அபிநயம்

sathyanandan
தோட்டக்காரர்
கூட்டித் தள்ளும்
சருகுகளூடே
வாடிய பூக்கள்
கணிசமுண்டு

தோட்டத்துக்
கனிச் சுவையில்
காய்
அதிருந்த பூ
நினைவை நெருடா

மாறாப் புன்னகை
எப்போதும் எதையோ
மறைக்கும் என்பதை
விழிகள் உணரா

புன்னகை விரிப்பைத் தாண்டி
விழிகள் அடையா
மலரின் மர்மம்

ஏக்கம்
மனக்குமிழ்களாய்
கொப்பளிக்கும் மலர்
எது?

வண்ணமில்லாததா
இல்லை வாசமில்லாததா?

இரும்புத் தட்டில்
எடைக்கல்லின் இணையாவதா?

ரசாயனப் புன்னகை
பிளாஸ்டிக் பைக்குள்
விரிக்கும் பூங்கொத்தா?

இதழ்கள் சிறகுகள்
என்றே விரித்து விரித்து
முயன்று முயன்று
தோற்றுத் தோற்று
சுமைகள் இவை என்னும்
புரிதலின் கசப்பையும்
புன்னகைக்கும் பூவின்
அபிநயம்

Series Navigationகாசு வாங்கியும் வாங்காமலும் ஓட்டுப் போட்ட விவசாயிகளுக்கு பெப்பேஆத்ம கீதங்கள் – 26 காதலிக்க மறுப்பு .. !