தமிழ் இலக்கண உருவாக்கத்திற்கான கோட்பாடுகளும் சமஸ்கிருத இலக்கணங்களின் தாக்கமும்

author
1
0 minutes, 6 seconds Read
This entry is part 4 of 27 in the series 6 செப்டம்பர் 2015

முனைவர்.பா.சங்கரேஸ்வரி,

உதவிப் பேராசிரியர்,
தமிழியல் துறை,
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்,
மதுரை – 21.

ஒரு மொழியில் எழுதப்படும் இலக்கண நூல் அம்மொழியை மட்டும் அடிப்படையாக வைத்துப் படைக்கப்பெறுவதில்லை. அவ்விலக்கண நூல் எழுதப் பெற்ற கால அரசியல், சமூகச் சூழல் ஆகியவற்றோடும் தொடர்புடையவையாகும். உலகின் செவ்வியல் மொழிகளாகவும் தொன்மை மொழிகளாகவும் கிரீக், இலத்தீன், சீனம், எபிரேயம் தமிழ், சமஸ்கிருதம் ஆகியன கருதப்படுகின்றன. இவற்றுள் தமிழும், சமஸ்கிருதமும் இந்தியத் துணைக் கண்டத்தில் செழித்து வளர்ந்தவை. இவ்விரண்டின் இலக்கண, இலக்கிய மரபு வேறுவேறாக இருந்தாலும் ஒன்றின் தாக்கம் மற்றொன்றின் மீது இல்லாமல் இல்லை.
1. “அரசியல் நிர்வாகத்திலும் கல்விமுறையிலும் செல்வாக்குப் பெற்றுச் சமூக மதிப்போடு விளங்கும் ஒரு மொழியின் இலக்கணமரபு, மற்றொரு மொழியின் இலக்கண அமைப்பிற்கு மாதிரியாக விளங்கும்”.
2. இலக்கண மாதிரி என்பது அமைப்பு ரீதியான மற்றொரு மொழியின் இலக்கணத் தாக்கம் ஆகும்.
3. ஓர் இலக்கண மரபின் மீது ஏற்படும் மற்றொரு இலக்கண மரபின் தாக்கம் ஒரு மாறுபட்ட இலக்கணக் கருத்தாக்கத் தேவையின் அடிப்படையில் நிகழ்கிறது.
இதனை, “இலக்கண உருவாக்கத்தில் இலக்கண ஆசிரியரின் சமூக உணர்வும் மொழியுணர்வும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இவை இலக்கண ஆசிரியன் வாழ்ந்த காலத்தோடு தொடர்புடைய உணர்வு நிலையின் வெளிப்பாடுகள். படைப்பும் பயனாக்கமும், பயன் பெவோரும் ஒரு நேர்க்கோட்டில் இணைவது இலக்கண மாறுபடும் போது புதிய படைப்பின் தேவையும், புதிய பயன்பாடும் வற்புறுத்தப்படுகின்றன. “என்கிறார் சு.இராசாரம். காலத்தின் தேவைகளை அடியொற்றியே பல்வேறு இலக்கணங்கள் பல காலகட்டங்களில் தோன்றியுள்ளன. “இலக்கண உருவாக்கம் சூனியத்தில் நிகழ்வதன்று, இலக்கணம், ஒரு சமூகஉற்பத்திப் பொருள் எனவே தான் இதன்மீது சமூகத்தின் அடையாளப்படுத்தலும் அழுத்தமாக உள்ளது.

சமுதாயம் என்பது ஒப்புக் கொள்ளப்பட்ட பழக்கவழக்கங்கள், வழிமுறைகள் எனலாம். உலகில் பல சமுதாயங்கள் தோன்றுவதற்கும், இவையே காரணங்களாக அமைகின்றன. தமிழ்மொழி ஒன்றுதான். அதற்கு இத்தனை இலக்கணம் உருவாக்கத்திற்கானத் தேவை யாது? ஏனெனில் ஒவ்வொரு இலக்கணமும் அக்காலகட்ட வழக்கு மொழியை பிரதிபலிப்பனவாக அமைந்துள்ளன. எனவே தொல்காப்பியர் காலந்தொட்டு 20ம் நூற்றாண்டு வரை தமிழ் மொழியால் நடைபெற்ற மாற்றத்திற்கு காரணம் யாது? சமூக அரசியல் தளங்களில் செல்வாக்குப்பெற்று எம்மொழித் திகழ்ந்து விளங்கியது. செல்வாக்கின் காரணமாக இலக்கணம் உருவாக்கத்தில் ஏற்படுத்திய புதிய மாற்றம் யாது? என்பதை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

ஒரு மொழியின் மீது மற்றொரு மொழியின் கலப்போ, தாக்கமோ ஆதிக்கமோ மிகச் சாதாரணமாக நிகழ்ந்து விட முடியாது. அரசியல் நிர்வாகத்திலும், கல்வி முறையிலும், செல்வாக்குப் பெற்று விளங்கும் ஒரு மொழியின் இலக்கிய இலக்கண மரபு மற்றொரு மொழியின் இலக்கிய இலக்கய அமைப்பிற்கு மாதிரியாக விளங்கும் என்பதை நிருபிப்பதற்குச் சமூக, அரசியல், பண்பாடு நிலைகளில் பிராமணர்களின் செல்வாக்கை முதலில் அறியலாம்.

சமுதாயம் என்பது ஒப்புக் கொள்ளப்பட்ட பழக்கவழக்கங்கள், வழிமுறைகள் எனலாம். உலகில் பல சமுதாயங்கள் தோன்றுவதற்கும், இவையே காரணமாக அமைகின்றன. இவற்றின் அடிப்படையில் தமிழகத்திற்கு உள்ளேயும் சமஸ்கிருத மயமாக்கல் நிகழ்த் தொடங்கியது.

ஆரியர் இந்தியாவிற்கு வருவதற்கு முன் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனத் தமிழர் வாழ்க்கைமுறை நில அடிப்படையில் பகுக்கப்பட்டிருந்தது. ஆரியர்களின் வருகைக்குப் பின் ‘திணைச் சமுதாயம்’ தனிநபர் சமுதாயமாக உருவெடுத்தது.
மனித வாழ்வின் பொருள் பேரின்பப் பேறே’ என்ற ஆரியக் கொள்கையை ஏற்ற பிறகு அறமும், வேள்வியும் மன்னனின் கடமையாயின. அரசியலில் சமஸ்கிருத மயமாதல் என்பது சமூகக் கட்டுகோப்பிற்குள்ளும் அமைந்தது. பார்ப்பனர்க்குப் பணிதல், அரசனின் கடமை, அரசனுக்கு இலக்கணம், அந்தணர்க்கு நிடலமானியம் வழங்குதல் போன்ற கருத்துக்களும் வலியுறுத்தப்பட்டன.

சேரமன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், பாண்டிய பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி போன்ற அரசர்கள் பிராமணர்களுக்குப் பரம்மதேசிய கிராமங்களை நன்கொடையாக வழங்கினர். அதற்கு ஈடு செய்ய இராஜசூய வேள்வியைப் பராமணர்களால் நடத்திக் கொடுத்தனர்.

பார்ப்பனர்க்குத் தீங்கு செய்தால் பரிகாரம் கிடையாது. இதனால் போர்க் காலத்தில் பசுக்களையும், பார்ப்பனர்களையும் பாதுகாப்;பான இடத்திற்குக் கொண்டு சென்றனர். (புறம்.9)

மலையான் திருமுடிக்காரி தனது நாடு முழுவதையும் பிரமதேயமாகக் கொடுத்து விட்டதால் அவனுடைய நாட்டை பகைவர்களால் கவர முடியாது என்பதைப் (புறம். 122) புறப்பாடல் அறியமுடிகிறது. அந்தணர்கள், அறம் கூறும் அவையில் மன்னனுக்கு உறுதுணையாக இருந்து நீதி வழங்கினர் என்பதை ‘அறங்களத்தந்தனர் என்ற சொற்றொடரால் அறிய முடிகிறது. கண்ணகியின் சிலையினை கடவுள் மங்கலம் செய்யுங்கால் அந்தணனான மாடலன் மறை வேள்வி பற்றிய அறிவை மன்னன் செங்குட்டுவனுக்குப் புகட்டுகிறான். நிகழ்ச்சிகள் எல்லாம் அக்காலத்தே தமிழ் மக்கள் மத்தியிடல் ஆரியர்களின் நாகரீகம் செல்வாக்குப் பெற்றதையே நமக்கு உணர்த்துகின்றது.

மேலும் இளங்கோவடிகள் வருணப+மதம் பற்றிக் கூறும்போது பார்ப்பன ப+தத்தையே முதலில் வைக்கின்றோர் (சிலம்பு. 17.5). இந்த பார்ப்பன ப+தமே அரச ப+தம், வணிக ப+தம், வேளாண் ப+தம் முதல் ப+தங்களுக்குத் தலைவனாகத் திகழ்கின்றது. இவை இக்கால சமுதாயத்தில் அந்தணர்கள் மன்னர்களிலும் உயர்நது விளங்கிய நிலையினை சுட்டிக் காட்டுகிறது.

சங்ககாலம் மட்டுமின்றிப் பல்லவர்கள் காலத்திலும் பிராமணர்கள் மிகுந்த செல்வாக்கைப் பெற்றிரந்தனர். பல்லவர்கள் பிறப்பால் சத்திரியராகப் பிறந்து பிராமணர்களாக மாறினர் எனக் கல்வெட்டுக் குறிப்பிடப்படுகிறது. இரண்யகர்ப்பம் பிறந்தவனாக அறிவிக்கப்படுவது.

பல்லவ மன்னர்கள் பிராமணர்களைக் குடியேற்றம் செய்த சமஸ்கிருத மொழியைப் பரவச் செய்தனர். நான்கு வேதம், வேதாங்கங்கள் போன்ற கலைகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அக்கிரகாரத்தை ஏற்படுத்திக் கொடுத்தனர். கடிகை போன்ற கல்வி நிறுவனங்களையும் கட்டிக் கொடுத்தனர்.

பிரம்ம தேயமாகக் கொடுக்கப்பட்ட அனைத்து நிலங்களுக்கான செப்பேடுகளும் சமஸ்கிருத மொழியிலேயே அமைந்துள்ளன (காசாக்குடி, மயிதவோலு, ஹிரஹதஹல்லி, குணபதேயம்).

முழுவதும் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட 15 செப்பேடுகளும், சமஸ்கிருதமும், பிற்பகுதியில் தமிழும் கலந்து எழுதப்பட்ட 10 செப்பேடுகளும் கிடைத்திருக்கும் 27 பல்லவர் செப்பேடுகளில் 20 செப்பேடுகள் பிராமணர்களுக்கு நிலம் கொடுத்ததையே குறிப்பிடுகின்றன.

சமூகத்தில் ஓர் அங்கமாக விளங்கி வந்த பிராமணச் சமூகம் கி.பி.8-ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு மேலும் செல்வாக்குடையதாக மாறியது. கோயில்களின் எழுச்சியும் சமயத்தொடர்பான அரசுகளின் நடவடிக்கைகளும் பிராமணர்களின் குடியேற்றங்களைத் தீவிரப்படுத்தின.

பிரமதேயக் கொடைகள், காரணமாகப் பிராமணர்கள் தமது குடிசார்ந்த நலன்களைக் கவனிக்கவும், கோயில் நிர்வாகம் முதலியவற்றைக் கவனிக்கவும், தங்களுக்குள் பல உறுப்பினரைக் கொண்டுள்ள குழுவை அமைத்து ஆளுமை செய்தனர். இக்குழுவே காலப்போக்கில் சபை எனப்பட்டது..

வரகுண பாண்டியன் காலத்திடல் இந்த நிர்வாக அவை மகாசபை என்ற அழைக்கப்பட்டு அதிமல் முழுவதும் பார்ப்பனர்களே இருந்தனர் எனத் தெரிகிறது.

கோயில்களில் உள்ள பாடசாலைகளில் வேதாந்தம், வியாகரணம், பா~;யம்… போன்ற துறைகளுக்காகத் தனித்தனி அறக்கட்டளைகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. (நீலகண்ட சாஸ்திரியார் 1989, 680).

இரண்டாம் இராஜராஜன் சமஸ்கிருதப் பேரகராதி ஒன்றை உருவாக்கும்படி கோஸஸ்ஸவாமிக்குக் கட்டளையிட்டார் என்ற செய்தியும் கிடைக்கிறது.

விசயநகர அரசம் பிராமணர்களுக்குக் கொடைகளை வாரி வழங்கினர். அச்சுதராயர் பிராமணர்களைக் குபேரர்களாக்கினார் என்று கல்வெட்டுச் சாசனனங்கள் காட்டுகின்றன.

நாயக்கர் காலத்தில் வேதியர் குடியிருப்புகள் விரிவடைந்தன. கமதஸ்கிருதம் பயிற்று மொழியாகவும் பிராமணர் ஆசிரியர்களாகவும் விளங்கினர்.

மராட்டிய மன்னர்கள் தஞ்சையில் சர்வ வித்யாசாலா என்ற பெயரில் கல்வி நிலையத்தை அமைத்தனர். இக்கல்வி நிலையத்தின் வேதம், வியாகாரணம் ஆகியவற்றைப் பார்ப்பனர்களும், தருக்கம் சோதிடம், மராட்டி போன்றவற்றைச் சத்திரியரும் பயின்றனர்.

சங்ககாலம் தொடங்கி மராட்டியர் காலம் வரை பிராமணர்களுக்கு இருந்த செல்வாக்கை மேலே கூறிய செய்திகள் நமக்குத் தெரிவிக்கின்றன. இந்தச் செல்வாக்கு பண்பாட்டுக் கலப்பாக மாறிய நிலையை இனிக் காணலாம்.

தொல்காப்பியப் பொருளாதிகாரம் அந்தணர்களின் தொழில்களுள் வேள்வி வேட்டல், வேட்பித்தலைக் குறிப்பிடுகிறது. அதன் வளர்ச்சியான வேள்வி வேட்டலைத் தமிழர் ஏற்றுக் கொண்டதைப் புறநானூற்றின் நெட்டிமையார் பாடிய பாடல் தெரிவிக்கிறது (புறம். 1517) இதனால் இவன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி எனப் பெயர் பெற்றான்.

தூது போகும் வாயில்களில் பார்ப்பனரும் சேர்க்கப்பட்டுள்ளனர் “பார்ப்பன மகனே” என்ற குறுந்தொகை 15 ஆம் பாடல் பார்ப்பனகளின் உருவ வருணனையோடு தலைவி கூறுவதாக அமைந்துள்ளது.

விருந்தினர்க்கு உபசாரம் செய்து அன்னம் அளிப்பது மனு~;யக்ளும் தருமம். இதனை வள்ளுவர்,

‘தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தார் ஓம்பல் தலை’ (குறள்.43)
என்று பஞ்ச மகா யக்ஞங்களைக் குறிப்பிடுகிறார்.

வேதத்தில் உள்ள கருத்துகள் அன்றாட வாழ்க்கையில் பின்னிப் பிணைந்தன. கணவன் இறந்தவுடன் உடன்கட்டை ஏறும் பெண் அருந்ததிக்குச் சமம் என்றும், அப்படி உடன்கட்டை ஏறாமல் வாழ நினைக்கும் பெண் மீண்டும் பெண்ணாகவே பிறந்து வதைபடுவாள் என்றும் நம்பிக்கைகள் உருவாயின.

இறைவழிபாடு மற்றும் மதச்சடங்குகள், திருமணச்சடங்குகள் போன்றவற்றிற்குச் சமஸ்கிருதப் பெயரையே சுட்டினர். விவாஹம் கர்ணப+ர்~ணம், கிரஹப்பிரவேசம், பு~ட்பவதியாதல், கன்னிகாதானம் முதலான சொற்கள் வாழ்க்கைச் சடங்குகளில் நுழைந்தன.

சைவ, வைணவ சமயச் சான்றோர்கள் தமிழையும் வடமொழியையும் உறவு மொழிகளாகவே கொண்டனர்.
‘ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்’ (தேவ.திரு.நா.)
என்று திருநாவுக்கரசரும்,
‘அருந்தமிழ் இன்பப் பாவினை அவ்வடமொழியை’ (பெரிய. 70)
என்று குலசேகர ஆழ்வாரும் இறைவனைப் பாடுகின்றனர்.

தத்துவங்களிலும், சிந்தனைகளிலும் ஈடுபட்ட மக்கள் அது பேசப்பட்ட சமஸ்கிரத மொழியுடன் தன்னை இணைத்துக் கொண்டனர்.

மேலும் மருத்துவ நூல்களில் காணப்படும் சொற்களில் 75 விழுக்காடு நோய்ப் பெயர்கள், மருத்துப் பெயர்கள், பொருட்பெயர்கள் அனைத்தும் சமஸ்கிருதச் சொற்களாகவே விளங்குகின்றன.
சௌந்தர்யம் – வெள்ளாம்பல்
ப்ருந்தா – துளசி
ரத்தபு~;பி – செம்பருத்தி
ஒளசதம் – அவிழ்தம்
லேஹியம் – இளக்கம்
க~hயம் – குடிநீர்
திரு~;டி – கண்ணேறு
ஆஜீரணம் – செரியாமை
குட்;டம் – தொழுநோய்
நவநீதம் – வெண்ணெய்
ப்ரவளம் – பவழம்
போன்ற சொற்களைச் சான்றுகளாகக் கூறலாம்.

அரசியலிலும், பண்பாட்டிலும் செல்வாக்கடைந்த சமஸ்கிருத மொழி அந்தந்த காலகட்ட இலக்கிய, இலக்கிணங்களிலும் தன்னுடைய பங்களிப்பை அதிகரித்தது. சில இலக்கிய இலக்கணங்கள் புற வடிவத்திலும் சில இலக்கிய இலக்கணங்கள் அக நிலையிலும் தமிழ் மொழி மரபை விடுத்து சமஸ்கிருத மொழியினுடைய இலக்கிய இலக்கணங்களைப் பின்பற்றியுள்ளதற்குச் சமூகப் பின்புலமும் காரணமாக உள்ளது என்பதை அறியமுடிகிறது.

சமஸ்கிருதத் தொன்மக்கதைகள் சங்க இலக்கியங்களில் இடம்பெறத் தொடங்கின.
திரிவிக்கிரம அவதாரம் (முல்லை, 1-3) கர்ணன் கதிரவன் மைந்தன் எனல் (கலி 25:1-4) இராவணன் சீதையைக் கவர்தல் (புறம் 378:18-21) சிவன் முப்புரம் எரித்தல் (திரு.மு.154) அகலிகையை இந்திரன் வஞ்சித்தது (பரி 19:50-52) முதலான பல தொன்ம நிகழ்வுகள் உவமைகளாகவும், விளக்கங்களாகவும் உள்ளன. சங்க காலத்தைத் தொடர்ந்து பதினென்கீழ்க்கணக்கு, சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற நூல்களில் நூற்றுக்கு நான்கு, ஐந்து என்னும் விழுக்காட்டளவில் பெருகின. மேலும் மெய்யியன் கருத்து விளக்கத்திற்கு வடமொழிச் சொற்களே கையாளப்பட்டன. பக்தி இலக்கியங்களுக்கு உரை எழுந்த காலத்தில் மணிப்ப……… நடை வழக்கிற்கு வந்தது. (திருப்புகழ் – கி.பி.உரைகள்) வடமொழியின் ஆதிக்கத்தையும் கலப்பையும் களைந்து தமிழின் தனித்தன்மையை நிலைநிறுத்தும் முயற்சி தமிழ்ச் சமுதாயத்தில் தொல்காப்பியர் காலத்திலிருந்தே போற்றப்பட்டுள்ளது. இருப்பினும் அதன்பின் ஏற்பட்ட மொழிக்கலப்பு தமிழின் தனித்தன்மையைப் பழிக்கும் அளவிற்கு மிகுதியாயிற்று. இலக்கியக் கூறுகளும் தமிழ் இலக்கியத்தில் மாற்றம் பெற்றன. சமஸ்கிருத இலக்கியம் மகாகாவ்யம், கண்ட காவ்யம் என்பன பெருங்காப்பியம், சிறுகாப்பியம் எனப் பகுக்கப்பட்டுள்ளன. சிற்றிலக்கியங்களாக தூது, அந்தாதி, கலம்பகம் போன்ற இலக்கிய வகைகளும் கிளைக்க ஆரம்பித்தன.
ஒரு மொழியின் அடிப்படைக் கட்டமைப்பான ஒன்றாகத்தான் இருக்கமுடியும். ஆனால் அவற்றை புரிந்துகொள்வதில் பல அலகு முறைகள் தேவைப்படுகின்றன. மனிதனின் சிந்தனை வளர்ச்சியால் காலம் காலமாக இலக்கண மரபினும் பல மாறுபாடுகள் ஏற்பட்டு பல மரபுகள் கிளைக்க ஆரம்பித்தன. இந்நிலையில் தமிழில் இருவேறு இக்கணப் போக்குகள் நடைமுறையில் அறிமுகமாயின. இப்போக்குகளின் அடிப்படையில் தமிழ் மரபிலக்கணங்களை இருபெரும் பிரிவுகளாகப் பிரித்துக் காட்டுவர். இலக்கண வரலாற்றறிஞர்கள் ஒன்று, தமிழ் வழக்கையும் செய்யுளையும் பிரதியாகக் கொண்டவை. இரண்டாவது பிரிவு இவற்றோடு சமஸ்கிருத வழக்கையும் சொற்களையும் பிரதியாகக் கொண்டவை.

தொல்காப்பியம், நேமிநாதம், நன்னூல், இலக்கணவிளக்கம், தொன்னூல் விளக்கம், முத்து வீரியம் போன்றவை முதல் பிரிவில் அடங்கும். இவை பிரித்துச் சொன்னதைச் சுருக்கியும் தொகுத்தும், தொகுத்துச் செய்ததை விரித்தும் வழிநூல் தகுதியைப் பெறுகின்றன.

வீரசோழியம், பிரயோகவிவேகம், இலக்கணக் கொத்து இரண்டாவது பிரிவில் அடங்குவன. மரபுநிலையில் திரிந்தவை. முந்திய மரபோடு மாறுகொண்டவை.

இரண்டாம் பிரிவில் இடம்பெறும் வீரசோழியம், பிரயோகவிவேகம், இலக்கணக் கொத்து போன்ற நூல்களின் கோட்பாடு யாது?. இந்த மரபு மாற்றம் என்பது சாதாரணமாக நிகழக் கூடியதன்று என்பதை நிருவுவதற்கு சமூக அரசியல் பொருளாதார நிலைகளில் சமஸ்கிருத மொழியின் இடங்களை மேலே கண்டோம். இந்த புறக்காரணிகளால் விளைந்த இலக்கணங்கள்தான் வீரசோழியம், பிரயோக விவேகம், இலக்கணக் கொத்துஆகும். இனி கோட்பாட்டு ரீதியில் இம்மூன்று இலக்கண உருவாக்கிற்கான தேவையாது என்பதைக் கண்டறிவோம்.

இலக்கணவியல் கோட்பாடு மொழி மெய்மைகளை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்படும் ஓர் அமைப்பொருங்காக்கம். மேலும், இலக்கண உருவாக்கபடிமுறையை மையமாகக் கொண்டது. நமது புரிதல்கள் பகுப்பாய்வுக்கு உட்பட்டு, அவற்றின் சிறப்புக் கூறுகள் விதியாக்கத்திற்கு உள்ளாகி விதிகளாக நூலாக்கம் பெறும்வரைக்குமான உருவாக்க நடைமுறைகளை இலக்கணவியல் கோட்பாட்டுச் சிந்தனை என்று கூறலாம். “கோட்பாட்டாக்கம் மிகச் சமீப காலச்சிந்தனை. இலக்கண மரபையொட்டிய திறனாய்வு முறையை மீறிய தீவிர கட்டுடைப்பை இலக்கணவியல் கோட்பாடு எனலாம்”. எ;ன்கிறார். (சு.இராசாராம்) கருத்தியல் ஒவ்வொரு காலகட்டத்தில் புதிய சிந்தனைகளுக்கும் விமர்சனங்களுக்கும் உள்ளாகும்போது புதிய கோட்பாடுகள் தோன்றிக் கோட்பாட்டு வளர்ச்சி மேம்படுகிறது.
இவ்விலக்கணச் சிந்தனை மரபில் கச்சாயனரின் பாலி இலக்கணத்துக்கும் வீர சோழியத்துக்கும் இடையே காணப்படும் ஒற்றுமையை அடிப்படையாகக் கொண்டு, தொல்காப்பியம், காதந்திரம், கச்சாயனம், வீரசோழியம் என ஐந்திர இலக்கண மரபை இன்னும் விரிக்கலாம். இவற்றுள் தொல்காப்பியம் காதந்திரத்தைப் போல ஐந்திர இலக்கணம் சிந்தனையை பின்பற்றிய போதிலும் தமிழ்மொழியமைப்பிலிருந்து வழுவாமல் மரபைக் காத்துள்ளது. வீரசோழியம், ஐந்திர இலக்கணம் சிந்தனையைக் கச்சாயனர் வழி ஏற்று, வடமொழி மரபில் தமிழ் இலக்கண அமைப்பைத் தந்துள்ளது. தொல்காப்பியத்திற்கும் வீரசோழியத்துக்கும் இடையே காணப்படும் இவ்வேறுபாட்டுக்கு இவ்விரு இலக்கணங்களின் நோக்கம் வௌ;வேறாக இருந்தது முக்கியக்காரணம்.
வடமொழி இலக்கணச் சார்பொன்றை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு “வீரசோழியத்தார் வழி’ யெனப் பிற்காலத் தமிழ் இலக்கண அறிஞர் வீரசோழியத்துக்குத் தனி மரபு அந்தஸ்து வழங்கியது. மிக மேலோட்டமான தீர்ப்பு அத்துடன் அம்மரபின் கால நீட்சியைக் கி.பி.பதினேழாம் நூற்றாண்டு வரை நீட்டித்துப் பிரயோக விவேகத்தையும், இலக்கணச் கொத்தையும் அம்மரபு சார்ந்த நூல்களாகக் காட்டுகிறது. இம்மேலோட்டமான தீர்;ப்பினால் விளைந்த குற்றமாகும் என்கிறார் இராசாராம்.
வீரசோழிய இலக்கணத்தின் நோக்கம் வேறு. பிரயோக விவேகம் மற்றும் இலக்கணக் கொத்துவின் நோக்கம் வேறு. பிரயோக விவேகம் மற்றோர் இலக்கண மரபின் முகநூல். இம்மரபு சார்ந்த மற்றொரு இலக்கணநூல் இலக்கணக்; கொத்து.

பிரயோக விவேகம் :
வீரசோழியத்தை அடுத்தும் சமஸ்கிருதச் சார்போடு தோன்றிய இரண்டாவது நூல் பிரயோக விவேகம் ஆகும். தமிழுக்கும் வடமொழிக்கும் இலக்கணம் ஒன்றே என்றும் தம் கருதுகோளை நிறுவுவதை அவர் நோக்கமாகக் கொண்டிருந்தார் எனக் கருத இடமளிக்கிறது. தமிழ் இலக்கண மரபில் முந்நூல் வழி நூல் தொடர்பிற்கு உட்படாமல் எழுதப்பட்ட இலக்கணம் பிரயோக விவேகம்.

எந்தவொரு மொழியின் இலக்கணமும் மற்றொரு மொழியை அழிப்பதற்காக எழுதப்படுவதில்லை. இலக்கண உருவாக்கம் சில சமூக மொழித் தேவைகளையொட்டிய செயல்பாடு. அத்தேவைகள் ஏழு குறிப்பிட்ட காலகட்டத்தின் மொழிப்பயன்பாட்டைச் சார்ந்த பிரச்சனைகளின் வெளிப்பாடு என்பதை அறிவியல் பூர்வமாக ஏற்றுக்கொள்வோமேயானால் பிரயோக விவேகம் போன்ற இலக்கணங்களின் முக்கியத்துவத்தை உணரமுடியும் என்பர் இராசாராம்.

தமிழ் இலக்கண மரபில் வடமொழிக்கு இலக்கணம் கூறியதன் மூலமாக ஒரு புதிய சிந்தனைத் தனத்தைப் பிரயோக விவேகம் அமைத்துத் தந்துள்ளது. இந்நூல் அதிகாரப் பகுப்பை மறுத்துக் காரகபடலம், சமரசப்படலம், தத்திதபடலம், திங்ஙப்படலம் என வடமொழி மரபைப் பின்பற்றுகிறது. வடமொழி எழுத்துகள் 51 ஆகையால் 51 காரிகைகளை இயற்றியுள்ளார்.

வடநூலார் தாமே பதிகமும் உரையும் செய்தார். இந்நூலும் வடநூலைத் தற்பவமாகச் செய்தலான், யாமும் பதிகமும் உரையும் செய்து உதாரணமும் காட்டினாம், தண்டியாசிரியர் மூலோதாரணம் காட்டினாற் போல யாரும் உரையெழுதியல்லது மூலோதாரணம் காட்டினோம் என்னும் இலக்கண உருவாக்க நிலைபாட்டை மேற்கொள்கிறார். வடமொழி வியாகரண மரபில் சொல்லிலக்கணமே பரவலாகக் கூறப்படுவதால் அம்மரபையொட்டின் சொல்லிலக்கணம் கூறுவதும், வீரசோழியர், காரகப் படலம், சமரசப் படலம் என ஏற்று மிகுத்துக் கூறுவதற்கு மாறாகக் காரகபடலம் சமரச படலம், தத்தித படலம் என ஒற்றுமிகர உறுவகடம் தீக்கிதரின் கூடுதல் வடமொழிச் சார்பைக் காட்டுகிறது.
மேலும் தமிழுக்கும் வடமொழிக்கும் இலக்கணம் ஒன்றே எண்ணம் தம் கருதுகோளை நிறுவுவது அவரது நோக்கம். எனவே, தமிழுக்கும் வடமொழிக்கும் பொதுவான பகுதிகளைத் தமிழ் இலக்கண அடிப்படையில் வரையறுத்துக் கொள்ள வேண்டியது. நூல் உருவாக்கம் வற்புறுத்திய கட்டாயமாகும். இப்பகுதியை தாமே உரை செய்வதின் மூலம் தீக்கதிர் முழுமைப்படுத்துகிறார். வடமொழி தமிழ் ஒப்பீட்டின் போது வடமொழி இலக்கணம் கூறுவதற்கு நேரும் இடங்களில் உரைச் சூத்திரங்களால் நிறைவு செய்யும் உத்தியைத் தீக்கிதர் கையாளுகிறார்.
பிற தமிழ் இலக்கணங்களோடு ஒப்பிடும்போது, இலக்கணம் கூறத் தெரிவு செய்து கொண்ட மொழியாலும், நோக்கத்தாலும், அக அமைப்பாலும் பிரயோக விவேகம் தனித்து நிற்கிறது. தனியொரு மரபாக அடையாளப்படுத்திக் கொள்வதற்கான வரலாற்றுப் பின்னணியும் மொழிச் சூழலையும் பிரயோக விவேகத்திற்கு இருந்தன.

இலக்கணக் கொத்து :
இலக்கணக் கொத்து எண்ணம் நூலை இயற்றிவர் சுவாமிநாத தேசிகர் ஆவார். தொல்காப்பியம் நன்னூல் முதலிய இலக்கண நூல்களிலிருந்தும், இலக்கண உரைகளில் இருந்தும் திரட்டப்பெற்ற அரிய கருத்துக்களின் தொகுப்பாக இந்நூல் அமைக்கப் பெற்றதால் இலக்கணக் கொத்து எனப் பெயர் வைக்கப்பெற்றது என்றும், இது தனி நூல் அன்று என்றும் பாயிரத்தில் குறிப்பிடப் பெற்றுள்ளது.
இலக்கணக் கொத்து பாயிரம் நீங்கலாக வேற்றுமையில் விளையியல், ஒழிபியல் என்று மூன்று இயல்களில் அமைந்திருப்பினும் பிரயோக விவேகத்தில் கூறப்பட்ட நான்கு படலங்களின் கருத்துக்களும் அவற்றில் காணப்படுகின்றன. பிரயோக விவேகத்தை விளங்கிக் கொள்வதற்கு இலக்கணக் கொத்து பெரிதும் பயன்படுகின்றன. பிரயோக விவேகம் வடமொழிக் கலைச் சொற்களைப் பயன்படுத்தி இலக்கண வகுத்தது. இலக்கணக் கொத்து அதனை மொழிபெயர்த்து தந்துள்ளது. பிரயோக விவேகத்தில் 10, 11, 12, 13, 17 முதலிய காரிகைகளிலும் உரைகளிலும் காணப்படும் கருத்துக்கள், இலக்கணக் கொத்து 15, 26, 27, 28, 31, 36, 40, 42 ஆகிய நூற்பாக்களில் காணப்படுவதால் பிரயோக விவேகத்தை அடியொற்றிய நூலாகக் கருதுவதற்கு இடமளிக்கிறது.
இம்மூன்று நூல்களும் தமிழ் இலக்கண மரபிலிருந்து விலகியுள்ளதை பின்வரும் அட்டவணை நமக்கு தெளிவுப்படுத்தும்.
வேற்றுமை :

தொல்காப்பியம் அட்டாத்p;யாயிp; வீரசோழியம் பிரயோக விவேகம் இலக்கணக் கொத்து
எழுவாய் வேற்றுமை ப்ரதமாகர்த்ருகாரகம் கருத்தா காரகம் கருத்தா காரகம் கருத்தா காரகம்
இரண்டாம் வேற்றுமை கர்ம காரகம் கர்ம காரகம் கர்ம காரகம் செயப்படு பொருட் வேற்றுமை
மூன்றாம் வேற்றுமை கரண காரகம் கரண காரகம் கரண காரகம் கருவி வேற்றுமை
நான்காம் வேற்றுமை ஸம்ப்தானம் கோளி வேற்றுமை சம்ப்ரதானம் கொள்வோன்
ஐந்தாம் வேற்றுமை அபாதானம் அவதிக்காரகம் அபாதானம் நீங்கல் வேற்றுமை
ஆறாம் வேற்றுமை ஸம்பந்தகாரகம் – ச~;டி குண வேற்றுமை
ஏழாம் வேற்றுமை அதிகரணம் ஆதாரக்காரகம் அதிகரணம் இடவேற்றுமை
விளி வேற்றுமை ஸம்போதனம் விளிவேற்றுமை ஸம்போதனம் விளி வேற்றுமை

நிறைவாக தமிழ் இலக்கண மரபில் சமஸ்கிருத இலக்கணத் தாக்கம் மேலோட்டமான வடிவ அமைப்பு மாற்றம் கருதியது அன்று. ஒரு மொழியின் ஆதிக்கத்தை ஒரு சமூகம் ஏற்றுக்கொண்ட நிலைப்பாட்டை அது உணர்த்தி நிற்கிறது என எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஏற்புடைமை அச்சமூக வற்புறுத்தலால் நிகழ்ந்தது என்றால் அச்சமூகத்தில் விளைந்து விட்ட மாற்றம் மற்றொரு இலக்கணக் கருத்தாக்கத்தை எதிர்நோக்குகிறது என்று பொருள். ஆக ஒரு மாறுபட்ட இலக்கணக் கருத்தாக் தேவையின் விளைவிகளே இவ்விலக்கணங்கள். எந்வொரு மற்றொரு மொழியை அழிப்பதற்காக எழுதப்படுவதில்லை. இலக்கண உருவாக்கம் சில சமூக மொழித் தேவைகளை ஒட்டிய செயல்பாடு, மொழிப் பயன்பாட்டைச் சார்ந்த பிரச்சனைகளின் வெளிப்பாடு என்பதை, அறிவியல் ப+ர்வமாக ஏற்றுக்கொள்வோ மேயானால் பிரயோக விவேகம் போன்ற இலக்கணங்களின் முக்கியத்துவத்தை நம்மால் உணரமுடியும். பிரயோக விவேகம் பாதகமாகக் காண என்ன சமூகச் சூழல்கள் உள்ளனவோ, உருவாவதற்கும் சாதமாணச் சூழல்கள் 17ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்திருக்க வேண்டும். தொல்காப்பியம் நன்னூல் கூறும் வடமொழியாக்கக் கருத்துகளில் தொடங்கி, அவற்றின் தொடர்ச்சியாக 1600 ஆண்டுகள் மறைவாக நமக்குள்ளே வளர்ந்து வந்துள்ள சமஸ்கிருத மொழிப்பயன்பாட்டிற்கு இலக்கணம் வடிவம் தந்த முயற்சி இவ்விலக்கணங்கள்; என்று கூறலாம்.

Series Navigationகவிஞர் வைதீஸ்வரனின் படைப்புலகம்உயிர்க்கவசம்
author

Similar Posts

Comments

  1. Avatar
    ஷாலி says:

    //மேலும் இளங்கோவடிகள் வருணப+மதம் பற்றிக் கூறும்போது பார்ப்பன ப+தத்தையே முதலில் வைக்கின்றோர் (சிலம்பு. 17.5). இந்த பார்ப்பன ப+தமே அரச ப+தம், வணிக ப+தம், வேளாண் ப+தம் முதல் ப+தங்களுக்குத் தலைவனாகத் திகழ்கின்றது.//

    “சிலப்பதிகாரம் எழுதப்பட்டபோது, அதிலே சமஸ்கிருதச் சொற்கள் கலப்பு இருப்பினும் அதிகளவில் இல்லை. அதற்குப் பிறகு எழுதப்பட்ட காவியங்களில் சமஸ்கிருதச் சொற்களின் பாவனை இருப்பதை நாங்கள் பார்க்கலாம். இருந்தாலும், பல சொற்கள் என்று சொல்வதற்கில்லை.

    ஒரு சுவையான விடயம் என்னவென்றால், மற்றைய இந்திய மொழிகள் சமஸ்கிருதத்திலிருந்து கடன் வாங்கி இருக்கின்றன. அப்படிக் கடன் வாங்கும்போது அந்த மொழியின் தரம் கூடும் குறையும். ஆனால், தமிழ் மொழி மட்டும் தான் சமஸ்கிருதத்துடன் சேரும் போது தரம் குறைகிறது. தமிழில் மட்டுமுள்ள வார்த்தைகளைக் கொண்டு நீங்கள் பேசும்போது, அது உயர்ந்து நிற்கிறது.

    நீங்கள் மலையாளம் போன்ற ஒரு மொழியைப் பார்த்தால், எழுதும்போது, அழகூட்டவேண்டுமென்று 90 சதவீதம் சமஸ்கிருத சொற்களைச் சேர்க்க வேண்டியிருக்கும். ஆனால் தமிழ் மொழி அப்படியில்லை. இந்த மாதிரியான அழகூட்டும் விடயம் தமிழுக்குத் தேவையில்லை, இந்திய மொழிகளில் தமிழுக்கு மட்டும் தான் இந்தப் பெருமை இருக்கிறது. இது ஒரு பெரும் செல்வாக்கைத் தமிழுக்குத் தருகிறது.

    ஒரு சங்க இலக்கியத்தை படிக்கும் போது, அதேபோன்ற வார்த்தைகள் அர்த்தங்கள் இப்பொழுது நாங்கள் பேசுகிற நவீன தமிழில் இருப்பது வியக்கவைக்கிறது. இரண்டாயிரம் வருடங்களாக அப்படி இருப்பது தமிழ் மொழிக்குண்டான மகத்தான சக்தி என்று தான் நான் நினைக்கிறேன். ”. -பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட்.

    (பேரா. ஜார்ஜ் ஹார்ட் 30 ஆண்டுகளாகத் தமிழின் தொன்மையையும், தமிழ்மொழி எவ்வளவு தூரம் வட மொழியில் ஊடுருவித் தனது கொடையை அளித்துள்ளது என்றும் ஆய்வேடுகளாகப் பல்கலைக் கழகங்களில் எழுதியுள்ளார்.இவ்வாண்டு தமிழுக்காக பத்மஸ்ரீ விருது இவருக்கு கொடுக்கப்பட்டது.)
    http://www.sbs.com.au/yourlanguage/tamil/ta/content/sanch_s122?language=ta

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *