அழகிய சிங்கர் 3 கவிதைகள்

Spread the love

அழகிய சிங்கர்

  1. பேரிழப்பு

 

ஆற அமர யோசித்தால்

ஏன் இதுமாதிரி

என்று தெரிவதில்லை

கொஞ்சம்

யோசித்துப்பார்த்தால்

அவர்

கடைசியாகச் சாப்பிட்ட

உணவு எது?

கடைசியாகச்

சிரித்த சிரிப்பு எது?

விதி அவரைப் பார்த்து

சிரித்ததை அவர்

உணரவில்லையா?

மனைவியையும் அழைத்து கொண்டு

போய்விட்டாரோ

அவருடன் 13 பேர்களும்

போய் விட்டார்களே

அவர்களுக்கு நாம்

அஞ்சலி செலுத்துவோம்

வீர வணக்கம் செலுத்துவோம்

போய் வாருங்கள்

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் அவர்களே..

 

 

  1. கடற்கரை

 

கடற்கரைப் போய்

நின்று கொண்டிருந்தேன்

காலை நனைத்தது

அலை

 

வா வா என்றது

அலை..

 

வீரியமாகப்

பொங்கி எழும்

அலையைப் பார்த்து

கையால் கும்பிட்டேன்

 

  1. பார்வை

 

அந்தப் பெண்ணைப் பார்த்து நடந்து கொண்டிருந்தேன்

 

தெரு முனைவரை

நடந்து கொண்டிருந்தேன்

 

அந்தப் பெண்

வலதுப் பக்கம்

போனாள்

 

நான் இடதுப் பக்கம்

போனேன்

Series Navigationஎங்க வானத்தில் மீண்டும் ஒரு வால்நட்சத்திரம்ஸஹாரா பாலைவனச் சூரியக்கதிர் நிலையங்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு தொடர்ந்து மீள்புதிப்பு மின்சக்தி பரிமாறத் திட்டம்.