குப்பையிலா வீழ்ச்சி

 அ.டெல்பின் 

கனவுகளுக்  கிடையில்
என் காலங்கள்
கசக்கப்பட்டு  விட்டன.

மடிப்புகளின்  ஓரத்தில்
மின்னலாய்  நினைவுகள்
வருவதும்  போவதுமாய்….

உலகத்தின் ஓட்டத்தில்
இறுக்கப் படுகின்றேன், இன்னமும்
மையத்தை  நோக்கி
முடிவுகள்  நீள்கின்றன.
விரிவதற்கு இடமில்லா  நிலையில்
குப்பையிலா  வீழ்ச்சி?

Series Navigationபையன் அமெரிக்கன்மொழிவது சுகம் : எப்ரல் 2 – 2018