உருமாறும் கனவுகள்…

நிலவுக்குள் ஒள‌வைப்பாட்டி
ந‌ம்பிய‌ குழந்தையாய் ‌
க‌வள‌‌ங்க‌ள் நிர‌ப்பப்படுகிறது
நாள்காட்டியில்
தொட‌ர்ந்த‌ இல‌க்க‌ங்க‌ள்.

க‌ருத்த‌ரித்துப் பின்
பின்ன‌ல் சட்டைக‌ளோடு
சுற்றும் ராட்டின‌ப் பூக்க‌ள்
எம் தொட்டிலில்
அடுத்த வீட்டுக் குழ‌ந்தை
நான் வைத்த பெயரோடு.

ச‌ரியில்லாத சுழ‌ற்சியால்
த‌டுமாறும் மாத‌விடாய்
உதிர‌ப்போக்கு
ம‌ருந்து
வைத்திய‌ர்
சுழ‌லாத‌ உட‌ல் உபாதையென‌
ஒற்றைக்க‌வலை‌.

க‌ட‌வுள்…
வ‌ர‌ம்…
வேண்டுத‌ல்…எல்லாமே
நான்…
நீ…
நம்பிக்கை…
மறுதலிப்பு!!!

ஹேமா(சுவிஸ்)

Series Navigationஎனது இலக்கிய அனுபவங்கள் – 7 எழுத்தாளரும் புத்தக வெளியீடும்வேறெந்த சொற்களும் அவனிடம் மிச்சமில்லை