“I AM SLAVE”    – திரைப்பட பார்வை

This entry is part 9 of 11 in the series 4 ஜூலை 2021

 

சபா. தயாபரன்

Gabriel Rang இயக்கத்தில் Wunmi Mosaku, Isaach de Bankolél ஆகியோரின் பண்பட்ட நடிப்பில் 2010 ஆண்டளவில் வெளிவந்த I AM SLAVE என்ற அழகிய திரைப் படத்தை பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தது சந்தோஷமான அனுபவம் என்றே சொல்ல வேண்டும்

சூடான் மலைபிரதேசத்தில் நூபா என்ற மலைப்பிரதேசத்தில் வாழும் அழகிய இனிமையான குடும்பம் மாலியாவினுடையது. வறிய குடுமபமாயினும் 12 வயதாகும் மாலியா மகாராணிக்குரிய செல்லத்துடன் வளர்க்கப்படுகிறாள். திடீரென்று மாலியா முகார்ஜீன் படைகளின் முற்றுகையின் போது பலவந்தமாக கடத்தப்படும்போது சூடான் பாரம்பரிய தற்பாதுகாப்பு கலையில் தந்தை சிறந்த தேர்ச்சி பெற்றிருந்தாலும் மாலியா கடத்தபடுவதை அவனால் தடுக்க முடியவில்லை. கடத்தப்பட்ட மாலியா சூடான் தலைநகரமான காட்டூன் இலுள்ள ஒரு அரபுக் குடும்ப மொன்றில் அடிமையாக விடபடுகின்றாள்.மூடிய கதவினுள் வெளி உலகம் தெரியாமல் வளர்க்கப்படும் அவள் 18 வயதாகும்போது லண்டன் இலுள்ள அந்த அரபிக் குடும்பத்தின் உறவினர் வீட்டுக்கு அனுப்பபடுகின்றாள் . அங்கும் இருண்ட உலகமே அவள் வாழ்க்கையாகிறது . அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு மீண்டும் பழைய உலகினுள் தள்ளபடுகின்றாள். அவள் பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்படுகிறது.வெளிஉலகம் மறுக்கபடுகிறது.ஒரு வீட்டுக் காவல் கைதியாக நடாத்தபடுகிறாள். பின்பு அவள் எப்படி அங்கிருந்து தப்பிக்கிறாள் என்பதே கதை.

சம்பவங்களுக்கு ஏற்றபடி உணர்வுகளை முகத்தில் தேக்கிவைத்து கதாபாத்திரமாகவே மாறி விட்ட அற்புதமான நடிப்பு பெரிய வயது மாலியாவினுடையது. ஏற்றுகொண்ட பாத்திரத்தை கச்சிதமாக கையாண்ட மாலியவாக நடித்த wunni mosaakku எம் முன்னணி தமிழ் நடிக நடிகைகள் மாலியா விடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விடயங்கள் நிறைய இருக்கின்றன என்பதை சொல்லாமலே உணர்த்தி நிற்கின்றன. . மாலியாவின் சோகங்களுக்குள் எம்மையும் திணித்து முகம் புதைக்க வைத்து அவள் சோகங்களும் எம் சோகங்களாக இன மத பேதங்களை கடந்து உணர வைத்த இப் படத்தின் இயக்குனர் Gabriel Rang பாராட்டப்பட வேண்டியவரே.

 

12 வயது மாலியாகவாக நடித்த அறிமுக நடிகையான நடிப்பும் பெரிய வயது மாலியாவுடன் போட்டி போடுகிறது. தந்தை சொல்லும் மேக கதையை கேட்டவாறே தந்தையின் மடியில் கண்ணுறங்கும் மாலியா பரிதாபத்துக்குரிய பாத்திரமே.

மகளைத் தேடி தந்தை முகர்ஜின் படைகாவலரங்களில் விசாரிக்கும் பொது அவர்கள் உன் மகள் இறந்துவிட்டாள் என்று சொல்ல “இல்லை என் மகள் இறக்க வில்லை என்று சொல்லும்போதும் மகள் பிரிந்த சோகத்தில் தெருவோர சிறார்களை தந்தை கூட்டி மேகக்கதை சொல்லும் காட்சிக களிலும் தந்தையாக நடித்த Isaach de Bankolé நடிப்பு மனதில் பதிகிறது.

இயற்கையோடும் இயற்கையான முகங்களையும் வைத்து ஒளிப்பதிவில் வர்ணஜாலம் காட்டி சித்து விளையாட்டு விளையாடுகிறது கேமரா. மகள் இருப்பதை தொலைபேசியில் அறியும்போது பெற்றோருக்கும் மகளுக்கும் இடையே ஏற்படும் இருமுனை உணர்வுப் பரிமாறல்கள் அவற்றை கமரா கையாண்ட விதம் மௌனங்களால் உணர்வுகளை பதியவைத்து வெளிபடுத்திய விதம் ஆயிரம் வாத்தைகளுக்கு சமனானது .

அரைத்த மாவையே புளிக்க வைத்து கதை பண்ணி பிரமாண்ட காட்சியமைப்பும் தடாலடி வீராவேச பஞ்ச் டயலாக் நடிப்பிலும் தமிழ் ரசிகர்களின் ரசனைகள் மூளைச்சலவை செய்யப்பட்டிருக்கும் இன்றைய தமிழ் திரைப்பட மனநிலைகளுக்கு மத்தியில் தெளிந்த நீரோடை போல வந்து குளிர்ந்த தென்றலாக கிடைக்கும் இந்த சுகானுபவம் சலித்த மனங்களுக்கு கிடைத்த நிம்மதி பெருமூச்சு.

 

லண்டன் மாநகரில் மாலியா போல ஆயிரக்கணக்கானோர்  பேசாமடந்தைகளாக அடிமை வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பதாக தரவுகள் தெரிவிகின்றன.

அந்த உண்மை சம்பவங்களை வைத்து இயக்கப்பட்ட இந்த திரைப்படமானது Toronto International Film Festival இலில் சிறந்த திரைபட விருதை தட்டிச்சென்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் இப்படத்தை இயக்கிய இயக்குனர் Gabirel Rang இன் இயக்கத்தில் வெளிவந்த Death of President” “The last King of Scotland” போன்ற திரைப்படங்கள் பல விருதுகளை தக்க வைத்து கொண்டன என்பதும் இங்கு குறிப்பிட வேண்டிய ஓன்று

Series Navigation5.ஔவையாரும் அசதியும்மூன்றாம் பாலினப் படங்கள் – மா ரைனிஸ் ப்ளாக் பாட்டம் – திரைப்பட விமர்சனம்
author

சபா தயாபரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *