என்னை நிலைநிறுத்த …

 

 
ஸ்ரீரங்கம் சௌரிராஜன்
 
பின்னால் கிடக்கும்
செவ்வக வெளியில்
ஆழ்ந்த இருட்டு
ஆக்கிரமிக்கிறது
 
ஐந்தாறு 
அகல் விளக்குகளின் வெளிச்சம்
ஆறுதல் அளிக்கிறது
 
அவ்வப்போது சில
தீக்குச்சிகளின் உரசலில்
தற்காலிக வெளிச்சம்
மனம் நிரப்பும்
 
இழந்ததால்
இறந்தகாலமான
அற்புதக் கணங்கள்
மிதக்கும் இடங்களில்
மனம் லயிக்கிறது
 
உயிரின்
கரைந்த இம்மிகள் 
விரவி நிற்கும் பகுதியில்
என்னை நிலைநிறுத்த
கால்பாவ முடியாமல்
தவிக்கிறேன்.
 
 
 
 
Series Navigationகுருட்ஷேத்திரம் 29 (மண்ணின் மகாபுருஷர்  பீஷ்மர் உரைத்த கதை)எஸ். சாமிநாதன்  விருது