ஜே.பிரோஸ்கான் கவிதைகள்

Spread the love

ஜே.பிரோஸ்கான்

ஓணானின் உயிர் தப்புதல்..!
பச்சை ஓணானின் பதுங்குதலைக்
கண்டு நானும் பதுங்கலாகி
ஈர்க்கில் சுருக்கை நீட்டி
ஓணானின் பயந்தலாகுதலைக்
கண்டு கண்விரித்து முன்னேறுகிறேன்
பிடிவாதமாய் தூரமாகும் ஓணானின்
தலையாட்டுதல் எனக்கான
அதிகார கோபத்தினை பீறிடச்
செய்தலாகி இன்னுமின்னும்
அது மரத்தின் நுனி நோக்கி
நகரும் போது தோற்றே
போகிறது எனதான முயற்சித்தல்
ஓணானின் ஆயுளின் நீள்ச்சியோடு.

அடக்க முடியா ஆத்திரம்.. 5
வீட்டுப் பூனைகளின் சிலதுமான
நடத்தல் பல நேரங்களில்
வெருக்கத்தக்கதாகி அடிக்கவும்
நேர்ந்து விடுகிறது.
அப்போது தான் நான்
என் செல்லமகளின் எதிரியாகி
அவளின் தினப் புன்னகைக்கு
முற்றுப்புள்ளி வைத்தவனாய்
மனைவியின் குற்றவியல் நீதி
மன்றத்திற்குள் அடங்கி அவஸ்த்;தை
படுவதெல்லாம் ராத்திரி அவளுடனான
தூக்கத்தை இழக்கும் போதுதான்

Series Navigationவாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 47காத்திருங்கள்