடப்பட்டிருக்கவில்லை. முதல் பதிப்பு அச்சில் இருந்தது. ஆதலால், நூலைப் பற்றி நான் அதைப் படித்துவிட்டு பேசுவதற்காக, நூலின் வரைவுப்பிரதியை மின்னஞ்சல் மூலம் எனக்கு அவர் அனுப்பி வைத்தார். […]

சாய்ந்து.. சாய்ந்து

This entry is part 28 of 32 in the series 13 ஜனவரி 2013

– முஷாரஃப் முதுநபீன் (முஷாஃபி),   அன்று கல்லூரியின ‘பெயார்வெல் டே’. நண்பர்கள் எல்லோரும் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி பிரியாவிடை பெற்றுக் கொண்டிருந்தனர். எல்லோர் கையிலும் ஒரு ‘ஆட்டோகிராப்’ இருந்தது. ஒரே படபடப்புடன் காணப்பட்டாள் சைந்தவி. அவளின் கண்களோ ஆகாஷைத் தேடியது. ஆகாஷ் சைந்தவிக்கு ரொம்ப நெருக்கமானவன். ஆனால் இவர்கள் இருவருக்குமிடையில் ரொம்ப பெரிய இடைவெளி இருக்கும். ஆகாஷை தூரத்தில பார்த்தாளே சைந்தவி குஷியாகிவிடுவாள். கூடவே பதற்றமும் தொற்றிக் கொள்ளும். ஒரே கல்லூரி என்ற படியால் ஆகாஷும் சைந்தவியும் […]

சாதி….!

This entry is part 20 of 32 in the series 13 ஜனவரி 2013

மலை மங்கை   என் மனைவி சுமி போன்செய்திருந்தாள். இன்று கீதனை படசாலையிலிருந்து வீட்டுக்கு கூட்டிச்செல்லும்படி. தனக்கு அலுவலகத்தில் அவசர வேலை இருப்பதால் என்னைத்தான் மகன் கீதனை அழைத்துச்செல்லும்படி அன்புக்கட்டளை  இட்டிருந்தாள். இரண்டு மணித்துளிகள் விடுப்பு எடுத்துக்கொண்டு கீதனின் பாடசாலைக்கு விரைந்தேன். கீதன் அங்கு என்னை எதிர்பார்க்கவில்லை என்பது என்னைக்கண்டதும் அவன் முகம் மாறியதிலிருந்து என்னால் உணரமுடிந்தது. “Where is mum? What happened to her? …” அவன் கண்கள் அங்கும் இங்கும் அலைபாய்ந்தன. கீதனுக்குப்பக்கத்தில் […]

பொல்லாதவளாகவே

This entry is part 18 of 32 in the series 13 ஜனவரி 2013

கோமதி நடராஜன் அநியாயங்களைச் ,சகித்துக் கொண்டே போனேன் . நல்லவளானேன் . சகிப்பு தொலைந்து , நிமிர்ந்து பார்த்தேன் கெட்டவளாய் ஆனேன் நக்கல்களை ,நல்லவிதமாய், எடுத்துக் கொண்டே நகர்ந்தேன் நம்மவள் ஆனேன். ஏனென்று ஏறெடுத்துப் பார்த்தேன். யாரோ என்றானேன் . பொய்யென்று தெரிந்தும், பொறுத்துப் போனேன் ஏற்றவளானேன் நம்பாத முகம் காட்டினேன் தகாதவளானேன் நல்லவளாய் ஏற்றவளாய் இனியவளாய் என்றுமிருக்க நல்லவை அல்லாதவைகளைப், பொறுத்துப் போனால்தான் சாத்தியமென்றால் , பாதகமில்லை ! நான் ,பொல்லாதவளாகவே இருந்துவிட்டுப் போகிறேன். ————————–

இட்லிப்பாட்டி

This entry is part 9 of 32 in the series 13 ஜனவரி 2013

குழல்வேந்தன் ஆலயம் செல்வது சாலவும் நன்றாம். ஆனால் எனக்கோ? கோயில் வழிபாடு,பிரகாரம் சுற்றல், நேர்த்திக் கடன் செலுத்துதல் இவற்றிலெல்லாம் நம்பிக்கையோ ஈடுபாடோ இருப்பதில்லை. ஆனாலும் சடங்குகள், சம்பிர்தாயங்கள், பழக்க வழக்கங்கள் இவைகளிலிருந்து தம்மைக் கடவுள் நம்பிக்கையற்றவர்கள் எனப் பறை சாற்றிக்கொள்ளும் பகுத்தறிவாளர்களால் கூட தப்பமுடிவதில்லை என்கிறபோது என்னால்மட்டும் எப்படி தப்பமுடியும்? அதிலும் நானோ? ஒருத்தர் இல்லைங்க; மத்தளம் மாதிரி ரெண்டு பேருக்குக் கட்டுப் பட்டவன். நம்ம பாரதி வேற ‘தையலரை உயர்வு செய்’ அப்படினு சொல்லி இருக்கப்போ! […]

‘கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நூல் வெளியீடு

This entry is part 6 of 32 in the series 13 ஜனவரி 2013

அன்பினிய நண்பர்களுக்கு , 26-1-2013 அன்று புதுவையில் நடைபெறவிருக்கும் ‘கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நூல் வெளியீடு அழைப்பிதழை இணைத்துள் ளேன் அனைவரும் வருக. பணிவுடன் நா.கிருஷ்ணா

கணேஷ் vs மூன்றாம் பேரரசு – நாடக அறிமுகம்

This entry is part 2 of 32 in the series 13 ஜனவரி 2013

BEN BRANTLEY இப்போதெல்லாம், நாடகங்களுக்கு சென்றபோது மிகுந்த ஆர்வத்துடன் உங்களுடைய எதிர்வினைகளை நீங்களே கேள்வி கேள்வி கேட்டிருப்பதும், மறு சிந்தனை செய்திருப்பதும் அதிகம் இருக்காது. சுயபரிசோதனை என்னும் கலை, இப்போதெல்லாம் பழகிப்போய், அதிர்ச்சி கூட ஏற்படுத்துவதில்லை. ஆனால், பரிசோதனை நாடகங்களின் ராடார் விழாவின் கீழ் திறக்கப்பட்டுள்ள “கணேஷ் vs மூன்றாம் பேரரசு” (Ganesh Versus the Third Reich – இதில் மூன்றாம் பேரரசு என்பது ஹிட்லரின் அரசாட்சியை குறிக்கிறது) என்ற குறிப்பிடத்தகுந்த நாடகம், அதில் நடப்பதையெல்லாம் […]

வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -1 பாகம் -1 மூன்று அங்க நாடகம் [முதற் காட்சி]

This entry is part 26 of 32 in the series 13 ஜனவரி 2013

  ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++++++ 1.  [ http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=kjvJ7dRjJbs ]     2.  [ http://www.youtube.com/watch?feature=player_embedded&v=cN_0xW87fdU  ] The Devils Disciple Presented by Neptune Theatre பெர்னாட் ஷாவின் “வேதாளத்தின் மாணாக்கன்” நாடகம்  அமெரிக்காவில் நேர்ந்த 1777 ஆண்டு “சுதந்திரப் போரின்” [American War of Independence] சமயத்தில் நடந்ததாக எழுதப் பட்ட ஒரு கற்பனை நிகழ்ச்சி.   பிரிட்டீஷ் காலனி அதிகாரி கைது செய்து  தூக்கில் […]

அற்புதங்கள் உடைப்பு: ஏன் புனித நீரை சாக்கடையிலிருந்து கண்டுபிடித்தேன்?

This entry is part 34 of 34 in the series 6 ஜனவரி 2013

சணல் எடமருக்கு/ ஜான் வொயிட் நியூ சயண்டிஸ்ட் இதழுக்காக ஜான் வொயிட் பேட்டி சமீபத்தில் மும்பையில் நீங்கள் ஆராய்ச்சி செய்த ”அற்புதம்” என்ன? மும்பையில் இருக்கும் அவர் லேடி ஆஃப் வேளாங்கண்ணி சர்ச்சை சார்ந்த மதகுருக்களும், கத்தோலிக்க மதத்தை சார்ந்த மக்களும், இயேசுவின் காலடியிலிருந்து வழியும் தண்ணீர் கடவுளின் ஒரு அற்புதம் என்று பிரச்சாரத்தை மேற்கொண்டனர். நூற்றுக்கணக்கான கத்தோலிக்கர்கள் இந்த ஒழுகும் தண்ணீரை சேமித்து அதனை குடித்தார்கள். இந்த தண்ணீர் தங்களது எல்லா நோய்களையும் தீர்க்கும் என்று […]

பத்து நாட்கள்

This entry is part 32 of 34 in the series 6 ஜனவரி 2013

முஷாரஃப் முதுநபீன் (முஷாஃபி) கார்த்திக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அவனது கல்லூரியின் கல்விச் சுற்றுலா அடுத்த நாள் தொடங்குகிறது. பத்துநாள் சுற்றுலா. எல்லே நீர்வீழ்ச்சி, ஹக்கல பூந்தோட்டம், காலிமுகத்திடல், பேராதனைப் பூங்கா, யாழ் நூலகசாலை என இலங்கையின் முக்கியமான இடங்களுக்கெல்லாம் பயனிக்கவிருக்கிறது சுற்றுலா குழு. சுமார் 2 மாதங்களாகவே சுற்றுலா பற்றிய பேச்சுக்கள் கல்லூரியைஆக்கிரமித்திருந்தன. பெயர் பதிவுசெய்தல்,பணம் அறவிடுதல், சுற்றுலாவுக்குத் தேவையான பொருட்களைச் சேகரித்தல், கையேடுகளை பிரசுரித்து மாணவர்களுக்கு சுற்றுலா பற்றி அறிவூட்டல் என சுற்றுலாவுக்கு அனைவருமே […]