சிநேகிதம்

செல்லவில்லை.

இல்லை
செல்ல முடியவில்லை.

செல்ல முடிந்திருந்தாலும் ‘எடுப்பதற்குள்’
சென்றிருக்க முடியுமா?

‘எடுப்பதற்குள்’
சென்றிருக்க முடிந்தாலும்

இற்றைப் பொழுதில் இரு பறவைகளில் ஒரு பறவை தனியாய்
இன்னொன்றை நினைந்திருப்பதைப் போல
அற்றைப் பொழுதிலும் அவனை நினைந்திருந்திருப்பேன் என்பதன்றி

வேறென்ன
செய்திருக்க முடியும்?

சென்றிருக்க முடியும் என்பதால்
இப்படியெல்லாம் என் வாலை நானே விழுங்குகிறேனா?

செல்லவில்லை
என் பால்ய சிநேகிதன் சாவுக்கு என்பது நினைத்தால் தேள் கொட்டும் இன்னும்.

கு.அழகர்சாமி

Series Navigation