author

ராஜவிளையாட்டு (ஸ்டீ·பான் ஜ்ஸ்வேய்க்)

This entry is part 19 of 32 in the series 3 பிப்ரவரி 2013

தமிழில் லதா ராமகிருஷ்ணன் லதா ராமகிருஷ்ணன் மொழிபெயர்த்த ஜெர்மானிய குறுநாவல் ‘ராஜவிளையாட்டைப்’ பற்றிய என் கருத்துக்களை நான் இங்கே பதிவு செய்கிறேன்.   ‘ஸ்டீபன் ஜ்ஸ்வேய்க் (1881-1942) என்ற எழுத்தாளரின் குறுநாவலை ஆங்கில வழி தமிழாக்கி இருக்கிறார். லதா ராமகிருஷ்ணன், 1957ல் பிறந்தவர். சென்னை மாநிலக் கல்லூரியில்  ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.  1983 முதல் கவிதை சிறுகதை, கட்டுரைகள், மொழிபெயர்ப்பு- தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும்,ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும்- என்று பல தளங்களில் இயங்கி வருபவர். நவீனக் கவிதைகளை பிரெயில் […]

பஞ்சதந்திரம்

This entry is part 5 of 21 in the series 21 அக்டோபர் 2012

மகிளாரூப்யம் என்ற நாட்டை ஆண்டு வந்தவன் அமரசக்தி. அவனின் மூன்று மகன்களும் புத்தி சாதுர்யம் அற்றவர்கள். அவர்களுக்கு விஷ்ணுசர்மன் என்கிற 80 வயதான சாஸ்திர நிபுணர் பாடம் கற்பிப்பதற்காக அமர்த்தப்படுகிறார். நூலை எழுதியவர் பெயரும் விஷ்ணுசர்மன். அவருக்கு 80 வயதா? முட்டாள் அசரகுமாரர்களுக்குப் பாடம் சொல்லித்தர முதல் கதையை ஆரம்பிக்கிறார் விஷ்ணு சர்மன். அந்த கதை நடக்கும் இடத்தின் பெயர் மகிளாரூப்யம். இதுவே ஒரு  நவீன இலக்கியம் போல ஆரம்பிக்கிறது. எதிர் எதிர் கண்ணாடியின் பிரதிபிம்பம் போல […]

பஞ்சதந்திரம் – தொடர் முகவுரை

This entry is part 30 of 32 in the series 24 ஜூலை 2011

முகவுரை உலக அறிவின் சாரத்தையெல்லாம் ஒன்றாய்த் திரட்டி, ஐந்து விதமான தந்திரங்களைக் கொண்டு சிந்தையைக் கவரும் ஒரு சாஸ்திரத்தை விஷ்ணுசர்மன் வகுத்தான். இது எப்படி நிகழ்ந்தது என்று பார்ப்போம். தெற்குப் பிரதேசத்தில் மஹிளாரூப்யம் என்ற நகரம் ஒன்றிருக்கிறது. அதை அமரசக்தி என்ற அரசன் ஆண்டு வந்தான். அவன் உலக அனுபவ சாஸ்திரத்தில் தேர்ச்சி மிகுந்தவன். வலிமை பொருந்திய வேந்தர்கள் பலர் அவனை முடி தாழ்த்தி வணங்குவார்கள். அப்படி வணங்குகையில் அவர்கள் அணிந்த மணி மகுடங்களில் பதித்த ரத்தினங்கள்   […]

பஞ்சதந்திரம் – தொடர் – நூல்வரலாறு

This entry is part 33 of 34 in the series 17 ஜூலை 2011

நூல் வரலாறு உலக இலக்கியத்தில் முன்வரிசையில் முதலிடம் பெற்று விளங்குவது பஞ்சதந்திரம். சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்னர், 1859-ம் ஆண்டில் இந்நூலை ஜெர்மன் மொழியில் தியோடோர் பென்•பே (Theodor Benfey) அவர்கள் வெளியிட்டார்கள். அதைத் தொடர்ந்துதான் பஞ்சதந்திரத்தின் வரலாற்றை ஆராய்வதில் பல அறிஞர்கள் ஈடுபட்டனர். பல்வேறு நாடுகளின் இலக்கியங் களை ஒன்றோடு ஒன்று ஒப்புநோக்கி ஆராயும் விஞ்ஞானத்துறை என்பதே இதிலிருந்துதான் ஆரம்பமாயிற்று என்று கூறப் படுகிறது. இந்நூலின் வரலாற்றை ஆராய்ந்த அறிஞர் யோஹான் ஹெர்டல் அவர்கள் இது […]

வட்ட மேசை

This entry is part 19 of 33 in the series 12 ஜூன் 2011

எத்தனையோ நாற்காலிகள் இருந்தாலும் அமர்ந்தது என்னவோ அந்த வட்ட மேசையின்மீது- சற்றே குனிந்து கையூன்றி எதிர் இருக்கையில் விவாதமும், விமர்சனமும், கவிதையும், நெருக்கமும் மற்றெல்லாமாக என விழுந்துகொண்டு இருந்தன சொற்கள் மேசையின் மீதாக ஒன்றின்மீது ஒன்றாக, குறுக்கு நெடுக்காக, குவியல் குவியலாக, சிறுமலையென.. ஆனால் ஏதொன்றும் சிதறி தவறிக் கீழே இறங்கவும் இல்லை; விழவும் இல்லை. வட்டம் என்றால் சுழலும் அல்லது உருளும். ஏதோவொரு அசைவுக்குட்பட்டதே உருண்டால் சிதறும், சுழன்றால் சொற்கள் விசிறி அடிக்கப்படும். ஏதும் நிகழாமல் […]