கண்டெடுத்த மோதிரம்

அமீதாம்மாள்

நடந்து செல்கிறேன்
மண்ணில் ஏதோ மின்னுகிறது

அட! ஓர் ஒற்றைக்கல் மோதிரம்
யார் கண்ணிலும் படாமல்
என் கண்ணில் எப்படி?

இது என்ன
பிளாட்டினத்தில் வைரமா அல்லது
வெள்ளியில் புஷ்பராகமா?

ஓர் ஆசரீரி கேட்கிறது

என் தேவைகளைச் செய்ய
தேவதை எனக்குத் தந்ததாம்

இப்போது மனவெளி மேய்வது
மோதிரம் மட்டுமே

தெரியவந்தது உண்மை
அது வைரமில்லையாம்
வெறும் கண்ணாடித் துண்டாம்

மோதிரத்தைக் கேட்டேன்

‘என் தேவைகளைச் செய்ய
தேவதை தந்ததென்றது பொய்யா?’

மோதிரம் பேசியது

தேவதை தந்ததே நான்
உனக்குப் பொருள் தர அல்ல
போதி மரமாக
ஆசைகளை வளர்த்து
ஏங்கி ஏங்கி எதிர்பார்த்து
ஏமாந்து போவதல்ல வாழ்க்கை

வாழ்க்கையைப் புரிந்துகொள்
நிகழ்வுகள் எதுவானாலும்
அவிழும்வரை அமைதியாயிரு

Series Navigationநாக்குள் உறையும் தீதினம் என் பயணங்கள் -45 இலக்கை நோக்கிய பயணம்!