கேள்வி பதில்

– சேயோன் யாழ்வேந்தன்

கேள்வி
எதையாவது
கேட்டுக்கொண்டுதானிருக்கிறது
பதில்
எதற்கும்
பதிலளிக்காத போதும்
ஆதியில்
ஒரு கேள்வி
ஒரு பதில்தான்
இருந்ததாம்
ஒரு கேள்வி
விளங்காமல்
இத்தனை கேள்விகள்
ஒரு பதிலும்
விளங்காமல்தான்
இத்தனை பதில்கள் –
கேள்வி தான்
பதில்.
பதில் கேள்வி
கேளாமல் போ.
seyonyazhvaendhan@gmail.com

Series Navigationபோராடத் தயங்குவதோமறுப்பிரவேசம்