சப்தஜாலம்

Spread the love

-மகேஷ்.

Leaf, Tree, Sheet, The Lone, Rosa, Golden, Thuja

சொற்களை வளைத்து நிதமும்

காகிதத்தில் வரைந்து வைத்தேன்.

 

படிக்கோல வடிவம் கண்டு

பாடல் என்று சொன்னார் ஒருவர்.

 

குவியலில் பெயர்களைப் பார்த்து

நல்ல கதை என்றார் நால்வர்.

 

சீவியக் கூர்ப்பதங்களைத் தொட்டு

உரையென்று சிலிர்த்தார்

சிலர்..பிழையென உமிழ்ந்தார் பலர்..

 

சூதாடிக்கை சீட்டு போல

வார்த்தைகள் கலைத்து வீசி

மனிதரை மயக்கும் வித்தை 

கைவரப் பெற்றதாகக்

களி கொண்டு திரியலானேன்..

 

போதையில் மிதக்கலானேன்..

 

*******

 

சொல்லுதிர்க் கால

அபூர்வக் கணமொன்றில்

மயங்கியது மனிதரல்ல 

நானே

எனத் தெளிந்து கொண்டேன்.

 

கணக்கில்லா கழிந்த நேரம்

கடந்த பின் வந்த ஞானம்..

 

சொற்களுக்கிடையில்

துலங்கும் மோனமே

கவிதை என்க..

 

Series Navigationஒருமையைத் தேடி சூஃபி பார்வையின் வழியே பகவத் கீதையும்-குரானும்  மூஸா ராஜாவின் IN SEARCH OF ONENESS என்ற நூலின் தமிழாக்கம்தந்தையின் இருத்தலும் மகளின் கட்டுடைப்பும் ‘பெத்தவன்’ நெடுங் கதையை முன்வைத்து.