அவர்களில் நான்

Spread the love

சண்டை நாட்களில் எதிரியும்
காதல் நாட்களில் சகியும்
தியாக நாட்களில் தாயும்
( கல்யாணத்திற்கு முன்)
கேளிக்கை நிறைந்தவற்றில்
நண்பர்களும் என
அந்தந்த நாட்களில் நிறைந்தவர்களை
நாட்குறிப்புகள் நிரப்பியிருந்தன.

நான் நிரம்பிய நாட்கள்
வெறும் வெற்றுத்தாள்தானோ
என அயர்ந்தபோது
அடுத்தவர் அடர்ந்தவற்றில்
நீதான் கரைந்திருக்கிறாய்
எனப் படபடக்குது
டைரியின் பக்கங்கள்

_ ரமணி

Series Navigationஜென் ஒரு புரிதல் -17கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) திருமணப் பாதையில் ! (கவிதை – 50 பாகம் -2)