கம்பராமாயண போட்டிகள்

வணக்கம். கடந்த 7 ஆண்டுகளாக  “கம்பன் விழா” என்னும் விழாவின் வழி –
1. கம்பராமாயண செய்யுள்களை மனனம் செய்து விளக்கத்துடன்
ஒப்புவித்தல்,
2.கம்பராமாயணக்  காட்சிகளை நாடகமாகப் படைத்தல்,
3.கம்பராமாயண சொற்பொழிவுகள்
4.கம்பராமாயணத்தில் இடம் பெற்றுள்ள காட்சிகளை ஓவியமாக வரைதல்
என்று பல்வேறு போட்டிகளை 12 வயது முதல் 23 வயது வரையிலான மாணவர்களுக்கும்,
5. கம்ப ராமாயணக் கதை மாந்தர்களை அடிப்படையாகக் கொண்ட மாறுவேடப் போட்டிகளை 7 வயது முதல் 11 வயது வரையிலான மாணவர்களுக்கும்,
6.கம்பராமாயணத்தின் செய்யுள்களைக் கொண்டு கவியரசர் கண்ணதாசன் அவர்கள் சினிமாத் துறைக்கு எழுதி வெளிவந்துள்ள பாடல்களைப் பாடும் போட்டிகளைப் பெற்றோர்களுக்கும்
“கம்பன் விழா”வின் வாயிலாக    நடத்தி    வந்துள்ளோம்.
இதுவரையிலும் மாநிலம் மற்றும் நாடு தழுவிய நிலையில்  மட்டுமே போட்டிகள் நடத்தப்பட்டு வந்துள்ளன.
எதிர்வரும் ஆண்டில் வெளி  நாட்டில் வாழும் தமிழ் ஆர்வலர்களும் இவ்விழா பற்றி அறிந்து கொள்ளவேண்டும், சில கட்டுரைகளைப் படைக்கவேண்டும் என ஆவல் கொண்டுள்ளோம்.
கட்டுரைகளுக்கு சன்மானம் ஏதும் இல்லை. ஆயினும், படைக்கப்படும் கட்டுரைகள் மலேசியாவில் உள்ள மாணவர்களுக்கு     “கம்பராமாயணம் காட்டும் வாழ்வியல் நன்னெறிகளை” உணர்த்தும்    வழிகாட்டியாக அமையும் என நம்புகிறோம்.
எனவே, இத்துடன் இணைக்கப்பட்டுள்ள போட்டி விபரங்களைத் திண்ணையில் பிரசுரித்து, சிரம்பான் கம்பன் கழகத்துக்கு ஆதரவு தருமாறு அன்பு டன் கேட்டுக் கொள்கிறோம்.
நன்றி. வணக்கம்.
இவண்,
இனிய பூங்கொத்துகளுடன்
என்.துளசி அண்ணாமலை
தலைவ
சிரம்பான் கம்பன் கழகம்
கம்ப ராமாயணப் போட்டிகள்
Series Navigationபார்த்தேன் சிரித்தேன்பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் !  பூமியின் மர்மமான முணுமுணுப்பு ஓசை நாதம் முதன்முதல் கடலடியில் பதிவானது