இந்திய இன்சுரன்ஸ் பணம் & பிஎஃப் பணம் பணால் ஆக, நிதிஅமைச்சரின் யோசனை….

புனைப்பெயரில்

 

போனமுறை திரு.சிதம்பரம் நிதி மந்திரியாக இருந்த போது நடந்த ஸ்டாக் மார்க்கெட் கூத்து பலரின் வாழ்வை தெருவிற்கு கொண்டு வந்தது

எங்காயாவது இருக்கட்டும் எப்படியும் போகட்டும் என அவர் உள்துறை மந்திரியாக இருந்த போது நிம்மதிப் பெருமூச்சு விட்டோம்…

ஆனால், மன்மோகனுக்குத் தான் நாம் நிம்மதியாக இருப்பது பிடிக்காதே….

திரும்பவும் இப்போது நிதி, ப.சி கையில்.

தற்போது அவரின் லட்சியம், ஸ்டாக் மார்கெட்டை ரிவைவ் பண்ணுவதாம்..?

எப்படி,

இந்திய இன்சுரன்ஸ் கம்பெனிகள், பிஎஃப் பணம் எல்லாவற்றையும் மியூசுவல் பண்டிலும், காப்பிடல் மார்க்கெட்டிலும் போட அய்யா இப்போது ஐடியா கொடுத்து நம்மை வயிற்றில் நெருப்பை அள்ளி லைட்டா போட்டிருக்கிறார்.

என்ன நடக்கும்….

இப்போது தோராயமாக டாலர் – இந்திய ரூபாய் மதிப்பு ஒரு டாலருக்கு 55.XX , இல்லை அமெரிக்க மதிப்பில் சொல்லப்போனால், 58 ரூபாய் கொடுத்தால் ஒரு டாலர் கிடைக்கும். இந்த குறியீட்டில் தான் அமெரிக்க கான்சுலேட்டில் பணம் வாங்கப்படுகிறது.

சரி , இப்போது என்ன நடக்கும்…?

ஒரு பில்லியன் டாலரை இந்தியாவிற்குள் ஸ்டாக் மார்கெட்டில் போட்டால் 58 பில்லியன் மதிப்புள்ள ஷேர்களை FII க்கள் வாங்கிப்போடும்.

10% ஸ்டாக் மார்க்கெட் இறங்கினாலும், நாளை டாலர் மதிப்பு 50 ரூபாய்க்கு வந்தால் , யானைக்கும் பானைக்கும் சரியென்று நஷ்டம் இருக்காது.

10% ஸ்டாக் மார்கெட் ஏறினால்,  58ரூபாயிலேயே மதிப்பு இருந்தாலும் லாபம் தான்.

இதில் நஷ்டமடையப் போவது, நம்ம பயக தான்…. நம்ம பயகன்னா ஸ்டாப் லாஸ் புத்திசாலிகள் தான்.

இல்லென்ன கன்சல்டண்ட் ஆவரேஜ் பண்ணச் சொல்வான்…

 

நம்ம நாட்டில் ஸ்திரமான இன்சுரன்ஸ் துறையின் அத்துனை பணமும் FII மூலமாக, நிதிஅமைச்சரின் ஐடியாவில் அய்யோ அம்மான்னு போகப் போகுது…

 

அப்ப நமா செத்தா…? 10% இன்சுரன் கவரேஜ் கூட கிடைக்கப் போறதில்லை…

 

பி எஃப் பணமும் இதே நிலைக்கு தான்.. போகப் போகுது…

 

ஸ்டாக் மார்க்கெட்டிலும்,  மியூசுவல் பண்டிலும் பொதுச் சொத்தை தூக்கி போட்டால் எப்படி தேசம் வளரும் என்ற இந்த புத்திசாலி சொல்லட்டும்…

 

ஏன், அந்தப் பணத்தில் மருத்துவத் துறை, அடிப்படை விவசாயக் கட்டுமானத்திற்கு செலவு, நதி நீர் இணைப்பு என்று போட்டால் கூட அத்துனை பணமும் நமது சந்ததிக்கு போனது என்ற நிம்மதியாவது இருக்கும்…

 

ஆனால், ஸ்டாக் மார்கெட்டில் போடும் இந்த புத்திசாலித்தன ஐடியாவிற்கு பின் இருக்கும் அபயாகரத்தை உணர்ந்து நாம் செயல்பட வேண்டிய தருணம் இது…

 

என்னை விட அதிகம் படித்த நல்லோர்களே… பொருளாதர மேதனைகளே…. நிதி அமைச்சரின் இந்த, இன்சுரஸ் பணத்தையும், பி எஃப் பணத்தையும் ஸ்டாக்மார்க்கெட்டிலும் , மியூசுவல் பண்டிலும் போடுதல் பற்றிச் சொல்லுங்கள்…

Series Navigationஎன்ன செய்வார்….இனி..!ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 35) குற்ற மன்னிப்பு