இரைந்து கிடக்கும் பாதைகள்

தூரத்துக் காட்டுக்குயிலின்
மெல்லிசையில்
மல்லாந்து உறங்குகிற‌
அடர்ந்த கானகத்தில்
சிக்கிக் கொண்டோம்…

மரங்களிலும்,
பாறைகளிலும்,
கொடிகளிலும்
மறைந்துவிட்டன
கானகத்தின் பாதைகள்…

முன்னெப்போதோ சென்ற‌
பாதையின் சாயல்
கானகம் முழுவதும்
இரைந்து கிடக்கின்றன…

சுடர்மிகு ஒளியை உருவாக்குபவன்
இடைத்துணியை உருவி
கண்களை கட்டினான்…

புலன்களின் கடலின் ஆழத்தில் புதையுண்டிருக்கும்
பழக்கமெனும் வழிகாட்டிக்குத்தான்
இரைந்து கிடக்கும் பாதைகளின் மீது,
எத்தனை நினைவாற்றல்?..

– ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)

Series Navigationசமூகப்பிரக்ஞையாள சாம்ராட்உவமைக் கவிஞர் சுரதா பிறந்த தினக் கவிதை- நவ : 23.