குணா (எ) குணசேகரன் பிறந்தவுடன் புரிந்ததில்லை புரிவதெது தெளியவில்லை தெளிந்தவுடன் புரிபட்டவை… புரிபட்டதாய் தெளிவதில்லை அர்த்தம் பொதிந்த வார்த்தைகள் யார் பொதித்த அர்த்தங்கள் நமக்கு பொதிப்பவர் கிளிப்பிள்ளை நாம் பேசுவதில் பரிபாஷை உணர தலைப்பட்டவர் நிறுத்துவதில்லை உணர்ந்து பட்டவர் பேசுவதில்லை பன்மொழிக் கலப்படங்கள் பளபளக்கும் உருமாற்றம் இணை தேடும் காலத்து பெரிது படா சாத்திரங்கள் இன்னதுக்காய் உணர்ந்ததில்லை இன்னதென்று உணர்வதுமில்லை வாழ்வதற்கு வரையறைகள் […]
கல்லிடை சொற்கீரன். மெலி இணர் நவிரல் ஒள் வீ சிதற வான் அதிர் உடுக்கள் வெள் நிலம் வீழ்ந்து பரந்து விழி விழி உறுத்து வியத்தல் அன்ன நின்னைக்கண்டு நெடுவெளி ஊழ்க்கும் மணியிழாய். வெங்கல் அருங் கடம் சென்றான் ஆங்கு மீள்வழி நோக்கி னப்பரவை உன் விழி அம்பு கூர்த்த வடுக்கள் எண்ணி எண்ணி புள்ளியிட்டாய் . அதனை அழித்திட வருவான் என்னே. கலங்கல் மன்னே.காலையும் விரியும். ——— பொழிப்புரை — மெல்லிய பூங்கொத்து உடைய முருஙகை மரத்தின் ஒளிசிந்தும் சிறு […]
குணா துயரம் என்பது எண்ண ஓட்டம் அது உன்னை செயலிழக்க கூடாது மகிழ்ச்சி என்பது தற்காலிக குதூகலிப்பு அது உன்னை செயலற கூடாது சந்தோஷம் கூடி இருக்க கொண்டாட்டம் அதுவே குரூரங்களின் கூடாரமாக கூடாது சலனங்கள் நினைப்புகளின் வித்து அது சஞ்சலங்களாய் தலை தூக்க கூடாது துக்கம் கடந்த கால நினைவலைகள் அது கடந்து போக வேண்டியது கோபம் இயலாமையின் உச்சகட்டம் நிதானத்தால் தவிர்க்க வேண்டியது பொறுமை பக்குவத்தின் […]
தேனி.சீருடையான். நூல் மதிப்புரை. காத்திருப்பு. ஜனநேசன். சிறுகதைத் தொகுப்பு. அன்னம் பதிப்பகம். பக்கம் 160 விலை ரூ, 150/ எழுத்தாளர் ஜனநேசன் அவர்களின் ஏழாவது சிறுகதைத் தொகுப்பு “காத்திருப்பு.” இருபது கதைகள் இருக்கின்றன. முக்கியமான பருவ ஏடுகளிலும் இணைய இதழ்களிலும் பிரசுரமாகி வாசகப் பரப்பைச் சென்றடைந்திருக்கின்றன. அதில் ஒரு கதை (காத்திருப்பு) இலக்கியச் சிந்தனைப் பரிசையும் வென்றிருக்கிறது. அவரின் முப்பதாண்டுகால எழுத்து இயக்கத்தில் ”ஏலோ….லம்” என்ற நாவலும் ஜனித்திருக்கிறது. வாழ்தலும் வாழ்தல் நோக்கமும் உள்ளடக்கப் […]
ரோகிணி கனகராஜ் உன் மௌனமும் என் சொற்களும் சண்டைப்போட்டுக் கொள்கின்றன… என்சொற்களின்குரல் ஓங்கிஓங்கி ஒலிப்பதும் உன்மௌனத்தின்குரல் அமுங்கிஅமுங்கிஒலிப்பதும் இரவுமுழுதும் கொட்டித் தீர்க்கும் மழையென நடந்துகொண்டுதான் இருக்கிறது… இது ஒன்றும் குருசேத்திரப் போரில்லை… உனக்கும் எனக்குமான சின்ன மனப்போர்… இந்தப்போருக்குத் தேவையான நிலப்பரப்பென இருப்பது ஒருசிறு கட்டில்தான்…. ஒருகட்டத்தில் என் சொற்களுக்கு அலுப்புத் தட்டிப் போர்களத்தில் பின்வாங்கும் போர்வீரனென ஓய்ந்துபோக என் சொற்களையும் உன் மௌனத்தையும் புறந்தள்ளி சிறுகுழந்தையென நடுவே வந்துப்படுத்துக்கொள்கிறது அதுவரை […]
ஜனநேசன் 6 மூன்றாம் நாள் வீட்டை அடைந்தான். என்றுமில்லாத வழக்கமாய் அம்மாவின் இருகைகளைப் பிடித்துக் கொண்டு முகத்தைப் பார்த்தான். மனம் உருகி கண்ணீர் கசிந்தது. அம்மா அவனது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவளது இடுங்கிய கண்கள் இவனது முகத்தை ஊடுருவியது. இவனது முகத்தில் அவளது சொந்தம் சுருத்துக்கள் நிழலாடுவதைப் பார்த்தாளோ… மனைவி மல்லிகா வந்து, “என்னங்க, அங்க எல்லாரும் நல்லா இருக்காங்களா, என்ன சொன்னாங்க” என்றபடியே கொண்டு வந்த பைகளை நோட்டமிட்டாள். அம்மா இயல்பு […]
படித்தோம் சொல்கின்றோம் : ஜூன் 09 பிறந்த தினம் கொண்டாடும் கூத்தே உன் பன்மை அழகு – கூத்த யாத்திரை முருகபூபதி “ ஈழத்தமிழ் நாடக மரபு ஆறாத்தொடர்ச்சி உடையது. அதில் தத்தம் பங்களிப்பு செய்தோரினால் அம்மரபு மேலும் செழித்து வளர்ந்துள்ளது. தம் முன்னோரின் தோளின் மீது நின்றுதான் அடுத்த நாடக தலைமுறை உலகை பார்க்கிறது. தன்னை தாங்கி நிற்பவரின் பார்வைப் புலத்திற்கு தெரியாத பல காட்சிகள் மேலே நிற்பவரின் கண்களுக்கு தெரிய […]
தெலுங்கு மூல ஆசிரியர் : பி.அஜய் ப்ரசாத் பி.அஜய் ப்ரசாத் (முழு பெயர் – பாதர்ல பிரசன்ன அஜய் ப்ரசாத்) ஆந்திரமாநிலம், குண்டூர் மாவட்டம், நகரிகல்லு கிராமத்தில் ஜூன் 9இ 1972இல் பிறந்தவர். 2005ஆம் ஆண்டு முதல் தெலுங்கில் சிறுகதைகளை எழுதி வருகிறார். இவரின் கதைத் தொகுதி 2018ஆம் ஆண்டு “லோயா மற்றும் சில கதைகள்” என்ற பெயரில் வெளிவந்திருக்கிறது. இவரின் இரண்டாவது கதைத் தொகுதி “காலி பொரலு” ஆகும். இவரின் கதைகள் ஆங்கிலம், இந்தி, […]
காற்றுவெளி(கவிதைச் சிறப்பிதழ்)ஆனி 2022வணக்கம்,காற்றுவெளி ஆனி(2022) இதழ் கவிதைச்சிறப்பிதழாக உங்கள் பார்வைக்கு வருகிறது.படைப்பாளர்களுக்கு எமது நன்றி.இந்த இதழை அலங்கரிப்பவர்கள்:கவிதைகள்: ஆர்த்திகா சுவேந்திரன் பாரதிசந்திரன் துவாரகன் சித்தாந்தன் சபாபதி இயல்வாணன் சாந்தக்கண்ணா சரஸ்வதிராசேந்திரன் சுகன்யா ஞானசூரி ஆனந்த குமார் ஐ.தர்மசிங் ந-சிறீதரன் சாந்தி […]
பின்னூட்டங்கள்