சாமிக்கண்ணு திரைப்படச் சங்கம் – மே மாத திரையிடல் (திரையிடல் 3)

 

06-05-2018, ஞாயிறு, மாலை 5 மணிக்கு.MM திரையரங்கம், கோடம்பாக்கம் மேம்பாலம் அருகில்.

சினிமா ரசனை வகுப்பெடுப்பவர் & கலந்துரையாடல்: சணல் குமார் சசிதரன்

திரையிடப்படும் படம்: செக்சி துர்கா – இயக்கம்: சணல் குமார் சசிதரன் (மலையாளம்)

நுழைவுக்கட்டணம்: ரூபாய் 150/- (தமிழ் ஸ்டுடியோ உறுப்பினர்களுக்கு ரூபாய் 50/-)

நண்பர்களே சாமிக்கண்னு திரைப்படச் சங்கம் ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிறு சங்க உறுப்பினர்களுக்கான படங்கள் திரையிட்டு திரைப்பட ரசனை குறித்து வகுப்பு மற்றும் கலந்துரையாடலையும் நடத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக மே மாதம் சமீபத்தில் மலையாளத்தில் வெளியான மிக முக்கிய படமான செக்சி துர்கா திரையிடப்பட்டு படத்தின் இயக்குனர் சணல் குமார் சசிதரன் அவர்களுடன் கலந்துரையாடலும் நடைபெற இருக்கிறது. அண்மையில் தணிக்கைத்துறை மற்றும் அரசு தலையீட்டால் மிக அதிக சிக்கலுக்கு உள்ளான படம் இது. சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தெரிவு செய்யப்பட்டு பின்னர் பல்வேறு காரணங்களுக்காக திரையிடுவதற்கு தவிர்த்து மிக பெரிய சர்ச்சையை உருவாக்கியது தணிக்கை துறையும் அரசும். இது கலைஞனுக்கு இழைக்கப்பட்ட துரோகம். அந்த துரோகத்தில் இருந்து மீண்டு நீதிமன்ற துணையுடன் இந்த படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. எஸ். துர்கா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட பிறகே தணிக்கை துறை அனுமதி அளித்திருந்தாலும், தமிழ் ஸ்டுடியோ இந்த படத்தை செக்சி துர்கா என்கிற பெயரிலேயே அழைக்கும். திரையிடும். இது ஒரு இயக்கத்திற்கும், கலைஞனுக்குமான அடிப்படை உரிமை. இந்த நிகழ்வில் பங்கேற்று இயக்குனருடன் கலந்துரையாடுவது மிக முக்கிய சமூக செயல்பாடு. எனவே நண்பர்கள் பெரும் திரளாக பங்கேற்று ஆதரவு தாருங்கள்.

நுழைவுக்கட்டணத்தை பியூர் சினிமா புத்தக அங்காடியில் செலுத்தி, அனுமதி சீட்டை பெற்றுக்கொள்ளுங்கள். நேரில் வர இயலாத நண்பர்கள் கீழ்க்கண்ட அலைப்பேசி எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்துக்கொள்ளுங்கள். முன்பதிவு செய்துவிட்டு பெரும்பாலான நண்பர்கள் இறுதி நேரத்தில் வருவதில்லை. எனவே கட்டணம் செலுத்தி அனுமதி சீட்டை பெற்றுக்கொள்பவர்களுக்கே முன்னுரிமை. கட்டணம் செலுத்தாமல் முன்பதிவு செய்பவர்களுக்கான இருக்கையை உறுதி செய்ய இயலாது. மிக குறைந்த இருக்கைகளே உள்ளன. விரைந்து கட்டணம் செலுத்தி உங்கள் அனுமதி சீட்டைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

முன்பதிவு செய்ய: முன்பதிவு செய்ய: 9840644916, 044 42164630

Series Navigationஅடியார்கள் போற்ற ஆடிர் ஊசல்உலகின் தலை சிறந்த சில ஓரினப்படங்கள் 3 -பேர்வெல் மை கான்குபைன்