உரசும் நிழல்கள்

Spread the love

மஞ்சுளா                             மதுரை

என் கால்சுவடுகள் எனக்கான மண்ணில் கருவுற்று கிடக்கின்றன 
எனது பிள்ளைப் பிராயங்களைபிரியமுடன் கூடிக் கழித்த அமைதியுடன் 
பழைய வீட்டின் வாயிற்படியை பிடித்தபடி காத்திருக்கும் வாசனைகளை முகர்ந்து 
வெளியேறிக்கொண்டிருக்கும் காற்றுடன் திசையெங்கும் மிதந்து கொண்டிருக்கின்றன என் சிறகுகள் 
இன்று மாறிய என் உடலெங்கிலும்அதன் நிழல்கள் உராய்ந்து கொண்டிருக்க 
எனது பிரியங்கள் யாவையும் விட்டு விட்டு 
பெரும் கால மழையில் நனைந்து கரைந்து கொண்டேயிருக்கிறேன் மிகுந்த வலியுடன்                                     –  

Series Navigationஅட்டைக் கத்திகள்கிரீன்ஹவுஸ் வாயுக்கள் பெருக்கம் — பூகோளச் சூடேற்றக் கலக்கம் —சூழ்வெளிப் பாதிப்பு — மானிட உடல்நலக் கேடு