காணாத கனவுகள்

Spread the love

 

 

சல்மா தினேசுவரி

 

வானத்தை அடைய என் கனவுகள்
சிறகுகளோடு பிரசவிக்கப்படவில்லை… 

புதைப்படும் சாத்தியங்களும் 

தொலைந்து விடும் சாத்தியங்களும் உண்டு …

 

துண்டிக்க துடிக்கும் கரங்கள்

கல் எறியும் கலாச்சாரங்கள்

எதுவும் மடிந்து விட வில்லை 

இங்கு மறைக்கப்பட்டு 

 

ஊனமான கனவுகளோடு

உறக்கமில்லா இரவுகளை

நினைவுகளை கொண்டு

கடந்துவிட முடிவதில்லை…

 

நுடமான கனவுகளைத் துக்கம் விசாரிக்க பத்து பேரும்

மடிந்து போனால் சாக்காடு வரை தூக்கிச் செல்ல நான்கு பேரும்

சொல்லாமலே வந்து சேருவர் 

 

இது கனவுகளுக்கு அப்பாற்பட்டது…

 

இன்று மீண்டும் திடீர் பிரசவம்  

இம்முறை பத்து சிறகுகளோடும்

வெட்டி எறிய கூரிய வாளும்…

கனவு விளிம்பில் மரணிக்க ஒரு தூக்குக் கயிறும் …

 

 

– சல்மா தினேசுவரி (Salma Dhineswary)

Series Navigation2021 ஆண்டில் 20 செல்வீக நாடுகளில் கரிவாயு வீச்சு விரைவில் மிகையாகிறது .குருட்ஷேத்திரம் 23 (சக்கரவியூகத்தில் அகப்பட்டு மாண்ட வீரஅபிமன்யூ)