அவள் வானத்தில் சில மழைத் துளிகள்

Spread the love

மஞ்சுளா

என் வீட்டில் நிறைந்து இருக்கின்றன 

யாராலும் பார்க்கப்படாத 

பொம்மைகள் 

பொம்மைகளுடன் 

வளர்ந்த என் மகள் 

சங்கீதம் கற்றுக்கொள்ளவில்லை 

சாரீரம் வளமாய் இருந்து போனதால் 

விடிகாலை கனவுகளுடன் 

அலைந்து கொண்டிருக்கிறாள் எப்போதும் 

அவள் அருகில் அமர்ந்து பாடிக் கொண்டிருக்க 

பழகி விட்டன 

சில பறவைகளும் 

சில நேரங்களில் அவள் பறவையைப் போல் 

இருக்க நேர்ந்துவிட்டதை 

எண்ணி எல்லோரும் கவலை பட்டுக்கொண்டிருக்க 

தொட்டிச் செடிகளோ 

மகிழ்ச்சியுடன் பூத்துக்கொண்டிருந்தன 

பூக்களும் பறவைகளும் 

அவள் வசமிருக்க 

மனிதர்களோ 

அவசியமின்றி போனார்கள் அவளுக்கு 

                         -மஞ்சுளா 

Series Navigationவிண்ணையும் சாடுவோம்இந்திய புதிய கல்விக்கொள்கை – ஓர் சிங்கப்பூர் ஒப்புநோக்கு – அத்தியாயம் இரண்டு