author

ஜென்

This entry is part 11 of 43 in the series 17 ஜூன் 2012

  ஜென் என்றால் என்ன? இப்படி கேள்வி கேடபதே ஜென். கேள்வியே இல்லாத போது கேள்வியைத் தேடும் பதில் ஜென். கடவுள் பற்றி தியானம் செய்யும் வகுப்பில் முதலில் உட்கார்வது கடவுள். வகுப்பை துவக்குவது ஜென். பிற‌ந்து தான் வாழ்க்கையை ப‌டிக்க‌ வேண்டும். இற‌ந்து தான் வாழ்க்கைக்கு கோடைவிடுமுறை. அடுத்த‌வ‌குப்பு துவ‌ங்கும்போது புத்த‌க‌மும் புதிது. மாண‌வ‌னும் புதிது. ஆசிரிய‌ர் ம‌ட்டும் அதே ஜென். ஜென் ஒரு புதிர். ஜென்னை அவிழ்ப்ப‌தும் இன்னொரு புதிர். ம‌று ஜென்ம‌ம் உண்டு. […]

ருத்ராவின் குறும்பாக்கள்

This entry is part 18 of 41 in the series 10 ஜூன் 2012

((1) அட‌!வான‌த்தின் அரைஞாண் க‌யிறு அறுந்து விழுந்தாலும் அழ‌கு தான். “மின்ன‌ல்” (2) ஒலி தீண்டிய‌தில் சுருண்டு விழுந்தேன். க‌ண்ணாடி விரிய‌ன்களா அவை? “க‌ண்ணாடி வ‌ளைய‌ல்க‌ள்” (3) விஞ்ஞானிக‌ள் கோமாளிகள். நீ குலுங்கிய‌தில் என் இத‌ய‌ம் அதிர்ந்த‌தை பூக‌ம்ப‌ம் என்கிறார்க‌ள். “கொலுசுக‌ள்” (4) காதலின் வெற்றி என்றாலே காதலின் தோல்வியும் அது தான். “ரோஜாவின் முள்” (5) காதலில் தோல்வியுற்ற தண்ணீர்த்துளி கீழே விழுந்து சிதறி.. ஏழுவர்ண ரத்தம். “குற்றாலம்

ருத்ராவின் குறும்பாக்கள்

This entry is part 17 of 41 in the series 10 ஜூன் 2012

ஏழுக‌ண்க‌ளையும் பொத்தி பொத்தி இனிய ஓசைகளின் க‌ண்ணாமூச்சி. நாத‌ஸ்வ‌ர‌ம். எழுப‌து தாண்டி ந‌ரைத்து விட்டது. என்ன அர்த்தம் அது? “மாங்க‌ல்ய‌ம் த‌ந்து நானே” அர்ச்ச‌னை கேட்டு அலுத்து சிவ‌னும் த‌ட்டு ஏந்தி வ‌ரிசையில் நின்றான். குருக்கள் கேட்டார்”என்ன‌ கோத்ர‌ம்?” கால் வைத்து நடக்க‌ ம‌ன‌மில்லை. ந‌சுங்கிப்போய்விடாதா இத‌ய‌ம்? அவ‌ள் போட‌ கோல‌ம். ப‌வுர்ண‌மி மூன்றாம் பிறைக‌ளை ருசி பார்த்த‌து. அவ‌ள் ந‌க‌ம் க‌டித்தாள். ============================== ============ருத்ரா

என் ம‌ண‌ல் குவிய‌ல்…

This entry is part 14 of 33 in the series 27 மே 2012

நான் மணல் குவித்து வைத்திருந்தேன். நேற்று அந்த மெரீனா பீச்சில். பூநுரைகள் அடிக்கடி நக்கிக்கொண்டு போகட்டும் என்று. அதைதேடி என்கால்கள் என்னை அங்கே இழுத்துச்சென்றன. அது அங்கேயே இருக்குமா? இல்லை கரைந்திருக்குமா? வெகு நேரம் வரை தேடினேன். அக்கினிக்குஞ்சு ஒன்றை ஆங்கொரு பொந்திடை வைத்து தேடியது போல் தேடினேன். கடல் என்ன பஞ்சுக்காடா பற்றிக்கொள்வதற்கு. மணல் குவித்து வைத்தது மட்டும் மூளும் என் மனத்தீ தான். குமிழிகள் மோதி மோதி தின்றிருக்கலாம். உடைந்த கிளஞ்சல்கள். கடல் பாசிகள். […]

வேழ விரிபூ!

This entry is part 34 of 41 in the series 13 மே 2012

வள்ளி படர்த்திய வெள்வீக்கிழங்கின் மண்குழி உழற்றும் கொடும்பல் கேழல் எல்வளை நீள அளைஇ ஒளிக்கும் எலிகள் தின்ற காய்நெல் பழனம் பாசடை பைம்புனல் குண்டுநீர் ஆம்பல் குவித்தன்ன காட்டி விரிகிளர் ஊட்டும் நீள்விழிக்காடு தீப்பெய்த நீழல் நடுக்குறூஉம் காட்சி நலன் அழி செய்ய‌ மாவதிர ஓட்டிய மணித்தேர் வெற்ப‌ன் கடிவிசை வலிப்ப கதழ்பரி மள்ளல் துள்ளல் கூட்டி ஆறுவடுப்படுத்தி அலரி ஆட்டிய அந்துணர் உள்ளி நுண்சிறை வண்டினம் நுவல் இமிழ்தந்து நுண்சொல் உரைப்ப நுழைபு மெய் விதிர்த்தான். […]

நூபுர கங்கை

This entry is part 21 of 28 in the series 29 ஏப்ரல் 2012

  பழமுதிர் சோலையில் நூல் விடும் கண்ணீர் ஏன் இந்த சோக இழை? கல் மனம் உருக்கிய‌ மோனத்தின் வெள்ளி நீர்க் கொடியிது. அழகர் மலை இங்கு பாறை விரித்து அம‌ர்ந்து ப‌த்மாச‌ன‌ம் செய்த‌து. குளிப்ப‌வ‌ர்க‌ளுக்கு முதுகில் சாட்டைய‌டிக‌ள் த‌ண்ணீர்க்க‌யிற்றில். ம‌லையே போதையில் புதைந்த‌துவோ? பாட்டில்க‌ளில் டாஸ்மாக் தீர்த்த‌ம். கள்ளழகனா?கதிர் வேலனா? மெல் ஒலி உதிர்த்து நீர் நடத்தும் பட்டிமன்றம். அடர் இலையில் சுடர் மலரில் நிழல் பரப்பிய சங்கப்பலகையில் திருமுருகாற்றுப்படை இது. கொத்து கொத்தாய் குரங்குக்குட்டிகள் […]

கடவுளும் கடவுளும்

This entry is part 20 of 28 in the series 29 ஏப்ரல் 2012

  கடவுளும் கடவுளும் பேசிக்கொள்கிறார்கள். “உன்னை இருக்கிறது என்கிறார்கள் என்னை இல்லை என்கிறார்கள்” “ஆமாம் புரியவில்லை.” “இல்லையை இல்லை என்று சொன்னால் இருக்கிற‌து என்று ஆகி விடுகிற‌து” “இருக்கிற‌தை இல்லை என்று சொன்னால் இல்லை என்று ஆகிவிடுகிற‌து.” “ம‌ண்டையில் ம‌த்து க‌டைகிற‌ “அல்ஜீப்ரா” தான் க‌ட‌வுளால‌ஜி. க‌ட‌வுள் புராண‌ங்க‌ளின் ப‌டி க‌ட‌வுள்க‌ள் க‌ட‌வுள்க‌ள் க‌ட‌வுள்க‌ள் எங்குபார்த்தாலும் க‌ட‌வுள்க‌ள். எங்கு பார்ப்ப‌து? க‌ட‌வுளுக்கு தீர்வு சொன்ன‌வ‌னே ம‌னித‌ன். க‌ட‌வுள் போய்விட்டார். க‌ட‌வுள் எங்கு போனார்? ம‌னித‌ன் சொன்ன‌ இட‌த்துக்கு. […]

ஊதாப்பூக்கள் கண்சிமிட்டவில்லை

This entry is part 34 of 44 in the series 22 ஏப்ரல் 2012

  ரெட்டைச்சடையில் திராட்சைக்கண்களுடன் என்னை நீ திருடிச்சென்ற பிறகு இந்த பூங்காவே வெறுமை. பட்டுப்பூச்சிகளும் பட்டுப்போயின. காத‌லைப்ப‌ற்றி உருகி உருகிச்சொல்ல‌ காளிதாசனைத் தான் வாட‌கைக்குக்கு கூப்பிட்டேன். எழுத்தாணி துருப்பிடித்துக்கிட‌க்கிற‌து பாலிஷ் போட‌ வேண்டும் என்றான். க‌டித‌ம் எழுதினால் ஆபாச‌ம் என்பார்க‌ளே. அத‌னால் க‌விதை தொகுதி வெளியிட்டேன். இப்போது எல்லோரும் உன்னைத்தான் வாசித்து வாசித்து மேய்கிறார்க‌ள். இன்ட‌ர்னெட் ப‌ரிணாம‌த்தில் இப்போது செவியில் தான் இத‌ய‌ம். செல் விட்டு செல் தாவும் வ‌ண்டுக‌ளுக்கும் ப‌ஞ்ச‌மில்லை. உன் “ஐ ல‌வு யூ […]

தூரிகை

This entry is part 33 of 44 in the series 22 ஏப்ரல் 2012

  விரலுக்குள் மனத்தின் வானவில். கற்பனை செய்ததை கருவாக்கி உருவாக்கும் மயிர்ப்புல் தடவியதில் வனங்கள் உயிர்க்கும். முகங்கள் சிரிக்கும். பூவும் புள்ளும் புது மொழி பேசும். திரைச்சீலையில் சுநாமிகளும் தெறிக்கும். குங்குமக்கடலில் சூரியன் குளிக்கும். நாணம் கலைத்த‌ கடலெனும் கன்னி முத்தம் கொடுத்து மூடிக்கொள்ள‌ அந்தி படர்ந்து பந்தி விரிக்கும்…இது புருசுச்சுவடுகளின் புதுக்கவிதைகள் உன்மத்தம் மோனம் ஆகி உயிரைக்குழைத்த‌து அக்ரிலிக் வ‌ண்ண‌ம். அடிம‌ன‌ உட‌லை வ‌ருடிக்கொடுக்கும் அன்னச்சிறகு விரிந்து பரந்து காட்சிகள் விரிக்கும். அதன் இடுக்குகளின் கண்கள் […]

“சமரசம் உலாவும்……..”

This entry is part 38 of 41 in the series 8 ஏப்ரல் 2012

இந்துக்கள் தேசத்தில் சமரசம் ஒரு கெட்ட வார்த்தை ஆகிப்போனதன் வரலாறு என்ன? நான்கு வேதங்களும் நான்கு ரகசிய மொழிகளாய் (நான் மறை(ப்பு)களாய்) இருந்தது வெளிச்சத்துக்கு வந்ததன் காரணமே இந்த வரலாறு. இப்போது அதன் உட்பொருளை உற்றுப்பார்க்கத் துவங்கிவிட்டனர். அதுவும் ஆங்கிலச்சன்னல் மூலம் தான். இந்து மதம் உண்மையில் சிந்து மதம். சிந்து என்ற தமிழ்ச்சொல்லில் பிறந்த ஆற்றுப்படுகையின் நகர்களில் இருந்து தோன்றியது தான். ந‌க‌ர் எனும் தொழில் ஆகுபெய‌ரே இங்கு ந‌க‌ர் ஆயிற்று அதுவே தேவ நாகரியும் […]