கையாளுமை

காட்சி ஒன்று ..
மறுத்து பேசும் பிள்ளைகளிடம்
மன்றாடி மனு போட்டு,
மாறுவேடம் தரித்து பயமுறுத்தி,
கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொண்டு


காட்சி இரண்டு ..
உம்மென்றால் உம்மனாமூஞ்சிகளாகி,
ஏனென்றால் எரிமலையாய் எழும்
வயதான வீட்டு பெரியவர்கள்
மனம் கோணாமலிருக்க கோணாங்கியாகி ..


காட்சி மூன்று ..நான்கிலும்
ஏதோவொரு உத்தியை கையாண்டதில்
மான,ரோஷம்,வெட்கம்
சூடு, சொரனை யாவும்
இப்போது அஞ்சறை பெட்டியில்..
தாளிதத்திற்கு மட்டும்


- சித்ரா (k_chithra@yahoo.com)
Series Navigationகேரளா நெல்வயல் மற்றும் நீர்பாங்கான பகுதி பாதுகாப்பு சட்டம் 2008சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 48