இதிலும்… நிஜங்கள்….!- குறுங்கவிதை

குழந்தைகளுக்கு
விடுமுறை….!
எங்கெல்லாம் எனக்கு..
உறவினர்கள்..?
————————————
குற்றம் பார்த்தேன்…
சுற்றம் விலக….
முற்றத்தில் தனிமரம்..!
—————————————
அழகை அழிக்கக்
காத்திருந்தது..
வெறியோடு..
முதுமை..!
————————————-
சிக்கல் நூல்கண்டாக
சில நேரங்களில்..
சிக்கித் தவித்தது
உள்ளம்..!
————————————–
பேசிப் பேசியே..
அமைதியானது..
மனம்..!
——————————————–
கடல் கொண்டு
நிறைத்தாலும்
நிறையாதது…
மனம்..!
———————————————–
குறைகளைக் கண்டே..
நிறைவாவது
நெஞ்சம்…
————————————————–
மௌனமாய்க்
கதறும்..
சப்தமின்றி
நொறுங்கும்…
இதயம்..
————————————
உடலுக்குள்
சமாதி..
இதயம்…!
—————————————
மன மாளிகையின்
காவலனாய்..
அகங்காரம்…!
——————————-
மகுடத்தை
மணல் மேடாக்கும்
மனம்…!
————————————
சிலருக்கு..
குடத்திலிட்ட தீபம்..
சிலருக்கு
குன்றிலிட்ட தீபம்..
சிலருக்கோ….
குப்பையிலிட்ட நெருப்பு..!
மனம் எனும் மாயை..!
————————————-
“புகைப்பது உடல் நலத்திற்கு கேடு”
உபதேசம் செய்கிறது …
சிகரெட்டுப் பெட்டி..!
——————————————
குடி குடியைக் கெடுக்கும்…
குடிப்பவன் படித்துவிட்டு…
குடித்து விட்டுக் கேட்கிறான்..
எவனோட குடியை..?
—————————————
சுவற்றில் எழுதாதீர்கள்…
வேண்டிக் கொண்டன…
சுவர் முழுதும்…
கொட்டை எழுத்துகள்..!
—————————————-
மரம் நடுங்கள்…..!
வெட்டுப் பட்ட
மரத்தில் தொங்கியது
விளம்பரம்….!
—————————————-
எரிபொருள் சிக்கனப் பிரசாரம்…
அமைச்சர் காரில்…
கூடவே…பத்து கார்..
பாதுகாப்பாம்…!
——————————————-
சட்ட ஒழுங்கு மீறல்…சாலையில்..
பிடிபட்டான் வாகனத்தோடு…!
இவன் பையில் இருந்தது…
காவலர் கைக்குள்ளே…..
மன்னிச்சுட்டேன்… போதும் போ…
காவலர் கையில்….மாமூல் ..!
==================================

Series Navigationசுனாமி யில் – கடைசி காட்சி.ஆணுக்கும் அடி சறுக்கும்…!