தற்காலப் பார்வையில் திருக்குறள்

This entry is part 34 of 41 in the series 25 செப்டம்பர் 2011

திரு. பெ. சக்திவேல், உதவிப்பேராசிரியர், ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, காஞ்சிபுரம். இந்தியத் திருநாடு வள்ளுவர் காலத்திருந்த மன்னராட்சி முற்றிலும் ஒழிக்கப்பட்டு மக்களை மக்களே ஆளும் மக்களாட்சி முறை (அ) குடியாட்சி முறை சென்ற நூற்றாண்டில் நடைமுறைக்கு வந்துவிட்டது. “மாற்றம் என்பது மானுடத் தத்துவம்’ என்பார் கவியரசர் கண்ணதாசன் அவர்கள். எல்லாக் காலத்துக்கும் நிலைபெற்ற உண்மைகள்/நீதிகள் என்று ஒன்றுமே இல்லை. உண்மைகளும் நீதிகளும் காலத்துக்குக் காலம் இனத்துக்கு இனம் மொழிக்கு மொழி மாநிலத்துக்கு மாநிலம் […]

மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம்

This entry is part 29 of 41 in the series 25 செப்டம்பர் 2011

ஐம்பது வருடங்களுக்கு மேலாயிற்று. நான் எழுதிய முதல் கட்டுரையிலே நாம் தமிழ் சமூகத்திலிருந்து என்னென்ன எதிர்பார்க்க்லாம். எது அறவே தமிழ்னுக்கு சித்திக்க இயலாத குண்ங்கள் என்று குறிப்பிட்டிருந்தேன். அது தான், திரும்பச் சொல்கிறேன்,. நான் எழுத முயன்ற முதல் முயற்சி. சித்திக்க இயலாத குண்ங்கள் என்றால் இனி வருங்காலத்தில் என்றுமே தமிழ்னுக்கு சித்திக்க இயலாது என்று நான் கருதுவதைச் சொன்னேன். நான் ஏதும் மரத்தடி கிளி ஜோஸ்யம் பார்த்தோ, ஆரூடம் பார்த்தோ, கை ரேகை சாஸ்திரம் படித்தோ, […]

பாரதிதாசனும் பட்டுக்கோட்டையாரும்

This entry is part 12 of 41 in the series 25 செப்டம்பர் 2011

காலச்சூழல்களே கவிஞர்களை உருவாக்குகின்றன. அவ்வாறு காலத்தால் உருவாக்கப்பட்ட கவிஞரே பட்டுக்கோட்டை கலியாணசுந்தரனார் ஆவார். தம் காலத்தில் வாழ்ந்த பாவேந்தரைத் தன் குருவாகவும், வழிகாட்டியாகவும் ஏற்றுக் கொண்டு பாரதிதாசன் பரம்பரையில் வந்த கவிஞராகப் பட்டுக்கோட்டையார் திகழ்ந்தார். பாவேந்தரைத் தன் குருவாக ஏற்றுக் கொண்டாலும் தாம் செல்லும் பாதையை தாமே தெரிந்தெடுத்து அதன் வழியே இறுதிவரைப் பிறழாது வாழ்ந்தவர் மக்கள் கவிஞர் ஆவார். பட்டுக்கோட்டையில் மிக எளிய வேளாண்மைக் குடும்பத்தில் பிறந்து, இளம் வயதிலேயே துன்பங்களால் சூழப்பட்டவர் மக்கள் கவிஞர். […]

எனது இலக்கிய அனுபவங்கள் – 17 எழுத்தாளர் சந்திப்பு – 4. (மௌனி)

This entry is part 8 of 41 in the series 25 செப்டம்பர் 2011

“நினைவுப்பாதை” முற்றிலும் ஒரு மாறுபட்ட வாசிப்பாகவே எனக்கு அமைந்தது. இப்பொழுது கூட அக்கதையில்(கதையா?) வரும் கதாபாத்திரங்களின் பெயர்கள் நினைவிருக்கிறதே தவிர அவற்றின் தன்மைகள் விளங்கவில்லை எனக்கு. மேலும் பெரும்பாலான இடங்களில் வார்த்தை விளையாட்டு காணப்படுகிறது. அதுவே வேண்டுமென்றே திணிக்கப்பட்டது போல் தெரியவில்லை. அவர் எழுத்து நடையே அப்படிதானா? என்று எண்ணத் தோன்றுகிறது” நகுலனின் ‘நினைவுப்பாதை’ நூலை வாசித்த பிரவின் என்கிற வாசகரின் விமர்சனம் இது. ‘மணிக்கொடி’ எழுத்தாளர் திரு.மௌனி அவர்களது சிறுகதைகளைப் படித்தபின் எனக்கும் இதே எண்ணம்தான் […]

நாடகம் நிகழ்வு அழகியல். ஒரு பார்வை.

This entry is part 24 of 37 in the series 18 செப்டம்பர் 2011

நாடக உலகம் இயல் இசை சேர்ந்த அழகியல் கொண்டது. முத்தமிழும் இணைந்து கிடக்கும் ஒரு பரந்த வெளியை உடையது. பெண்ணிய உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு சிறந்த நாடக ஆசிரியரின் சந்திப்பு நிகழ்ந்தது. நம்மையே நாடகக் கதாபாத்திரங்களாக உணரச் செய்யும் ஒரு வசீகர வாசிப்பு அவருக்கே சொந்தம். உலகமே ஒரு நாடக மேடை. அந்த மேடையில்., எல்லையற்ற வெளியில் ”நாடக வெளி” என்ற நாடகக் குழுவை நடத்திவரும் திரு ரங்கராஜன் அவர்களின் புத்தகம் “ நாடகம் நிகழ்வு […]

எனது இலக்கிய அனுபவங்கள் – 16 எழுத்தாளர் சந்திப்பு – 3 (அசோகமித்திரன்)

This entry is part 14 of 37 in the series 18 செப்டம்பர் 2011

‘கணையாழி’ தொடங்கிய 1965ஆம் ஆண்டின் இறுதியில், திரு. அசோமித்திரன் அவர்களை சென்னை பெல்ஸ் ரோடில் இருந்த கணையாழி அலுவலகத்தில் தான் முதன்முதலாக சந்தித்தேன். அப்போது அவர் கணையாழியின் சென்னை பொறுப்பாளராக இருந்தார். கணையாழியின் முதல் இதழ் முதல் பெற விரும்பி, என்னிடம் இல்லாத இதழ்களை வேண்டி அவரைச் சந்தித்தேன். கைவசம் இருந்த முன் இதழ்களைத் தந்து, விட்டுப்போனவற்றைப் பெற்றுத் தருவதாகச் சொல்லி அப்படியே பிறகு வாங்கியும் தந்த அவரது அன்பையும், கரிசனத்தையும் நான் என்றும் மறக்க முடியாது. […]

அகஒட்டு( நாவல்)விமர்சனம்

This entry is part 9 of 37 in the series 18 செப்டம்பர் 2011

அகஒட்டு, இலக்குமி குமாரன் ஞானதிரவியம். அன்னம், தஞ்சாவூர், விலை. ரு. 140. கவிஞர் இலக்குமி குமாரன் ஞானதிரவியம். கவிதைகளை ஒருகட்டத்தில் கடந்து கட்டுரைகள், சிறுகதைகள், நாவல் என்று அவரின் படைப்பு வகைமைகள் பரவி வளர்ந்திருப்பது மிக்க மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது. படைப்புகளின் முலம், முதல் கவிதை அதன் பின்னணியிலேயே மற்ற வகைமைகள் வளர்கின்றன என்ற  பொது வரம்பிற்கு அவரும் ஒத்துப்போகிறார். அவரது அக ஒட்டு என்ற நாவலை ஒரே முச்சில் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.  இந்நாவலில் அத்திவெட்டி என்ற […]

பேராசிரியர் சி இலக்குவனார்: கலகக்காரர்

This entry is part 7 of 37 in the series 18 செப்டம்பர் 2011

  =சுப்ரபாரதிமணியன்   இதழியல் துறையிலும் ஈடுபட்டு தன் நில புலங்களை விற்று தமிழுக்குப் பணி செய்தவர் இலக்குவனார்.. குறள் நெறி, சங்க இலக்கியம், திராவிடக்கூட்டறவு ஆகிய இதழ்களை நட்த்தினார்.அயல் மொழிக்கலப்பால் தமிழ்நாட்டின் எல்லை சுருங்கியதை  உணர்ந்து  பிற மொழிக்கலப்பு இன்றியே இதழ்களில் எழுத வேண்டும் என்று வலியுறுத்தியவர்.  பகுத்தறிவேஉ வாழ்தலையும், செந்னெறி போற்றுதலையும் வலியுறுத்தியவர். மொழியின் அழிவிற்கு மொழிக்கலப்பும், பிற மொழிகளின் ஊடுருவலும், திணிப்பும் காரணமாகின்றன. எனவேதான்   இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் முன் நின்று போராடினார்.  […]

அதீதத்தின் ருசி., இதற்கு முன்பும் இதற்குப் பின்பும். :-

This entry is part 23 of 33 in the series 11 செப்டம்பர் 2011

அதீதத்தை ஒரு முறையேனும் ருசித்திருக்கிறீர்களா.. உணவில் மட்டுமே இருக்கலாம் போதும் எனத் தோன்றுவது. புகழாகட்டும் பணமாகட்டும் அதீதமே ஒரு ருசியைப் போலப் பீடிக்கிறது.. அது கசியும் ரத்தத்தின் சுவையாகவும் இருக்கலாம். எல்லாமுமான ஒரு சுவையில் ஒன்று இருந்தால் எப்படி இருக்கும். அதுதான் அதீதத்தின் ருசி. உடல் அழிய அழிய உயிர் சுடர் விட்டுப் பிரகாசிப்பதைப் பார்ப்பது மிகவும் கிளர்ச்சியூட்டுவதாகும். உடலின் சுமையும் நினைவின் சுமையும் குறையக் குறைய பறக்கலாம்தானே..ஒரு சுடரைக் கிள்ளி எடுக்க முடியும் உங்களால். ஒரு […]

எனது இலக்கிய அனுபவங்கள் – 15 எழுத்தாளர்கள் சந்திப்பு – 2. ஜெயகாந்தன்

This entry is part 22 of 33 in the series 11 செப்டம்பர் 2011

எனது எழுத்தார்வத்துக்கு முதலில் தூண்டுதலாக இருந்தவர் திரு.அகிலன் என்றால், அதனைத் தீவிரப்படுத்தியவர் திரு.ஜெயகாந்தன் அவர்கள். 1957ல்தான் அவரது படைப்பை நான் ‘சரஸ்வதி’ இதழில் படித்தேன். பிறகு ‘ஆனந்தவிகடனி’ல் வந்த முத்திரைக் கதைகளும், குறுநாவல்களும், தொடர் நாவல்களும் என்னை அவரது தீவிர ரசிகனாக ஆக்கின. அதற்குப் பிறகு புதுமைப்பித்தனைப் படிக்க நேர்ந்த போது, ஜெயகாந்தன் அவரது வாரிசாகவும், அவரது இடத்தை நிரப்புகிற வராகவும் எனக்குத் தெரிந்தார். 1962ல் அரியலூரில் நடைபெற்ற ‘கலை இலக்கியப் பெருமன்ற’ ஆண்டு விழாவில் ஜெயகாந்தன் […]