ஜெயலலிதா கரம், ஸ்டாலின் நிறம், நடுத்தரத்தான் பயம்.

This entry is part 6 of 15 in the series 5 ஜூன் 2016
 
                       இரா.ஜெயானந்தன்.
முதல்வரின் கடைக்கண் பார்வை, ஸ்டாலின் மேல் விழுந் துள்ளது.
மு.க.வின் பிள்ளையாக பார்க்காமல், எதீர்க்கட்சி தலைவர் என்ற
நோக்கில் அவரை அணுகுகின்றார். அந்த காலத்திலிருந்தே,
ஸ்டாலின் ஒரு நாகரீக அரசியல்வாதிய வலம் வந்துள்ளார்.
யாருக்குமே வளையாத முதல்வர், திமுகவுடன் இணைந்து
செயலாற்ற அழைப்பு விடுத்துள்ளார். அவருக்கு அரசியல்
முதிர்ச்சி என்று, அவரது தொண்டர்கள் பாரட்டுகின்றனர்.
எல்லாம், அரசியல் சதி என்று , எதிர்கட்சிகள் கூறுகின்றன.
அல்லது, வங்க அரசியல் போலவும், கேரளா அரசியல்வாதி
போலவும், ஒரு அரசியல் நாகரீகத்தை, முதல்வர்
கடை பிடிக்கின்றரா ?  யாமறியோம் பாரபரமே !
இது எதிர்  கட்சிகளை, அடக்கியாளவும், முதல்வரின்
திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடாமல் இருப்பதற்காவும்,
அவர் ஒரு புதிய வழியை கண்டு பிடித்துள்ளார்,
என்று வல்லுனர்கள்.
வல்லுனர்கள் மேலும் கூறுவது, முதல்வரின் திட்டங்களை,
எதிர் கட்சிகள், குறிப்பாக, திமுக எதிர்வினை ஆற்றும் போது,
அத்திட்டங்கள் மக்களுக்கு போய் சேராமல், திமுகவினர்
கூச்சலையும், குழப்பத்தையும், உண்டாக்கி, சபையின்
ஆரோக்கியமான் நேரத்தை வீணடிக்கின்றனர் என்ற
குற்றச் சாட்டை அவர்கள் மேல் போடலாம்
என கூறுகின்றனர்.
இதனால் பொது ஜனம், திமுக மீது, மேலும் வெறுப்பை
வளர்த்து, அடுத்த தேர்தலிலும், அதிமுகாவின் வோட்டு
வங்கியை, குறையாமல் பார்த்துக் கொள்கின்றார்.
திமுகாவிற்கும், அதிமுகாவிற்கும் 1.1% தான் வோட்டு
வித்தியாசம் என்று, அரசியல் கணக்கில் மூத்த
கருணாநிதி கூறி, அம்மாவை, மிரட்டியுள்ளார்.
ஆனால், அம்மாவின் இலவசங்கள், ஏழை எளிய
மக்களை குளுமை படுத்துகின்றது. இதனை கண்டுதான்,
நடுத்தரம் அஞ்சுகின்றது. நடுத்தரத்தான் நடுத்தெருவின்
முனையில் நிற்கின்றான். விலைவாசி ஒரு பக்கம்,
வேலையில்லா திண்டாட்டம் ஒரு பக்கம். அரசு,
வேலை வாய்ப்பை ஏற்படுத்த, புதிய திட்டங்களை
கொண்டு வரவேண்டும்.முதல்வரின் அரசியல்  ஆலோசகர்கள், அவருக்கு சரியான
கணக்கு பிள்ளை மார்களாக இருந்தால்தான், நடுத்தரத்தான்
தப்பிக்க முடியும். இனி வரும் காலத்திலாவது, அரசின்
செலவினளை குறைக்க வேண்டும். அரசின்
கைவச்ம் உள்ள , இயற்கை வளங்களை, அரசே வியாபாரம்
செய்ய முற்படவேண்டும். அதனை, கரை வேட்டிகளுக்கு
விட்டு கொடுத்தால், கோவிந்தா 1 கோவிந்தா !!

இனிமேலாவது, மக்கள் நலனில், இனறைய அரசு, கவனம், செலுத்தினால்,
நடுத்தரத்தான், கொஞ்சம் நிம்மதியாக மூச்சு விடமுடியும்.
சாதாரண மக்கள், ஒருவித திராவிட போதயில்தான் இருக்கின்றனர்.
உணமையிலேயே, மக்கள் இந்த முறை, அம்மாவின் நல்லாட்சிக்கு
காத்து இருக்கின்றனர்.

.
இதனை அடுத்து, ஆரோக்கியமான திட்டங்களை சொன்ன
ப.ம. கா, வையோ, சீமானையோ மக்கள் கண்டு கொள்லவில்லை.
காமராசர் வழியில் வந்த, தமிழருவி ம்ணியனை,
அரசியலை விட்டே ஓட செய்து விட்டார்கள். நல்ல
ஒரு அரசியல் வாதியை, தமிழகம் இழ்ந்து விட்டது.
காமராசரையே மறந்து விட்டோம். இனி அருவியாவது,
ஆறாவது. என்ன நான் சொல்வது சரிதானே பொது ஜனமே !

அரசின் கல்லா பெட்டியை, முதல்வரே திறந்து முதல்வரே மூட
வேண்டும். இல்லையேல் கோவிந்தா ! கோவிந்தா !!!
பால் வளத்தை பெருக்க புதிய முயற்சிகள் நடந்தால்தான்,
அவர் பால் விலையை குறைக்க முடியும். மின்சார உற்பத்தியை
பெருக்கினால்தான் , ஏழையின் குடிசையில், விளக்கெரியும்.

கருணாநிதிக்கும், அதிமுகவினரும், இது நாள்வரை, மக்களை
பற்றி கவலைப் படாமல், கல்லாவை நிரப்பும் வேலையே,
பிரதானமாக இருந்தது. அதற்கு தண்டையாக, திமுகாவிற்கு
ஒரு பெரிய பாடாமே, மக்கள் புகட்டியுள்ளனர்.

இனிமேலாவது, மக்கள் நலனில், இனறைய அரசு, கவனம்,
செலுத்தினால், நடுத்தரத்தான், கொஞ்சம் நிம்மதியாக மூச்சு
விடமுடியும்.

உணமையிலேயே, மக்கள் இந்த முறை, அம்மாவின்
நல்லாட்சிக்கு காத்து இருக்கின்றனர்.

நடுத்தரத்தானை, நடுத்தெரு பரதேசி- பண்டாரமாக
மாற்றி விடாதீர்கள்.

திராவிட போதையை கலைத்து விடாதீர்கள், அடுத்த தேர்தல்
வெகு தூரத்தில் இல்லை.

Series Navigationதிரும்பிப்பார்க்கின்றேன் – இர. சந்திரசேகரன் விஞ்ஞானிகளின் வாழ்வையும் பணிகளையும் எளிய தமிழில் எழுதிய படைப்பாளிசூரியனை ஒளிமறைவாய்ச் சுற்றிவரும் ஒன்பதாம் பூதக்கோள் வேறு பரிதி மண்டலத்தில் திருடப் பட்டது !
author

இரா. ஜெயானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *