தவம்

       

என் தெளிவான கேள்வி

ஒரு குழப்பமான சூழலில்

தத்தளிக்கிறது

சொற்கள்

சுழலும் மனத்தில்

என் கேள்விக்கான

உன் பதிலை ஏந்தி மகிழக்

காத்திருக்கிறேன்

அதிக மௌனத்தை

உருவாக்கி

மலையாய்க் குவித்து

வைத்திருக்கிறாய் நீ

தேடும்

என் கரங்களுக்கு அகப்படாமல்

ஓடி ஒளிந்துகொள்ள

உன்

சொற்களுக்குத் தெரிந்திருக்கிறது

உன் மௌனம் திறப்பதற்காக

என் தவம் நீள்கிறது …..

நீண்டுகொண்டே இருக்கிறது

           ————-

Series Navigationகிணற்றுத்தவளையாக இருக்காதே – அறிஞர் ந சி கந்தையா பிள்ளை‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்