கர்நாடக இசை மேதை மணக்கால் எஸ்.ரங்கராஜன் பற்றிய டாகுமெண்டரி படம் சென்னையில் திரையிடப்படவிருக்கிற

Spread the love

கர்நாடக இசை மேதை மணக்கால் எஸ்.ரங்கராஜன் பற்றிய டாகுமெண்டரி படம் சென்னையில் திரையிடப்படவிருக்கிறது. குரு என்று எவரிடமும் பாட்டு கற்றுக் கொள்ளாமல் தானே சுயமாக சாதக வலிமை மூலம் இசை உலகில் தனக்கென தனி முத்திரை பதித்தவர். ஜி.என்.பி., மதுரை மணி ஐயர் போன்ற ஜாம்பவான்கள் காலத்தில் தொடங்கி இன்றும் கச்சேரிகள் செய்பவர். 90 வயதாகும் இவர் இன்று வாழ்கிற கர்நாடக இசைப் பாடகர்களிலேயே மிகவும் மூத்தவர். இன்றைய தலைமுறையினருக்கும் வருங்கால சந்ததியினருக்கும் அறிமுகம் செய்விக்கும் வகையில் உருவான   இப்படத்தை லண்டன் ஆர்.பத்மநாப ஐயர் தயாரித்துள்ளார். அம்ஷன் குமார் இயக்கியுள்ளார்.

மணக்கால் எஸ்.ரங்கராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

ஆங்கில சப்டைட்டில்களுடன் கூடிய 75 நிமிடத்  தமிழ்ப் படம்.

இடம் : அல்லயன்ஸ் பிரான்ஸ், 24 காலேஜ் ரோடு , நுங்கம்பாக்கம் , சென்னை 600 006

நாள் ;செப்டம்பர் 9ம் தேதி

நேரம்: 6 மணி

அனைவரும் வருக!

Series Navigationஆசிரியர்களை நோக்கி ஒரு ஆசிரியப்பா!Bharathiar-Bharathidasan Festival 2012,Singapore