காலம் கடந்தவை

பின்பு ஒரு நாளில் உன்னிடம் கூடுத்து விடலாம் என்று முன்பு ஒரு நாளில் உன்னக்காக வாங்கப்பட்ட பரிசு ஒன்றை காலம் கடந்து காத்து வருகிறது என் பெட்டகத்தின் உள் அறை.... பின்பு ஒரு நாளில் சொல்லி விடலாம் என்று முன்பு ஒரு…

ஒரு கடலோடியின் வாழ்வு

திரண்டத் திட்டாய் கரு நீல மேகங்கள்  உதிப்பின் ஒளியில் மேல் வானச்  சிவப்பு  வெண் கை நீட்டி மற்றொரு  மேகம்...  கடல்விட்டெம்பும் சீகல் பறவைகள் ... அடர் நீல அசையும் பெரும் பட்டாய்க் கடல் ... எத்தனை பேருக்குக் கிடைக்கும் இவ் வாய்ப்பு?  கர்விக்கும் மனம்...  மறுநொடி சென்றமரும்  மனைவி, குழந்தைகள் பக்கத்தில் .... கண்கள் இங்கும் மனமங்குமாய்   விடுமுறை தினத்தை கணக்கெடுக்கும் நாளை மீண்டுமோர் விடியல்..  

தேடல்

             -  பத்மநாபபுரம் அரவிந்தன் - பிஞ்சு மழலையைக்  கொஞ்ச எடுக்கையில்  தானாய் வழிகிறது கனிவு, மனம் வழி ஊறி தூக்கும் கை வழி பரவி வியாபிக்கும் அன்பு கண்கள் பார்க்கையில் நெஞ்சம் நிறைந்து கசிந்துருகும் காதல் ...   என்  காய்த்த கைதனில் பூத்த மலரென படுத்திருக்கும் குழந்தை... சின்னச் சிணுங்கலில் என் மனச் சிறகுகள் வானோக்கி எம்ப எத்தனிக்கும் ... விட்டுப் பிரிந்திருந்தும் மனதுள்  அவள் மேல் வீசும் சோழ தேசத்து பால் நிறை நெற்பயிர் வயல்வெளி  மணம்.... மழை  பெய்து பிற்பாடு ஒளி பட்ட மலை போல மின்னும் அப்பிஞ்சு முகத்தின் கன்னக் கதப்பு மனக் கண்ணில் மறையாது எண்ண எண்ண சலிக்காது ..வந்து நின்று போகாது மனைவி, மகன் மேலிருந்த தேடல் மெல்ல மகளின் மேல் நகரும் காலம் தொலைதூரம்   இருந்தாலும்  தொடர்ந்தேதான்  ஆகும் ... கொடுத்து வந்த முத்தத்தின் மணம் இன்னும் மாறவில்லை கையசைத்து ,காலசைத்து மெல்லியப் புன்னகையை எனை நோக்கி வீசியதை மனமுழுக்க சேமித்து யோசித்து செலவிட்டு கழிக்க வேண்டும் சில நாட்கள் சேமிப்பு தீருமுன்பு மீண்டுமங்கு போகவேண்டும் பல…

அடைமழை!

அடைமழை பெய்து அப்போதுதான் ஓய்ந்திருந்தது!   அலுவலகம் முடிந்து வீடு திரும்புவதற்காய் சாலையோரமாய் நடந்தேன்!   என் கைகுலுக்கிவிட்டு தேநீர் அருந்தச் சொன்னது தென்றல்!   ஸ்ட்ராங்காய் ஒரு டீ குடித்தவுடனே மீண்டும் கிளம்பினேன் சாலையோரமாய் நிறுத்திவைத்திருந்த நடராஜா சர்வீசில்...!   பூக்கடைப்…
அகஒட்டு( நாவல்)விமர்சனம்

அகஒட்டு( நாவல்)விமர்சனம்

அகஒட்டு, இலக்குமி குமாரன் ஞானதிரவியம். அன்னம், தஞ்சாவூர், விலை. ரு. 140. கவிஞர் இலக்குமி குமாரன் ஞானதிரவியம். கவிதைகளை ஒருகட்டத்தில் கடந்து கட்டுரைகள், சிறுகதைகள், நாவல் என்று அவரின் படைப்பு வகைமைகள் பரவி வளர்ந்திருப்பது மிக்க மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது. படைப்புகளின் முலம்,…

ஜென் ஒரு புரிதல் 11

மூத்த எழுத்தாளர் ஜெயகாந்தன் தமது கட்டுரைகளுள் ஒன்றில் சாவு வீட்டில் அழுகிறவர்கள் எல்லோருமே தமது மரணத்தை எண்ணியே அழுகிறார்கள் என்று குறிப்பிட்டிருந்தார். சென்னையில் மின்சார மயானத்தில் ஒரு உறவினரின் ஈமைக் கிரியைகளுக்கெனச் சென்றிருந்த போது எரிக்கும் மின் எந்திரத்தின் முன் உடல்கள்…

பேராசிரியர் சி இலக்குவனார்: கலகக்காரர்

  =சுப்ரபாரதிமணியன்   இதழியல் துறையிலும் ஈடுபட்டு தன் நில புலங்களை விற்று தமிழுக்குப் பணி செய்தவர் இலக்குவனார்.. குறள் நெறி, சங்க இலக்கியம், திராவிடக்கூட்டறவு ஆகிய இதழ்களை நட்த்தினார்.அயல் மொழிக்கலப்பால் தமிழ்நாட்டின் எல்லை சுருங்கியதை  உணர்ந்து  பிற மொழிக்கலப்பு இன்றியே…

நடிகர் நாகேஷ் பிறந்த நாள் சிறப்பு பதிவு நான் நாகேஷ் : புத்தக விமர்சனம்

சிரித்து  வாழ வேண்டும் என்ற தலைப்பில் கல்கியில் வெளியான தொடர் " நான் நாகேஷ்" என்ற தலைப்பில் புத்தகமாக வந்துள்ளது. நாகேஷ் பேசுவது போலவே அமைந்த இந்த புத்தகத்தை எழுதியவர் எஸ். சந்திர மவுலி.   நாகேஷ் எனக்கு மட்டுமல்ல பலருக்கும் பிடித்தமான ஒரு…

கண்ணீரின் மேல் பாதம் பதிக்கும் வடக்கின் இராணுவ பலாத்காரம்

  "இராணுவ ஆட்சியே இங்கு நடைபெறுகிறது. இங்கு ஆர்ப்பாட்டங்களை நடத்த முடியாது."   'நாம் இலங்கையர்' அமைப்பின் ஏற்பாட்டுக் குழு உறுப்பினர்களில் ஒருவரான திரு.உதுல் பிரேமரத்னவுக்கு கிளிநொச்சி இராணுவ உயரதிகாரியால் மேற்குறிப்பிடப்பட்டவாறு சொல்லப்பட்டிருந்தது.   அதற்கு அடுத்ததாக யாழ்ப்பாண உதைப்பந்தாட்ட மைதானத்தில்…

சமனில்லாத வாழ்க்கை

நான் நெருங்கிப்போகிறேன் அவர்கள் என்னை மதிப்பதில்லை   என்னை நெருங்கியவர்களை நான் நினைப்பதேயில்லை   .....   வலியின் அலைகற்றை சுமந்து வந்த  என் குரலை சலனமில்லாமல் வீசி எறிகிறார்கள் அவர்கள் . அவர்களை பின்தொடர்கிறேன் .. காயங்களை விசிறிவிட என்னை…