கதவு திறந்திருந்தும் …

Spread the love

 

 

ஸ்ரீரங்கம் சௌரிராஜன்

 

கதவு திறந்திருந்தும்

அவன் இன்னும்

உள்ளே போகவில்லை

 

பயணிக்கிறோம்

என்ற நம்பிக்கையில்

அவன்

அதே புள்ளியில் நிற்கிறான்

 

இலக்கிய தாகத்தில் அவன்

சில வடிவங்களில்

தன்னை நிரப்பிப் பார்த்தான்

எங்கும் நிலைக்க முடியவில்லை

 

அவன் மனத்தில் 

சில எழுத்துகள் இருக்கின்றன

அவை சொற்களாவதில்லை 

 

சில சொற்கள் இருக்கின்றன

அவை வாக்கியங்களாவதில்லை

 

சில வாக்கியங்கள் இருந்தும்

அவை கவிதையாவதில்லை

 

அவன் கோப்பையில் நிரம்பி

விலகிச் செல்லும் காற்றைக்

கவிதையென அவன்

தரிசித்து மகிழ்கிறான்

 

—– கதவு திறந்திருந்தும்

அவன் இன்னும்

உள்ளே போகவில்லை !

 

                 +++++++

 

Series Navigationஊடகவியலாளர் ஜமால் கஷோக்ஜியின் கொலை – நடந்தது என்னஒரு கதை ஒரு கருத்து – ஸ்டெல்லா புரூஸ்ஸின் ஐ லவ் எவ்ரிதிங் அண்டர் த ஸன்