உறவுக்கு கை கொடுப்போம்
கௌசல்யா ரங்கநாதன்
-1-
“உறவுக்கு கை கொடுப்போம்”. இதுக்கு என்னப்பா அர்த்தம்?” என்று என் மகன் ரவி, வயது 9 , அப்போதுதான் அலுவலகத்திலிருந்து ஆய்ந்து, ஓய்ந்து வீடு திரும்பிய என்னை கேட்டபோது,
வெடித்தேன் “போடா வேலையை பார்த்துக்கிட்டு” என்று.
திரு, திருவென விழித்த ரவியின் கண்களில் கண்ணீர் தளும்பி நின்றது.
“இப்ப
ரவி என்ன கேட்டுட்டான்னு இப்படி கோபப்படறீங்க? என்ற என் மனைவி ஜானகியை
பார்த்து “நானே ஆஞ்சு, ஓஞ்சு எப்படா வீடு திரும்புவோம்னு வந்தா இவன் வேற
கேள்வி கேட்கிறான் பாரு எங்கிட்ட, சமய,சந்தர்ப்பம் பார்க்காமல்,”என்றேன்.
“பாவம், அவன் சின்ன குழந்தைங்க. எதுவொண்ணுனாலும் அவன் ஒண்ணு உங்ககிட்ட, எங்கிட்ட, ஸ்கூல் மிஸ் கிட்ட, இல்லைனா அவன்
பிரண்ட்ஸ்க
கிட்டத்தானே கேட்டாகணும். இப்ப நமக்கே ஏதாவது சந்தேகம் வந்தா தொ¢ஞ்சவங்க
கிட்ட கேட்டு விளக்கம் பெறுவதில்லையா? இவ்வளவு ஏன்?
உங்க ஆபிசில, உங்க
வேலைல ஏதாவது சந்தேகம் வந்தா உங்க பாஸ்கிட்ட விளக்கம் கேட்கிறதில்லையா?
அப்படி கேட்காமல் நீங்க ஏதாவது தப்பு, தப்பா பண்ணினா, ஏன் சார் உங்களுக்கு
சந்தேகம் வந்தா
எங்க கிட்ட கேட்டு செய்யக்கூடாதானு அவங்க
சொல்றதில்லையா? எல்லாருக்கும், எல்லா விஷயங்களும் எப்பவும்
அத்துபடியாயிருக்கணும்னு ஏதாவது சட்டம் இருக்கா என்ன?”என்றாள்..அவள்
சொல்வதும் நியாயம்தானே!அதனால்,
நான் பதிலேதும் பேசவில்லை. எனக்கே என்
செய்கை தவறென்று தோன்றுகிறது. இதற்கு,அழுத்தும் பணிச்சுமை தான் காரணம்
என்றாலும் என் கோபத்தை ஏன்தான் ஒரு பச்சிளம் பாலகனிடம் காட்ட
வேண்டும்.
ஜானு மேலும் தொடர்ந்தாள் “த பாருங்க கேள்விகள் கேட்டு பதில் வாங்கி
வளர்ந்ததுதானே நம்ம உலகம். பள்ளியில் பாடம் நடத்திய பிறகு டீச்சர் என்ன
சொல்றாரு?” “இப்ப நான் உங்களுக்கு
சொல்லிக் கொடுத்த பாடத்தில்
எதனாச்சும் சந்தேகம் இருந்தா, இப்பவே,இங்கேயே, கேட்டு கிளியர்
பண்ணிக்குங்கனுதானே. மக்களவையில், மாநிலங்கள் அவைகளில் “கேள்வி நேரம்”
ஒதுக்கிறதில்லையா. அது
மட்டுமல்ல சினிமா பாட்டு ஒண்ணு உண்டே “கேள்வி
பிறந்தது அன்று, நல்ல பதிலும் கிடைத்தது இன்றுனு”. அப்புறம் இன்னொரு
பாட்டு “ஏன் என்று கேள்வி கேட்காமல் வாழ்க்கை இல்லை”.
என்ன அருமையான பாடல் ” என்றவள், ” மன்னிசிருங்க… நான் ஏதாவது தப்பா, உங்க மனசு புண்படறாப்பல பேசியிருந்தா என்றாள்.நானும்,
“இல்லை
ஜானு.. தப்பு என் மேலதான்”என்று அப்போதைக்கு நான் அவளுக்கு சமாதானம்
சொன்னாலும், நான் ஏன் அப்படி என் மகனிடம் வள்ளென விழுந்தேன் என்பதை என் ஆழ்
மனதில் போட்டு புதைத்து வைத்திருக்கிறேன்..சொன்னால் உறவுக்குள் சலசலப்பு
தோன்றலாம்..
அப்படியொரு சம்பவம் நடந்திருக்க வேண்டாம்தான். மனித
மனங்களில் என்ன ஒளிந்து கொண்டிருக்கிறது என்பது மட்டும் பிறருக்கு
பு¡¢ந்து விட்டால் அதி ஜாக்கிரதையாய் இருந்து விடலாமே!ஒரு பழைய திரைப்பட
பாடல் இப்படி அமைந்திருக்கும்..
“ஒருவன் மனது ஒன்பதடா,
அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா” என்று.. மேலும் ஒரு பாடல் இப்படிப்போகும்..
“அந்த முகமா, இந்த முகம்,
இதில் எந்த முகம்தான் சொந்த முகம்” என்று..
அனுபவித்து
எழுதப்பட்ட பாடல். அதாவது ஒருவரை நேருக்குநேர் சந்திக்கும்போது, சினிமா
ஷூட்டிங் காட்சிகள் போல் (“கம்மான், ரெடி, ஸ்மைல்” என்றதும், ஸ்விட்ச்
போட்டார்போல ஒரு ரெடிமேட் சி¡¢ப்பை வலிய
வரவழைத்துக் கொள்வதுடன்,)
“என்னண்ணே,, சௌக்கியமா இருக்கீங்களா?வீட்டில் எல்லாரும் நல்லா
இருக்காங்களா” என்பதும் அந்த ஆள் அவ்விடம் விட்டகன்றதும் “மனுஷனா இவன்..
தூத்தெறி
என்று வெறுப்பை உமிழ்வதும், இவர்கள் அல்லவோ பிறவி நடிகர்கள் என்றே
தோன்றும்! மனம் கிடந்து அடித்துக்கொள்கிறது… அல்லாடுகிறதென்பதே
நிதா¢சனம்.
-2-
ஊம்! ஏன் என் மகனிடம் வள்ளென விழுந்தேன் தொ¢யுமா!
அன்று மாலை நான் மார்கெட் வழியாய் வீடு திரும்பிக் கொண்டிருக்கையில் என்
தம்பி வீட்டு வேலைக்கார அம்மாவை எதேச்சையாய் வழியில் சந்தித்தேன்..
அந்த
அம்மாவும் என்னை பார்த்து புன்முறுவலித்து “ஐயா, நல்லா இருக்கீங்களா?
அம்மா நல்லா இருக்காங்களா?” என்ற போது தலையை மட்டுமே ஆட்டினேன்
புன்முறுவலுடன்.பிறகு, பதிலுக்கு
நானும் அந்த ஆயாவிடம் “நல்லா
இருக்கியாம்மா நீ? உன் புருஷன்,குழந்தை”என்று கேட்டுவிட்டு அவ்விடம்
விட்டகல முயற்சிக்கும்போது “ஐயா, ஒரு நிமிஷம்” என்றாள் அந்த மூதாட்டி.
“சொல்லுங்கம்மா” என்ற போது அவர் தயங்கினார்.
“என்னவாயிருந்தாலும்,
தயங்காம சொல்லுங்க. ஏதாவது வேணுமாம்மா உங்களுக்கு”? என்ற என்னிடம்
“என்னால் சொல்லவும் முடியலை. அதே சமயம் சொல்லாம இருக்கவும் மனசு இடம்
கொடுக்கலை ஐயா”என்றார் அந்த மூதாட்டி.
“அதான் சொன்னேனே,
எதுவாயிருந்தாலும் சொல்லுங்கனு. பயப்படாம சொல்லுங்கம்மா” என்ற என்னை
பார்த்து “ஐயா நான் இப்படி சொன்னேன்னு யாரண்டயும் வாய் தவறிக்கூட நீங்க
சொல்லிட மாட்டீங்களே” என்றவர், சொன்ன செய்தி என்னை திடுக்கிட வைத்தது.
“நான்
இதெல்லாம் எதுவும் கேட்க மாட்டேன். தப்பு எங்க மேலேதான். இந்த
பிரச்சினையை எப்படி டீல் பண்ணனுமோ அப்படி, யார் மனசும் புண்படாம
தீர்த்துக்கிறேன். பயப்படாதீங்க”என்றேன் அந்த மூதாட்டியிடம்..
என்னதான்
நடந்திருக்கும் தம்பி வீட்டில்,அதுவும் ஒரு வேலைக்கார ஆயா மனம் நொந்து
என்னிடம் வந்து முறையிடும் அளவுக்கு! தப்பு என் மேலும்தான். ” தூரத்து
பச்சை கண்களுக்கு
குளிர்ச்சி” என்பது முது மொழி. அந்த ஆயா சொல்வதை மட்டும் கேட்டு எந்த முடிவும் எடுக்க கூடாது.
என்
தம்பி குடும்பம் சென்னை நகருக்குள்ளேயே பல வருஷங்களாய் வசித்து வந்தாலும்,
எப்போதாவது ஒரு முறை நேரம் கிடைக்கும்போது, சுருக்கமாய் சொல்வதென்றால்
தம்பி ஞாபகம்
வரும்போது நான் அவனை தொலைபேசியில் விளித்து இரண்டொரு
வார்த்தைகள் குசலம் விசா¡¢ப்பதும், அவனும் அப்படியே நடந்து கொள்வதும்
உண்டு. எங்கள் இருவருக்குமே குடும்ப
தொந்திரவு, பர பரப்பான அன்றாட
வாழ்க்கை…that is all. வேறு எதுவும் இல்லை. ஒரு பண்டிகை, நாள் கிழமை
தினங்கள் என்றால் கூட sms அனுப்பி வாழ்த்திக் கொள்வது மட்டுமே!பிறகு
அன்றாடப் பணிச்சுமையில் எல்லாம் மறந்து விடுவோம்..
மற்றபடி விரோதம்
என்றோ மனக்கசப்பென்றோ எதுவும் இல்லை. தவிரவும் தம்பி மாதத்தில் 20
நாட்களாவது அலுவலக வேலையாய் டூர் போய் விடுவான்.தம்பி மனைவியும் வேலைக்கும்
போய்க்கொண்டு குடும்பம், குழந்தைகளையும் … ஊம்.. சிரமமான வேலைதான்.
என் வேலை… வேண்டாம் இங்கு என் சுய புராணம். காலையில் 8 மணிக்கே, புற
நகர் பகுதியில், பேருந்து
வசதிகள் அதிகமில்லாத, ஆனால் வாடகை குறைவான
இடத்திலிருந்து கால் நடையாய் 2 கி.மி. நடந்து அங்கும் படிக்கட்டுகளில்
தொற்றிக்கொண்டு எப்போதோ வரும் பேருந்துக்கு கால்
கடுக்க நின்று
அடித்து, பிடித்துக்கொண்டு ஏறி மூச்சு கூட விட முடியாமல் நரக வேதனை
அனுபவித்து பூக்கடை பக்கம் உள்ள அலுவலகத்துக்கு போனால், பல நாட்களில், வீடு
திரும்ப அனேகமாய்
இரவு 9 கூட ஆகிவிடும். சில சமயங்களில் 10 கூட
ஆகிவிடும். அடித்து போட்டாற்போல அலுப்பு, அசதி… சாப்பிடக்கூட தோன்றாது
என்பதே உண்மை. ஞாயிறு போன்ற விடுமுறைகளில்
வேலை செய்தால் OT கிடைக்கும் என்பதால் அதை தவற விட மாட்டேன். என்னை போல மிடில் கிளாஸ் மாதவன்களால் வேறு என்ன செய்ய முடியும். !
என்
மனைவி சொக்க தங்கம். “அடுத்தாத்து அம்புஜத்தை பார்த்தேளா” என்ற ¡£தியில்
வெளிப்படையாய் வெடிக்காவிட்டாலும் அவள் உள் மனம் படும் பாடு, எனக்கு!
ஊம்..வேண்டாமே இதற்கும் மேல், என் சொந்த்க்கதை, சோகக்கதை! நாங்கள் ஒன்றும்
முற்றும் துறந்த முனிவர்கள் இல்லையே! சாதாரண மனிதப் பிறவிகள் தானே!
“பூமியில் மானுட ஜன்மம் எடுத்து விலங்குகள் போலே வாழ்வது முறையோ” ! என்ற
எம்.கே.டி. பாடல், எனக்கு,
இப்போது அனாவசியமாய் நினைவுக்கு வருகிறது.
சே.. “பாசம் என்றும் நேசம் என்றும்”.எல்லாம் எங்கே போயிற்று இன்று?
முன்பெல்லாம் நான் எப்போதாவது தம்பிக்கு போன் பண்ணும் போது,
“ஊம் தம்பி
பாசம் அடிச்சுகுதாக்கும். இதே போல பாசம் அவருக்கும் இருந்தா ஏன் அவரே போன்
பண்ணி “அண்ணே, எப்படி இருக்கீங்க? அண்ணி, குழந்தைக சௌக்கியமானு
கேட்கக்கூடாது?”என்பாள் என் மனைவி..
“இத பாரு அவன் மாசத்தில் 20 நாட்களுக்கு மேல டூர்ல இருக்கான்”,எனும் போதெல்லாம் இடைமறித்து,என் பார்யாள்,
“ஆனா
அவர் மச்சினன், மாமனார், மாமியார், இவங்களுக்கெல்லாம் போன் பண்ணி குசலம்
விசா¡¢க்க முடியுது. ஆனா, கூட பிறந்த அண்ணன், அண்ணியை மட்டும் மறந்து
போகுதுல்ல.
அதெல்லாம் இல்லைனு மட்டும் சப்பக்கட்டு கட்டாதீங்க. நான்
அப்பப்ப அவரு மச்சினன் சம்சாரம், மாமியாரை பார்க்கிறதுண்டு அங்கங்கே.
அப்பல்லாம் கேட்கிறது உண்டு உங்க தம்பியை பத்தி, அவர் குடும்பம் பற்றி
எல்லாம்..அடிக்கடி,
இவங்க அவர் வீட்டுக்கு போறதும், அவங்க, இவங்க
வீட்டுக்கு வரதும் உண்டாம். ஆனா கூடப்பிறந்த அண்ணன்னா மட்டும் இளக்காரம்
நாம வசதி, வாய்ப்புனு இல்லாதவங்கன்றதாலதானே இப்படி ஒரு இளக்காரம்”..
“ஏன்
நீ இப்படியெல்லாம் நினைக்கிறியோ?. இப்பீ சொன்னியே, அவங்க
ஒருத்தருக்கொருத்தர் வீடுகளுக்கு போய் வந்துகிட்டிருக்காங்கனு. அப்படி
நாம் தம்பி வீட்டுக்கு அடிக்கடி போய், வந்துக்கிட்டிருக்கமா!உள்ளூர்தானே..செல்லில் விசா¡¢ச்சிக்கிட்டா போதும்னு இருக்கம்ல..
நீ
நினைக்கிறாப்பல அவன் சம்சாரமும் நினைக்கலாம் இல்லையா, அதாவது ஏங்க உங்க
அண்ணன், அண்ணி, குழந்தைக இங்கே தம்பினு ஒருத்தர் இருக்கார்னு பார்க்க
வரதில்லைனு.
விடம்மா.. அவனுக்கு என்னைப்பத்தியும், எனக்கு அவனைப்
பத்தியும் தொ¢யும்.” இப்படியெல்லாம் சப்பை கட்டு கட்டியிருக்கிறேன் தம்பியை
பற்றி என் மனைவியிடம் பல முறைகள். ஆனால் அன்று நடந்ததை தம்பி வீட்டு
வேலைக்காரம்மா சொன்னபோது மனம் கனத்து போயிற்று..
“அண்ணன் என்னடா, தம்பி என்னடா”..என்ன அறிவு பூர்வமான வார்த்தைகள்!.நடந்தது இதுதான்..
-3-
ஒரு
நாள் தம்பி திடும்பிரவேசா என்று என் வீட்டுக்கு தன் மனைவி, குழந்தைகளுடன்
வந்து பரஸ்பர குசலம் விசா¡¢த்து, பிறகு அவன் புதிதாய்
கட்டிக்கொண்டிருக்கும் (ஆம்.. இன்னம்
பாக்கி வேலைகள் முடியவில்லையாம்)
வீட்டு புதுமனை புகுவிழாவுக்கு நாங்கள் குடும்பத்துடன் வந்திருந்து நான்
முன் நின்று நடத்திக்கொடுக்க வேண்டும் என்ற வேண்டுகோளை வைத்தான்.நான்
நெஞ்சம் நிமிர்த்தி என் மனைவியை பார்த்து இப்ப என்ன சொல்றே தம்பியை
பார்த்து என்ற போது அவள் முகத்தை நொடித்துக்கொண்டு உள்ளே போனாள். “அவர்கள்
வரலாறு அறியாதவர்கள்”
என்ற பழைய சினிமா வசனம் நினைவுக்கு வந்தது
அப்போது. “நிச்சயமாய் நாங்க வந்து நடத்தி கொடுக்கிறோம்” என்று சொல்லி
வாழ்த்தி வழியனுப்பி வைத்தேன் தம்பியை.. “தம்பி உடையான், படைக்கு
அஞ்சான்”என்பது சான்றோர் வாக்கு.. அதே போல் அவன் வீட்டு விழா முதல்
நாளே
போய் எல்லாம் இழுத்துப்போட்டுக்கொண்டு செய்தேன்/செய்தோம். அங்கு
வந்தவர்களிடம் எல்லாம் பெருமையாய் இவர் என் கூடப்பிறந்த அண்ணன்.இவங்க என்
அண்ணி, குழந்தை.
படு சுட்டிப்பய, சமர்த்து. இவங்க என் அண்ணன், அண்ணி
மட்டுமில்லை, பெத்தவங்களுக்கும் மேலே என்றெல்லாம் நெகிழ்ந்தான். இவ்வளவு
பாசத்தை காட்டிய தம்பி, தம்பி மனைவியா இப்படி
என்று நினைத்தபோது தாங்க
முடியவில்லை. விஷயம் என்னவோ சிம்பிள்தான். விழா முடிந்தவுடன் நாங்கள்
வீடு திரும்ப ஆயத்தமானபோது, தம்பியும், அவன் மனைவியும் எங்களிடம் வந்து,
“இப்பத்தான்
குழந்தைக்கு (அதான் எங்க பிள்ளையாண்டான் ரவி) சம்மர் வெகேஷன்தானே! இங்கேயே
குழந்தைகளோட குழந்தைகளாய் லீவு முடியறவரை இவன் இருக்கட்டுமே… பிளீஸ்
அண்ணே
முடியாதுனு மட்டும் சொல்லிடாதீங்க” என்று கேட்டுக்கொண்டதால் அரை
மனதாய் ரவியின் ஒப்புதலையும் பெற்ற பின் தம்பி வீட்டில் விட்டு வந்தேன்
அவனை.நாலு சொந்த,பந்தங்களை அவனும் இப்போதிலிருந்தே தொ¢ந்து கொள்ள வேண்டாமா!
ஆனால் 10 நாட்களுக்குள்ளேயே!
வேண்டாம். உடனே தம்பி வீட்டுக்கு போய்
எதை, எதையோ சொல்லி அவனை வீட்டுக்கு அழைத்துக்கொண்டு வந்து “என்னடா ஆச்சு?
உன் சித்தப்பாவும், சித்தியும் உன்னை கடிஞ்சுக்
கிட்டாங்களாமே? அப்படி
என்ன பண்ணினே அவங்க உன்னை கடிஞ்சுக்கிற அளவுக்கு ” என்ற போது, என்
மனைவியும் அங்கு வந்து “அதான் சொன்னேனே, இவனை அங்கே
விட வேண்டாம்னு.
கேட்டீங்களா என் பேச்சை? அவங்க சும்மா ஒப்புக்கு சொன்னதை உண்மைனு நம்பி
இப்ப இவனை கடிஞ்சுக்கிற அளவுக்கு போய்…. ஊம். அவங்களும் குழந்தைதானேனு
விட்டிருக்கணும்.
அதை விட்டுட்டு ஏன் இவனை கடிஞ்சுக்கணும்ன்றேன். விருந்தும், மருந்தும்
மூணு நாட்கள்னு ஒரு பழமொழி உண்டுல்ல” என்ற போது எனக்கு ஒரு பக்கம் ரவி
மீதும், இன்னொரு பக்கம் தம்பி, அவன் மனைவி மீதும் கோபம், கோபமாய் வந்தது.
குழந்தை என்று கூட பார்க்காமல் இவனை ஏன் கடிந்து கொள்ள வேண்டும். உடனே
ரவியை கூப்பிட்டு “என்னடா நடந்தது அங்கே?
ஏன் உன் சித்தப்பா, சித்தி
உன்னை கடிஞ்சுக்கணும்?” என்றேன். அதெல்லாம் ஒண்ணும் இல்லையேப்பா” என்றான்
ரவியும். ஏதையோ மறைக்கிறான் இவன் என்றே தோன்றியது எனக்கு. இந்தக்கால
பிள்ளைகள்
விடக்கட்ட தொ¢ந்தவர்கள்.. சாமர்த்தியமானவர்கள். இருந்தாலும் அவனை துறுவி,
துறுவி கேட்ட போது அவன் சொன்னான் “அப்பா,நான் தப்பு பண்ணினா நீயோ, அம்மாவோ
என்னை
கடிஞ்சுக்க மாட்டீங்களா? ஸ்கூல்ல விஷமம் பண்ணினா டீச்சர்ஸ்
பனிஷ்மென்ட் கொடுக்கிறதில்லையா?அப்படித்தான் அப்பா இதுவும்…தப்பு பண்ணினா
கேட்பாங்கதான், அது யாராய் இருந்தாலும்…. விடு..விடு..”என்றான் படு
மெச்சூர்டாக.
“அப்படி என்னடா தப்பு பண்ணினே அவங்க உன்னை மட்டும் கடிஞ்சுக்கிற அளவுக்கு?”
“என்னை
மட்டும் கடிஞ்சுக்கலையே, சித்தப்பா பிள்ளைகளையும் தான் அதுவும் மைல்டா
தான் . என்ன நடந்திச்சுனு தொ¢யுமாப்பா? அவர் புதிதாய் கட்டின வீட்டு வெளி
ஜன்னல்கள் உடைஞ்சு
போச்சு நாங்க கி¡¢க்கெட் விளையாடினப்ப. அதுகூட நான்
அடிச்ச பந்து கண்ணாடி ஜன்னல் மேல பட்டப்ப. சித்தப்பா, சித்தி இரண்டு
பேர்களுமே “ஏண்டா பார்த்து விளையாடக்கூடாதாடா?
இப்பத்தானே புது வீடு
கட்டி ஜன்னல் எல்லாம் பிக்ஸ் பண்ணினோம். ஊம்.. விடு. இதுவே பக்கத்து,
அடுத்த வீட்டு பசங்க பண்ணியிருந்தா என்ன பண்ண முடியும். பார்த்து
விளையாடுங்கடா
பசங்களா..கோவிச்சுக்க மாட்டீங்களே..ரவி நீயும், எதையும்
மனசில் வச்சுக் கூடாதுடா என் செல்லம்னு சொன்னாங்க.. தட்டீஸால். இதை ஏன்
பொ¢சா எடுத்துக்கணும்? ஆனா அவங்க எங்கிட்ட எவ்வளவு ஆசையாய், பாசமாய்
இருந்தாங்க? ரவி உனக்கு என்ன பிடிக்கும்னு
சொல்லு. இன்னைக்கு
பார்க்குக்கு போகலமா? பீச்சுக்கு போகலமா? சினிமா போகலமா? என்ன சினிமா, யார்
நடிச்சது உனக்கு பிடிக்கும்னுல்லாம் கேட்டாங்க. நான் என் அபிமான நடிகரைப்
பத்தி
சொன்னேன். அடுத்த நாளே அவங்க என்ன செஞ்சாங்களோ என்னவோ, அந்த நடிகர்
வீட்டுக்கு எங்களை அழைச்சுக்கிட்டு போய் சர்ப்ரைஸா நிறுத்தி, அவங்க கூட
விருந்து
சாப்பிட வச்சு, போட்டோல்லாம் எடுத்துக்கிட்டதோட பேஸ்புக்,வாட்ஸப்பிலல்லாம்
போட்டு, பாண்ட், ஷர்ட் எல்லாம் வாங்கி கொடுத்து… சித்தப்பா, சித்தி,
அவங்க பசங்க எல்லாருமே, தி கிரேட்” என்றவன்,
“அப்பா நான் கேட்க
மறந்துட்டேனே, “உறவுக்கு கை கொடுப்போம்னா” என்னனு பதில் சொல்லுங்கப்பானு
உங்களை. இப்ப நான் கேட்கப்போறதில்லை உங்ககிட்ட..அனுபவபூர்வமா
உணர்ந்துட்டேன்பா..அம்மா”
இப்படியொரு சந்தர்பத்தை எனக்கு ஏற்படுத்திக்
கொடுத்த உங்களுக்கு நன்றிபா. இனி அடிக்கடி சித்தப்பா, சித்தி அவங்க
பசங்களையெல்லாம் நம்ம வீட்டுக்கு நாமும் கூப்பிடணும்.நாமும் நம்ம மத்த
உறவுக்காரங்க, நண்பர்கள் வீடுகளுக்கெல்லாம் போய் வரணும்..
அவங்களோட
ஜாலியாய் இருக்கணும் வெகேஷன்ல… பண்டிகை நாட்களில். சா¢யாப்பா” என்ற போது
எனக்கு மறுபடியும் தோன்றியது “இந்த கால பிள்ளைகள் நாலும்
தொ¢ந்தவர்கள்தான்”என்று..”ஒண்ணா இருக்க கத்துக்கணும்..இந்த உண்மையை சொன்னா
ஒத்துக்கணும்..காக்கா
கூட்டத்தை பாருங்க, அதுக்கு கத்துக் கொடுத்தது
யாருங்க” என்ற திரைப்பட பாடலும், கூடவே அன்று நான் பேருந்தொன்றில்
பயணித்துக்கொண்டிருக்கையில், ஒரு ஃபிளெக்ஸ் விளம்பர வாசகம், என்னை மிகவும்
கவர்ந்தது, நினைவுக்கு வந்தது.. அது ஒரு கட்டுமான துறையின் பிரும்மாண்டமான
விளம்பரம்..அந்த விளம்பர வாசகத்தின் கீழே இப்படி இருந்தது.. அதாவது,
“HAPPINESS IN TOGETHERNESS” என்று..
——
பின்னூட்டங்கள்