இடிபாடுகளிடையில்…..

அருணா சுப்ரமணியன்

பேரிடியோ பெருவெடியோ
தேவையாயிருக்கவில்லை…
எனக்குள் எழும்பியிருந்த
அந்தக் கட்டிடத்தை தகர்க்க…..
உன்னை சொல்லி குற்றமில்லை..
பதப்படுத்த தேவையான
கால அவகாசம் கொள்ளாது
அவசரமாய் கட்டிவிட்டேன்
அடுக்கு மாடி கட்டிடமாய்
உன் மீது என் ஆசைகளை….

சிற்றின்ப செங்கல் என்று
நினைத்திருந்தாயோ
உன் மேல் கொண்ட பேரன்பை!
சிதைத்துவிட்டு சிரிக்கிறாய்
சிறுபிள்ளை விளையாட்டுபோல்…
இனி நான் எவ்வாறு
மீட்டெடுப்பேன்
இடிபாடுகளிடையில்
மாட்டிக்கொண்ட என்
இதயத்தை!

Series Navigationஸ்ரீராம் கவிதைகள்