அம்மா நாமம் வாழ்க !

ஜெயானந்தன்.

தமிழக அரசியல் 2016 முடிவுகள் வந்துக் கொண்டே இருக்கின்றன.
மீண்டும் அம்மா அலைதான் வீசுகின்றது. அம்மா போட்ட அரசியல்  கணக்கில், நரியாக செயல்பட்டு, வைகோ சரியாக அவரது சேவையை  செய்துவிட்டார். இந்த விளையாட்டில், பாவன் ஒரு காதநாயகன் தன் உரு இழந்து, கோமாளியாக மாறிப்போனக்கதை, அவருக்கும்  அவர்து மனைவிக்கும் புரிந்திருக்கும். போன தேர்தலில்,  ஒரு காமடியன், தன் சினிமா வாழ்க்கையே இழ்ந்தார்.

அம்மா உணவகம், அம்மா வாட்டர், அம்மா டாஷ்மார்க்,
அம்மா மிதிவண்டி, அம்மா கனணி, அம்மா தாலி திட்டம்,
அம்மா மக்ப்பேறு உதவி, இன்னும் எத்தையோ சொன்னதை,
சொல்லாததை எல்லாம் சேர்ந்து, அம்மாவை அரியணை
ஏறச்செய்தது. சென்னையில் மட்டும், மழை ஒட்டுக்களை
அடித்து கொண்டு சென்றுவிட்டது.

கருணநிதியின், குடும்ப கொள்ளை நோயால், பாவம் அவருக்கு
வரவேண்டிய அரியணை மாறிப்போனது. அவரது கண்க்கும்
தப்பானது. அவன் போட்ட கண்க்கொன்று, இவன் போட்ட கண்க்கொன்று, இரண்டுமே தவறானது. எல்லாம் அம்மா மயமானது.  காந்து நடிகர் வாழ்வே மாயம் என்று பாடுவதும் கேட்கின்றது.

முற்போக்கு கொள்கையோ, சாதி அரசியலோ இங்கு வேலை  செய்யவில்லை.  அம்மா திட்டங்கள்தான் வேலைசெய்துள்ளது. இதைதான் காமராசர் செய்தார், எம்ஜியார் செய்தார்.  கருனானிதிக்கு இதன் மேல்மோகம் கிடையாது.  ஆனால் இதுவரை, தமிழக அரசியல்வாதிகள், சந்திர பாபு நாயுடு   சொன்னது போல், தமிழக்த்தை, மென்பொருள் சிட்டியாக  மாற்வேன், சிங்கபூரா செய்துவிடுவேன் என்று சொன்னதெ இல்லை.

மோடி மோகமும், இங்கு வேலை செய்யவில்லை.சினிமாவும்  மோகத்திலிருந்து, தமிழக மக்கள் விடுபட்டனர் போல் திரிகின்றது.  ஆனால் மீண்டும் ஒரு எம்ஜியார் வந்தால் நிலைமை மாறலாம்.

அப்படியானால், காந்து ந்டிகர்தான், அரியணை ஏரியிருப்பார்.  பாவம், அவர் ஏரிப்பக்கம் போய்விட்டார். போகட்டும் அவரை  விட்டுவிடிங்கள் என்று, அவரது கூட்டாளிஅக்ளை கேட்டு  கொள்ள் வேண்டும்.

அம்மா, இனிமேல் சும்மா அரசியல் செய்ய முடியாது. ஸ்டாலின்,  கடுமையாக போராட த்ன்னை தயார் படுத்திக் கொண்டுள்ளார்.  அவரது, சூறாவளி சுற்று பயணம், திமுகாவிற்கு, நல்ல பலனை  தந்துள்ளது. அவரால், அவரது த்ந்தை செய்த , தவறுகளும்,  அவர்து குடும்பத்தார் செய்த கொள்ளையும் மறக்கப்படலாம்.

ஸ்டாலின், இனிமேல், மெல்ல் மெல்ல, எதிர் கட்சிகளையெல்லாம்  அரவணைத்து, ஒரு மாபெரும் அணியாக திரண்டால்தான்,  எதிர்காலத்தில், அவருக்கு அரியணை கிடைக்கலாம்.

அம்மா அம்மாதான். அம்மா நாமம் வாழ்க !

Series Navigation ‘முசுறும் காலமும்’பழைய கள்